உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள் -07

முனைவர். எஸ். அன்பரசு,  முதுகலை இயற்பியல் ஆசிரியர்.

வீன, தொழில் துறை சார்ந்த வேலை வாய்ப்புகளைத் தருவதில் வடிவமைப்புப் படிப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.  நீங்கள் ஆர்வமாக இருக்கும் துறைகளைப் பொறுத்து வடிவமைப்புப் படிப்புகளைத் தேர்வு செய்யலாம். நீங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஆர்வமாக இருந்தால் தொழில்துறை வடிவமைப்பு அல்லது வலைதள வடிவமைப்பு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். நீங்கள் படைப்பாற்றலில் சிறந்தவராக இருந்தால் கிராபிக் டிசைன் படிப்புகளைத் தேர்வு செய்யலாம். கலை மற்றும் கைவினைப் பொருள்களில் ஆர்வம் உள்ள மாணவர்கள் ஃபேஷன் டிசைனிங் சேரலாம். கணிதத்தில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கட்டடக்கலை வடிவமைப்பு மிகச்சிறந்த தேர்வாகும். உங்கள் திறமைக்கும் கற்பனைக்கும் ஏற்ப மதிப்புமிக்க வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

கட்டடக்கலை வடிவமைப்பு

கலை, அறிவியல், சமூகவியல் மற்றும் பொறியியல் ஆகியவற்றின் கலவையாக கட்டடக்கலை வடிவமைப்பு திகழ்கிறது. கட்டடங்களின் தோற்றம், பாதுகாப்பு, பயன்பாடு மற்றும் அழகியலை உறுதி செய்வதில் கட்டடக்கலை வடிவமைப்பு படிப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வீடுகள், பெரிய கட்டுமானங்கள், வர்த்தக மையங்கள், துணை நகரங்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் வடிவமைப்புக் கலைக்கான வேலை வாய்ப்புகள் ஏராளம்.

National Aptitude Test in Architecture (NATA) தேசியக் கட்டடக்கலை திறன் தேர்வு இந்தியாவில் உள்ள கட்டடக்கலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு NATA ஆகும் இத்தேர்வை இந்திய கட்டடக்கலை கவுன்சில் -COA
நடத்துகிறது. பகுதி A மற்றும் பகுதி B என இரண்டு பகுதிகளாக இத்தேர்வு
நடக்கிறது.

மதிப்பெண்கள் 200 : நேரம் : மூன்று மணி

பகுதி A : ஓவியம் மற்றும் காட்சிப்படுத்துதல் திறன் ஆகியவை மதிப்பிடப்படும்
பகுதி B: கட்டடக்கலை கொள்கைகள் மற்றும் பொதுமனப்பான்மை, கட்டட வடிவமைப்புகளின் அடிப்படை கூறுகள், கட்டுமானப் பொருட்கள், கட்டுமான முறைகள், அடிப்படைக் கணிதம், சுற்றுச்சூழல் சார்ந்த கட்டடக்கலை, இரு பரிமாண, முப்பரிமாண வரைபடங்கள் ஆகியவை உள்ளிட்ட இரண்டு மதிப்பெண், நான்கு மதிப்பெண் கொள்குறி வகை வினாக்கள் இப்பகுதியில் இடம்பெறும். JEE முதன்மை தேர்வு ஆகியவற்றின்  அடிப்படையில் B.Arch படிப்பை கல்வி நிறுவனங்களில் தேர்வு செய்யலாம்.

….மேலும் வாசிக்க ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.