ஆளப் பிறந்தோம்

திரு.இள.தினேஷ் பகத்

ன் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம்.

இந்த வருடத்திற்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கான Annual Planner வெளிவந்துள்ளது. முறையாகத் திட்டமிட்டு படித்தால் நிச்சயம் தேர்வில் தேர்ச்சி பெறமுடியும். அதேபோல UPSC (ம) SSC தேர்வு வாரியங்களின் Annual Palnner-ம் வெளிவந்துள்ளது. போட்டித் தேர்வுக்கு தயாராகும் நீங்கள் TNPSC ேதர்வுக்கு தயாராகுவதோடு UPSC, SSC தேர்வுகளும் எழுத முன்வர வேண்டும்.

எல்லாருக்கும் இருக்கக் கூடிய ஒரு முக்கியமான பிரச்சினை பணத்தேவை. பொருளாதாரப் பின்புலம் கொண்ட ஒரு சில மாணவர்கள் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களுக்கு சென்று மத்திய/மாநில அரசுப் பணிகளில் அமர்கின்றனர். பொருளாதாரப் பின்புலம் அற்ற பெரும்பாலான மாணவர்கள் உயர் பதவிகளுக்கான தேர்வுகள் எழுத முன்வருவதே இல்லை. ஆனால், ஒரு சில தன்னம்பிக்கை நாயகர்கள் தங்களுடைய விடாமுயற்சியினால் கடின உழைப்பினை மேற்கொண்டு வறுமையினை விரட்டி வரலாற்றில் தனக்கான ஒரு பக்கத்தை நிரப்பிவிட்டு வெற்றி வாகை சூடுகின்றனர்.

12ஆம் வகுப்பில் தோல்வியடைந்தாலும், விடாமுயற்சி (ம) தன்னம்பிக்கையுடன் போராடி IPS ஆக தேர்ச்சி பெற்ற ஒருவரின் கதை போட்டித் தேர்வு பயிலும் மாணவர்களுக்கு உத்வேக மூட்டும். சமீபத்தில் இவரின் கதை 12th fail என்ற திரைப்படம் இந்தியில் வெளிவந்து தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்தது. போட்டித் தேர்வுக்காகப் படிக்கும் மாணவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம். வாய்ப்பு இருப்பின் திரைப்படத்தைப் பாருங்கள்; இல்லையென்றால் இந்தக் கதையினைப் படியுங்கள்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில், ஒரு சிறிய கிராமத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறக்கிறார். தன்னுடைய சிறு வயதிலிருந்தே IPS ஆக வேண்டும் என்ற இலட்சியக் கனவு இருந்தது. இவர் படிப்பில் படுசுட்டியாக இல்லை என்றாலும் சுமாரான படிக்கும் மாணவராக 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார். ஆனால் 12ஆம் வகுப்பில் பொதுத் தேர்வில் தாய்மொழியான இந்தியைத் தவிர அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்தார்.

எப்படியாவது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று IPS அதிகாரி ஆகவேண்டும் என நினைக்கிறார். ஆனால், அவரது குடும்பத்தில் நிலவிய வறுமை பெரும் தடையாக இருந்தது. தடைகளைத் தகர்க்கிறார். பல தடைகளை கடந்து 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்.

பின்னர் தன்னுடைய இலட்சியக் கனவினை அடையப் பல போராட்டங்களைச் சந்திக்கிறார். ஆட்டோ ஓட்டுகிறார், குடும்ப வறுமை காரணமாக தெருவில் படுத்துறங்குகிறார். பிறகு டெல்லி நூலகம் ஒன்றில் வேலை செய்துகொண்டே UPSC தேர்வுக்கு தயாராகுகிறார். 4 முறை முயன்று UPSC தேர்வில் 2005ஆம் ஆண்டு 121வது ரேங்க் எடுத்து IPS அதிகாரி ஆனார். நம் கதையின் நாயகன் ‘மனோஜ்குமார் சர்மா IPS’ அவர்கள்.

எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் என்று கூறிய சுவாமி விவேகானந்தரின் இலட்சிய வரிகளை நெஞ்சில் நிறுத்திப் போட்டித் தேர்வுக்கு பயிலும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றிப் பெற்று உயர் பதவிகளில் அமரவேண்டும் என வாழ்த்துகிறேன்.

