ஆளப் பிறந்தோம்

திரு.இள.தினேஷ் பகத்

டந்த காலத்தை உன்னால் மாற்றவே முடியாது; ஆனால் உன் எதிர்காலத்தை நிச்சயம் மாற்ற முடியும்!’’

‘‘நம்பிக்கை வறட்சி உள்ளவன் ரோஜாச் செடியில் முட்களையே பார்க்கிறான் மலரை அல்ல!
நம்பிக்கை வாதி மலரையே பார்க்கிறான் முட்களை அல்ல!’’

– இது லெபனான் நாட்டுக் கவிஞர் கலீல் ஜிப்ரானின் கவிதை வரிகள்.

போட்டித் தேர்வில் நம்மால் வெற்றி பெற முடியுமா? என ஒரு கணம் கூட நினைத்து பார்க்காதீர்கள். நிச்சயம் உங்களால் முடியும். நீங்கள் வெற்றி பெற்றதாகக் கற்பனை செய்து பாருங்கள். உங்களின் தாய், தந்தையர் எவ்வளவு ஆனந்தம் அடைவார்கள் என்பதை ஒத்திகை பாருங்கள். போட்டித் தேர்வுகளில் வென்று மகுடம் சூடுங்கள்.

உங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை குறையும் போெதல்லாம் நிக் வ்யூஜெஸிக்கின் இந்த தன்னம்பிக்கை வரிகளைப் படித்துப் பாருங்கள் :

‘‘ஏதாவது ஓர் அதிசயம் நிகழ்ந்து உன் துன்பமான வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் என காத்திருக்கிறாயா…

எந்த அதிசயமும் இதுவரை நிகழவில்லையா எனில், நீயே அந்த அதிசயமாக மாறிவிடு’’ என்பதாகும்.

யார் இந்த நிக் வ்யூ ஜெஸிக்? என்று தெரிந்துகொள்ள ஆவலில் இருக்கிறீர்களா? வாருங்கள், அவரின் கதையைப் பார்ப்போம்.

1982ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஒரு மருத்துவமனையில் நிக் பிறந்திருந்தான். பிரசவ மயக்கம் தெளிந்த அவனது தாய் துஸிகா, குழந்தையைத் தேடினாள். நர்ஸ்கள் அவளிடம், விஷயத்தை தயக்கத்துடன் சொல்ல, கணவர் போஸுசும் கண்ணீருடன் நிற்க, பலமாக வெடித்து அழ ஆரம்பித்தாள் துஸிகா. நர்ஸ் ஒருவர், துணி சுற்றப்பட்ட குழந்ைதயை துஸிகாவின் அருகில் கொண்டுவந்து வைத்தார். குழந்தை அழுதது. துஸிகா கதறினாள்.

அந்த குழந்தைக்கு 2 கால்களும் (ம) 2 கைகளும் இல்லை. ஏதும் அறியாத வயது வரை நிக்குக்கு எதுவும் பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால் வயது ஆக, அவனை சமூகம் அப்படி இருக்கவிடவில்லை. விநோத ஜந்து போலப் பார்த்தார்கள்.

பல் துலக்குவது, குளிப்பது, உடை அணிவது, மற்றவர்கள் செய்யும் சாதாரண வேலைகளைக்கூட தன்னால் செய்ய இயலவில்லையே என நிக் மன அளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். பிறகு தன்னுடைய அடிப்படை தேவைகளைத் தானே செய்துகொண்டார். அவரின் மனஉளைச்சலுக்கு மருந்தாக இருந்தது, அவரின் புத்தக வாசிப்பு. உடல் குறைபாடுகளைப் புறம் தள்ளி சிகரம் தொட்ட முன்னோடிகளின் வாழ்க்கை புத்தகங்களைப் படிக்க தொடங்கினார்.

ஒருமுறை  அமெரிக்காவின் தன்னம்பிக்கை பேச்சாளர் ரெக்கி என்பவரின் மேடை பேச்சை நிக் கேட்கிறார். ரெக்கி ‘‘கடந்த காலத்தை உன்னால் மாற்றவே முடியாது; ஆனால் உன் எதிர்காலத்தை நிச்சயம் மாற்ற முடியும்’’ எனச் சொன்னது நிக்கின் மனதில் நிரந்தரமாகப் பதிந்தது.

வார இறுதிகளில் சர்ச்சுகளில் பிரசங்கம் செய்ய வாய்ப்பு அமைந்தது. ஆனால் தன்னை வெறும் மதபோதகராக அடையாளப்படுத்திக் கொள்ள நிக் விரும்பவில்லை. இன்று உலகின் மிக முக்கியமான தன்னம்பிக்கைப் பேச்சாளராக வலம் வருகிறார் நிக் வ்யூ ெஜஸிக்.

