உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள் -03

முனைவர். எஸ். அன்பரசு

“உழவினார் கைமடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை”

உழவரின் கை உழாது மடங்கினால் உணவைத் துறந்த துறவர்க்கும் வாழ்வு இல்லை என்கிறார் வள்ளுவர். வேளாண்மை உருவான காலத்தில் இருந்து தான் உலகத்தில் நாகரீகம் உருவானதாக நம்பப்படுகிறது. பாரத ரத்னா எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள் வேளாண்மைப் படிப்புகளின் மூலம் நாட்டின் வளர்ச்சியிலும் உணவு உற்பத்தியிலும் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்பதை சாதித்துக் காட்டியுள்ளார். தொழில்நுட்பத்தை உருவாக்கி அவற்றை விவசாயத்தில் புகுத்தவும்,  வேளாண்மையை லாபம் தரும் தொழிலாக மாற்றி தேசத்தின் வளர்ச்சியில் பங்கேற்கவும் இளைஞர்களுக்கு வேளாண் படிப்புகள் வழிகாட்டுகின்றன. வேறெந்தத் துறைகளை விடவும் வேளாண்மையில் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

இந்தியாவில் மூன்று மத்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன

  1. Central Agriculture University, Imphal
  2. Dr.Rajendra Prasad Central Agriculture University, Samastipur
  3. Rani Lakshmibai Central Agricultural University, Jhansi.

இவை ICAR எனப்படும் Indian Council of Agricultural Research, Krishi Bhavan, Dr. Rajendra Prasad Road, New Delhi என்றமுகவரியில் இயங்கும் அமைப்பின் மூலம் நிர்வாகிக்கப்படுகின்றன. https://www.icar.org.in//. இந்தியாவில் ஜனவரி 2021 நிலவரப்படி மூன்று மத்திய பல்கலைக்கழகங்கள் தவிர 4 நிகர் நிலை பல்கலைக்கழகங்களும் 63 மாநில வேளாண்மை பல்கலைக்கழகங்களும் வேளாண்மை படிப்புகளைக் கற்பிக்கின்றன. 2022-23 ICAR அகில இந்திய ஒதுக்கீட்டில் இளங்கலை வேளாண்மை படிப்புகளுக்கு 4285 இடங்கள் உள்ளன.

NTA – National Testing Agency மூலம், CUET எனப்படும் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வின் மூலம் இந்தியாவில் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு இளங்கலை படிப்புகளில் சேரலாம். ICAR AIEEEA,  மாநில முன்னுரிமை மற்றும் சுயநிதிப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இளங்கலை வேளாண்மைப் பட்டப்படிப்பில் உள்ள பிரிவுகள்…..

B.Sc., (Hons) Agriculture

  1. Genetics and plant Breeding
  2. Plant Pathology
  3. Soil science and Agricultural Chemistry.
  4. Entomology
  5. Agronomy
  6. Agricultural Economics
  7. Agriculture – extension
  8. Horticulture
  9. Genetics and Plant breeding

பல்வேறு மாநிலப் பல்கலைக்கழகங்களில் வேளாண்மை, கால்நடை, பால்வளம், மீன்வளம் ஆகிய பாடப்பிரிவுகள் ஒரே பல்கலைக்கழகத்தால் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் இவ்வகை இளங்கலைப் படிப்புகளுக்கு மூன்று தனித் தனி பல்கலைக்கழகங்கள் உண்டு.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் 

மாநிலம் முழுவதும் 11 வளாகங்கள், 14 வேளாண் கல்லூரிகள், விவசாய வளர்ச்சிக்கான 36 ஆராய்ச்சி மையங்கள், 14 விவசாய அறிவியல் பண்ணைகள் ஆகியவை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகின்றன. இவற்றில் 13 இளங்கலைப் பாட பிரிவுகள், 40 முதுகலை பாடப் பிரிவுகள் மற்றும் 26 முனைவர் பட்ட ஆய்வு பிரிவுகள் உள்ளன. 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியல், உயிரியல் அல்லது விலங்கியல் பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 80 சதவீதம் பாடப்பிரிவு இடங்களுக்கு மாநில பிரிவு ஒதுக்கீட்டில் நுழைவுத்
தேர்வு எதுவும் கிடையாது. 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில் பாடப்பிரிவுகள் நிரப்பப்படுகின்றன.