IBACIO (Intelligence Bureau, Assistant Control Intelligence Officer, Grade II) உதவி மத்திய புலனாய்வு அதிகாரி தேர்வுக்கு எவ்வாறு தயார் ெசய்வது என்பதனை இந்தத் தொடரில் பார்க்கலாம்.

  1. கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் (UG) இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  1. வயது வரம்பு

பொதுப் பிரிவினர் (GT) 18லிருந்து 27 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) 30 வயது வரையிலும், பட்டியல் இனத்தோர் (ம) பழங்குடியினர் 32 வயது வரையிலும் இத்தேர்வினை எழுதலாம்.

  1. தேர்வு முறை

ACIO தேர்வு 3 கட்டங்களாக நடைபெறும்.

  1. முதல் கட்டம் (Phase-1) – 100 Objective Type Questions (கொள்குறி வகை)
  2. இரண்டாம் கட்டம் (Phase-2) – Descriptive Type (விரிந்துறைக்கும் வகை)

III. மூன்றாம் கட்டம் (Phase-3) – Interview (நேர்முகத் தேர்வு)

குறிப்பு

* முதல் கட்டத்தில் தேர்ச்சி பெறும் மாணவர்களே அடுத்த இரண்டாம் கட்டத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

* இரண்டாம் கட்டத்தில் தேர்ச்சி பெற மாணவர்கள் 33% மதிப்பெண்கள் கட்டாயம் பெற வேண்டும்.

* முதல் (ம) இரண்டாம் கட்டத் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

* முதல் கட்டத் தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ¼ (கால்) மதிப்பெண் தேர்வர்களின் மொத்த மதிப்பெண்களில் குறைக்கப்படும்.

IBACIO – Phase-1
Exam pattern

Subject No.of Questions Mark Dura tion
General Awareness/
Current Affairs
20 20 1 Hour
General Studies 20 20
Numerical Aptitude 20 20
Reasoning and Logical Aptitude 20 20
General English 20 20
Total 100 100

IBACIO-Phase-1-க்கு படிக்க வேண்டிய புத்தகங்கள்

General Awareness/Current Affairs

  1. Advanced Objective General Knowledge – S. Chand
  2. Current Affairs – Lucent

Quantitative Aptitude

  1. Quantitative Aptitude for Competitive Exam – R.S. Aggarwal
  2. Fast Track Objective Arithmetic – Arihant Numerical Aptitude

Book Name Author/Publications

  1. A Modern Approach to Logical
    Reasoning – R.S. Aggarwal
  2. Tricky Approach to Competitive Reasoning Verbal and Non Verbal – Kiran Publication
  3. Verbal and Non Verbal Reasoning – R.S. Aggarwal

English Language

  1. High School English Grammar and

  Composition     – Wren and Martin

  1. Objective General English – S.P. Bakshi
  2. Word Power made easy – Norman Lewis

General Studies

6ஆம் வகுப்பு முதல் 12அம் வகுப்பு வரை உள்ள NCERT புத்தகம்.

IBACIO-Phase-2 Exam Pattern

Papers Maximum Marks Time
Essay 30 1 Hour
English Comprehension & Precis writing 20
Total 50

 

படிக்க வேண்டிய புத்தகங்கள்

Essay

  1. 151 Essays for IAS/PCS – Disha Publication
  2. Quartery Current Affairs – Disha Publication

English Comprehension
 & Precis Writing

  1. English for Competitive Examinations Wren and Martin
  2. Descriptive English (For All Competitive Examinations) – SJ Thakur & SK Rout
  3. Descriptive English SP Bakshi and Richa Sharma

IBACIO தேர்வில் Phase-1 (ம) Phase-2-இல் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண்கள் தர வரிசையின் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்படுகின்றனர். நேர்காணலில் தேர்ச்சி ெபற்றவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு (ம) மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு உள்துறை அமைச்சகத்தில் உளவுத்துறை பணியகத்தில் உதவி மத்திய புலனாய்வு அதிகாரி கிரேடு-2 பணியிடம் வழங்கப்படுகிறது.

நன்றி, அடுத்த இதழில் சந்திக்கின்றேன்.