ஆளப் பிறந்தோம் -19
திரு.இள.தினேஷ் பகத்
போட்டித் ேதர்வுகளில் வெற்றி பெறவேண்டும் என்றும், நம் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காணவேண்டும் என்றும் ஆசைகள் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் அதற்கான முயற்சிகளை எடுப்பதில்தான் நமக்குச் சிக்கல். எதைச் ெசய்தாலும் நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று நாம் இன்றைய நாளை இழந்துகொண்டு இருக்கிறோம்.
எனவே, இனி ஒரு கணமும் தாமதிக்காமல் உங்கள் இலக்கினை நோக்கி முதல் அடி எடுத்து வையுங்கள். எதிர்வருகிற நாட்களில் நடக்க இருக்கும் போட்டித் தேர்வுகளை எதிர்நோக்கி உங்களது தயாரிப்புகளை விரைவுபடுத்துங்கள். கடந்த கால தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். வெற்றியின் கதவு உங்களின் விழிக் கூர்மை கண்டு தானாய் திறக்கும்.
என் இனிய சகோதர, சகோதரிகளுக்கு,
வணக்கம். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த TNPSC Group-2 தேர்வுக்கான அறிவிப்பு வரப்பெற்றுள்ளது. இந்தத் தேர்வில் வெற்றி ெபற்று அரசுப் பணிகளில் அமர வாழ்த்துகிறேன்.
நீண்ட காலமாகப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டே ஒரு சில மாணவர்கள் இருப்பதை வகுப்புகளில் (ம) நூலகங்களில் பார்க்க நேர்கிறது. எந்தவொரு தேர்வாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட சில நாட்கள் தயாரிப்பே போதுமானது ஆகும். அவர்களுக்கு நான் இறுதியாகக் கூற வருவது ஒன்றுதான். நாம் நினைத்தால் மட்டுமே நம்மால் போட்டித் தேர்வில் வெற்றி பெற முடியும். முதல் நம்முடைய பலம் என்ன? பலவீனம் என்ன? ஏன் நமக்கு இதுவரை வெற்றி கிட்டவில்லை போன்ற நம்முடைய நிறை/குறைகளை உணர்ந்து கொண்டாலே போதும், நமக்கு கிட்டத்தட்ட வெற்றி தான். நிறைகளை மேலும் மேலும் மெருகூட்டுங்கள். குறைகள் என்றாலே அதை குறைப்பது தான். இதைச் செய்தாலே நாம் போட்டித் தேர்வு மட்டுமல்ல, போட்டி மிகுந்த வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியும்.
தன்னம்பிக்கையின் உச்சகட்டமாக எதைச் சொல்லலாம்? எத்தகைய தொடர் தோல்விகள் வந்தாலும், தன்னுடைய இலக்கை நோக்கி அயராமல் பயணிப்பதுதான். ஏன் என்றால், தோல்வி கொடுக்கும் வேதனைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. அதைத் தாங்கிக்கொள்ள பெரிய மனோதிடம் ேவண்டும். அத்தகைய மனோதிடத்தைக் கொண்ட ஒருவரின் கதையைச் சொல்கிறேன் கேளுங்க…
பாகிஸ்தான் நாட்ல ஒரு பாரம்பரிய குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தை வளர்ந்து 18 வயது வந்ததும், அந்தப் பெண்ணுடைய விருப்பத்தைக் கேட்காமலே ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தனர் அவரது பெற்றோர். திருமணத்திற்குப் பிறகு வேண்டா வெறுப்பாகத்தான் அவளுடைய வாழ்க்கைப் போய்க்கொண்டு இருந்தது. ஒரு நாள் அந்தப் பெண் தன் கணவருடன் காரில் போய்க்கொண்டிருக்கும் போது அந்தப் பெண்ணின் கணவர் தூக்கக் கலக்கத்தில் காரை தவறாக ஓட்டி, பெரிய பள்ளத்தில் கார் விழும் நேரத்தில் கதவை திறந்து வெளியே குதித்து உயிர் பிழைத்துக் கொள்கிறார். ஆனால் இந்தப் பெண் காருக்குள்ளேயே சிக்கிக் கொள்கிறாள். காப்பாற்றவே முடியாத சூழ்நிலையில் இருந்து அந்தப் பெண்ணின் உயிரை மட்டும் காப்பாற்றினார்கள்.
முதல் நாள் மயக்கத்தில் இருந்த அவள் கண்விழித்துப் பார்த்த போது உங்கள் இரண்டு கைகளும் உடைந்துவிட்டது; இனிமேல் உங்களுக்குப் பிடித்த ஓவியம் வரையும் பணியைச் செய்ய முடியாது என்றனர். அடுத்த முறை வந்த போது உங்கள் இரண்டு கால்களும் உடைந்துவிட்டது; உங்களால் இனிமேல் நடக்கவும் முடியாது; Wheel Chair தான் பயன்படுத்த வேண்டும் என்றனர். மீண்டும் ஒருமுறை வந்து உங்களுடைய முதுகெலும்பும், இடுப்பு எலும்புகளும் உடைந்துவிட்டதால் இனி எப்போதும் ஒரு குழந்தைக்குத் தாயாக முடியாது என்று சொன்னார்கள்.
.….மேலும் வாசிக்க ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.