வாழ்வின் வெற்றிக்கு நிக் வ்யூ ஜெஸிக் கூறும் அறிவுரைகள்

  1. உங்கள் குறைகளைப் பயன்படுத்தி வாழாதீர்கள்; மாறாக, திறமைகளைப் பயன்படுத்தி வாழுங்கள்.
  2. மாற்றங்கள் மிக முக்கியமானவை; ஏனெனில் வாழ்க்கை எப்போதும் நாம் விரும்பும்படி அமையாது. சிலவேளை நம்மை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்.
  3. பயமே ஒருவனின் மிகப்பெரிய இயலாமை. அது அவனை பக்கவாதத்தைவிட மோசமாக முடக்கிவிடும்.
  4. இறந்த கால வலிகளில் உங்கள் வாழ்க்கையைச் சிக்க வைக்காதீர்கள். அது உங்கள் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் இல்லாமல் செய்துவிடும்.
  5. உங்கள் வாழ்வில் எந்த அதிசயமும் நடக்கவில்லை எனில், இன்னொருவரது வாழ்வின் அதிசயமாக நீங்கள் மாறுங்கள்.

என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம்.

இந்த தொடரில் RBI (Reserve Bank of
India)-இல் Grade-B அதிகாரி தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.

RBI Grade “B” தரத்தில் 3 விதமான பதவிகளுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது.

  1. Grade B (General Officer)
  2. Grade B (DEPR Officer) (Department of Economic and Policy Research)
  3. Grade B (DSIM Officer) (Department of Statistics and Information Management)

கல்வித் தகுதி

  1. General Officer : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் (UG) இளங்கலை/அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  2. DEPR Officer : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் PG முதுகலைப் பட்டம் கீழ்க்கண்ட பிரிவுகளில் பெற்றிருக்க வேண்டும்.

Economics / Econometrics / Quantitative Economics / Integrated Economics course or PGDM / MBA Finance.

  1. DSIM Officer

அங்கீகரிக்கப்பட்ட கீழ்க்கண்ட பல்கலைக்கழகங்களில் டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும். Diploma in Statistics / Mathematical Statistics / Mathematical Economics / Econometrics / Statistics and Informatics from IIT-Khargpur / Applied Statistics and Informatics from IIT – Bombay, or a Master’s Diploma in Mathematics in the 1 year Post Grade Degree in Statistics.

வயது வரம்பு

பொதுப் பிரிவினர் (GT) 21 வயதிலிருந்து 30 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயது வரையிலும், பட்டியல் இனத்தோர் (ம) பழங்குடியினர் 35 வயது வரையிலும் இத்தேர்வினை எழுதலாம்.

தேர்வு முறை

RBI Grade B Officer தேர்வு 3 கட்டங்களாக நடைபெறும்.

  1. Prelims – 200 Marks (Objective Type Questions)
  2. Mains – 300 Marks (Objective + Descriptive Type)
  3. Interview – 75 Marks

குறிப்பு

* முதல் நிலையில் (Preliminary) தேர்ச்சி பெறுபவர்களே Mains தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

* Prelims தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ¼ (கால்) மதிப்பெண் தேர்வர்களின் மொத்த மதிப்பெண்ணிலிருந்து குறைக்கப்படும்.

RBI Grade B Prelims Exam Pattern

Subject No.of Questions Marks Duration
General
Awareness
80 80 120 mins
Quantitative Aptitude 30 30
English
Language
30 30
Reasoning 60 60
Total 200 200

RBI Grade B (General
Officer) Mains Exam Pattern

Sections / Subjects Paper Type Marks Duration

(Minutes)

Paper-1 : Economics and Social Issues 50% Objective 50 30
  50% Descriptive 50 90
Total   100 120
Paper-2 : English Descriptive 100 90
Paper-3 : Finance and Management 50% Objective 50 30
  50% Descriptive 50 90
Total   100 120

 

RBI (Grade B) DEPR Officer, DSIM Officer Mains Exam Pattern :

Paper-1 : Economic and Social Issues

Paper-2 : English (Writing Skills)

Paper-3 : Statistics

RBI (Grade-B) தேர்வில் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண்களின் தர வரிசையின் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுகின்றனர். நேர்காணலில் தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு (ம) மருத்துவ பரிசோதனை தேர்வுகளுக்குப் பிறகு மத்திய ரிசர்வ் வங்கியில் Grade (B) அலுவலராக பணிநியமனம் வழங்கப்படுகிறது.

நன்றி, அடுத்த இதழில் சந்திக்கிறேன்.