இளநிலை பாடப்பிரிவுகள்

  1. B.Sc., (Hons) Agriculture
  2. B.Sc. (Hons) Horticulture
  3. B.Sc., (Hons) Forestry
  4. B.Sc , (Hons) Food, Nutrition and Diabetics
  5. B.Sc., (Hons) Sericulture
  6. B.Tech – Agricultural Engineering
  7. B.Tech – Food Technology
  8. B.Tech – Bio Technology
  9. B Tech – Energy and Environmental
    Engineering
  10. B.S Agri Business Management

வேளாண்மைப் பட்டம் பெற்றவர்களுக்கு அரசுத் துறைகளிலும், வங்கிகளிலும், தனியார் வேளாண் நிறுவனங்களிலும், உர நிறுவனங்களிலும், வேளாண் கருவி தயாரிப்பு நிறுவனங்களிலும் உயரிய பதவிகள் கிடைக்கும். மேலும் வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளன. வனவியல் படித்த மாணவர்கள் Indian Forest service தேர்வு எழுதலாம். வேளாண்மைப் பாடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிற குரூப் 1 தேர்வுகளுக்கு பல மாணவர்களின் விருப்பத் தேர்வாக உள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 1. B.V.Sc. & A.H. – Bachelor of Veterinary Science and Animal
Husbandry (ஆறு மாத பயிற்சியை உள்ளடக்கிய ஐந்தரை ஆண்டு கால படிப்பு)
மேலும் நான்காண்டு படிப்புகளாக

  1. B.Tech.,- Food Technology
  2. B.Tech., Diary Technology
  3. B.Tech- Poultry Production Technology

ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.
 தமிழகத்தில் 9 கால்நடை மருத்துவ பல்கலைக்கழக கல்லூரிகள் உள்ளன.  அவை

  1. Madras Veterinary College, Chennai
  2. Veterinary College and Research Institute, Namakkal
  3. Veterinary College and Research Institute, Tirunelveli
  4. Veterinary College and Research Institute, Orathanadu
  5. Veterinary College and Research Institute, Salem
  6. Veterinary College and Research Institute, Theni.
  7. College of Food and dairy Technology
  8. College of Poultry Production and Man agement
  9. Post Graduate Research Institute in animal sciences, Kattupakkam.

கால்நடை மருத்துவமனை மருத்துவர், கால்நடைப் பண்ணைகள் மற்றும் கோழிப் பண்ணைகள், கால்நடை தீவனங்கள் ஆகிய தயாரிப்பு நிலையங்கள், பால் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றில் வேலை வாய்ப்புகள் நிரம்பி உள்ளன.

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்

மீன்வளப் படிப்புகளுக்காக 2012 ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு மீன் வள பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் பாடப்பிரிவுகள் படித்தவர்கள் B.Sc., பாடப்பிரிவிலும், கணிதப் பாடம் படித்தவர்கள் B.Tech. படிப்பிலும் சேரலாம்.

மீன் வளத்துறை
இளநிலைப் பட்டப் படிப்புகள்

  1. B.F.Sc., – Bachelor of Fisheries Science
  2. B.Tech , – Fisheries Engineering
  3. B.Tech., – Food Technology
  4. B.Tech., – Energy and Environmental Engineering
  5. B.B.A ., – Fisheries Business Management
  6. B.Voc ., – Aquaculture
  7. B.Voc., – Industrial Fish Processing Technology
  8. B.Voc., – Industrial Fishing Technology
  9. B.Voc., – Aquatic Animal Health Management.

மத்திய, மாநில அரசுகளின் மின்வளத்துறை, மீன் ஏற்றுமதி நிறுவனங்கள், மீன் பதனிடும் நிறுவனங்கள், இறால் பண்ணைகள், மீன் உணவு தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றில் தனியார் நிறுவனங்களிலும் அரசு துறைகளிலும் வேலை வாய்ப்புகள் பெறலாம்.=