வெற்றியோடு விளையாடு!  – 20

டாக்டர். ஆதலையூர் சூரியகுமார்

சில வருடங்களுக்கு முன்பெல்லாம் வகுப்பறையில் தமிழ் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது ‘‘நான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணவன்’’ ‘‘நான் உ.வே.சாமிநாத ஐயரின் மாணவரின் மாணவன், நான்
திரு.வி.க.‌வின் சீடன்’’ என்ற குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். இப்போதெல்லாம் அப்படிப் பட்ட குரல்கள் கேட்பதில்லை. அப்படிப்பட்ட தமிழறிஞர்கள் வகுப்பறையில் இல்லையோ என்ற ஏக்கம் தமிழகத்தில் இருக்கும் பொழுது அந்தக் குறையைத் தீர்க்கும் விதமாக இங்குமங்குமாக சில குரல்கள் ஒலிக்கிறது. அப்படிப்பட்ட தமிழ் ஆசான்களின் குரல்களில் ஒன்றுதான் கவிஞர் ஆழ்வைக் கண்ணன், அவர்களின் குரல். திருப்பூர், பெருமாநல்லூர்,  விக்னேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் தமிழாசிரியர்.

மாணவர்களுக்குப் பல புதுமைகளைப் புகுத்தி தமிழ் கற்றுத் தருகிறார்.
பத்தாம் வகுப்பு +1, +2 – ெபொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ‘தமிழ் வாகை மாலை யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல், மாணவர்கள் மத்தியில் கவிதைப் போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவற்றை சுய விருப்பத்தின் பேரில் நடத்தி வருகிறார். எழுதுவது, படிப்பது, வாசிப்பது என்பதை மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டிருக்கும் இந்த நாளில் வாசிப்பு இயக்கத்திற்காக அதிக முக்கியத்துவம் கொடுத்து தினசரி செய்தித்தாள்களை படிக்க வைப்பதைக் கடமையாகவே கொண்டு செயல்படுகிறார் ஆழ்வைக் கண்ணன். செய்தித்தாள்களைப் படிக்கும் மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகரும்போது அவர்களுக்கு இலக்கியங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறார்.  புதுக்கவிதைகள் முடித்த பிறகு, சிறுகதைகள், பிறகு மரபுக் கவிதைகள் என்று படிப்படியாக மாணவர்கள் மனதில் தமிழ் இலக்கியத்தைக் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியைச் செய்து வருகிறார்.

….மேலும் வாசிக்க ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.