ஆளப் பிறந்தோம்

திரு.இள.தினேஷ் பகத்

ன் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம். புது வருடம் பிறந்துள்ளது. புதுமையான சிந்தனைகளை விதைப்போம். கடந்த கால தோல்வியின் அனுபவங்களை இனிவரும் வெற்றிக்குப் படிகளாக்குவோம்.

‘‘நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
அவை நேரே இன்றெனக்குத் தருவாய் –
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள்
இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும்.
இனி என்னைப் புதிய உயிராக்கி
எனக்கேதும் கவலையறச் செய்து
மதிதன்னை மிகத் தெளிவு செய்து
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!’’

என்ற பாரதியின் கவிதை வரிகளை நெஞ்சில் நிறுத்தி, மத்திய/மாநில அரசினால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வெற்றிப் பெற்று அரசுப் பணிகளில் அமர்ந்திட வாழ்த்துகிறேன்.

இந்தத் தொடரில் RRB நடத்தும் NTPC (Non Technical Popular Categories Exam) தேர்வு பற்றி அறிய இருக்கிறோம். அதற்கு முன்பாக தன்னுடைய அசாத்திய முயற்சியினால், சாதனை செய்த ஒரு பெண்ணின் கதை சிலருக்குத் தெரிந்திருக்கலாம்; பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில், ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறக்கிறாள். அவளுக்கு 3 வயது இருக்கும் போதே தன்னுடைய தந்தையை இழந்தாள். அம்மாவின் அரவணைப்பில் வளர்கிறாள். சிறுவயதிலிருந்து அவளுக்கு விளையாட்டின்மீது ஆர்வம் இருந்ததால், வாலிபால் விளையாட்டில் சிறப்பாகச் செயல்பட்டு தேசிய அளவில்
(National Player) விளையாட்டு வீரராக இருக்கிறாள். முதுகலைப் பட்டப் படிப்பை முடித்தவுடன் வேலை தேட ஆரம்பிக்கிறாள். Sports Quota-வில் மத்திய தொழில் துறை பாதுகாப்பு படையில் இருந்து (CISF) அழைப்புக் கடிதம் வருகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தயாரான போது அவளுடைய பிறப்புச் சான்றில் ஒரு சில தொழில்நுட்ப பிழையின் காரணமாக பிறந்த தேதி தவறாக இருந்துள்ளது.

இந்த பிழையின் காரணமாக வேலை கிடைப்பதில் ஏதேனும் சிக்கல் வரும் என்ற பயத்தில் தவறினை திருத்த அவசர அவசரமாக பயணச் சீட்டு எடுத்துக்கொண்டு பத்மாவதி எக்ஸ்பிரசில் டில்லியை நோக்கிப் புறப்படுகிறாள்.

அவள் கனவிலும் நினைத்திருக்கமாட்டாள், இதே இரயில் பயணம் அவளின் வாழ்க்கையை புரட்டிப் போடும் என்பதனை. இவள் அமர்ந்திருந்த இரயில் கம்பார்ட்மெண்ட்டில் 5 வழிப்பறி திருடர்கள் ஏறுகின்றனர். இவளின் தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சி செய்கின்றனர். இவள் விளையாட்டு வீராங்கனை என்பதால் கொள்ளையர்களை எதிர்த்துப் போராடுகிறாள். ஒரு கட்டத்தில் கொள்ளையர்கள் இவளது இரு கை (ம) கால்களைப் பிடித்து ஓடும் இரயிலிலிருந்து வீசி எறிகின்றனர். வீசி எறியப்பட்ட அவள் பக்கத்து தண்டவாளத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த வேறொரு இரயிலின் மீது மோதி கீழே விழ, கண்ணிமைக்கும் நேரத்தில் அவளின் கால்களின் மீது இரயில் ஏறி சென்றுவிட்டது. இரவு நேரம் என்பதால், யாரும் கவனிக்கவில்லை. கிட்டத்தட்ட 7 மணிநேரத்திற்குப் பிறகு உள்ளூர் கிராமவாசிகள் காலைக் கடனை தண்டவாளத்தில் கழிக்க வரும்போது இவளை மீட்டு அருகிலிருக்கும் அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.

மருத்துவமனையில் மயக்க மருந்து இல்லை என்று மருத்துவர்கள் கூற, இவளின் ஒப்புதலின்படி, மயக்க மருந்து செலுத்தாமலே, இவள் சுயநினைவுடன் (conscious) இருக்கும் போதே, இவளின் இடது கால் முட்டிக்குக் கீழ்ப்பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. பிறகு வலது காலில் இரும்பு ராட் (ம) தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை என 4 மாதம் படுக்கையில் இருந்த இவளுக்கு, தான் பெரிதாக ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியப் பொறி உருவாகிறது. அவள் எடுத்த முடிவு எவரெஸ்ட் சிகரம் ஏறுதல் என்பது. இதைப் பலரிடம் கூற, ‘‘உனக்கே ஒரு கால் இல்லை, இன்னொரு காலில் இரும்பு ராட், முதுகுல ஆப்ரேசன். இதெல்லாம் வச்சுகிட்டு நீ மலை ஏறப் போறியா’’ என்று பலரும் ஏளனமாய் சிரிக்க, இவளின் குடும்பம் மட்டும் நம்பிக்கை வைத்தது. கிட்டத்தட்ட 18 மாதம் கடும் பயிற்சிக்குப் பிறகு, எவரெஸ்ட் சிகரம் ஏறத் தயாராகிறாள் அந்த வீராங்கனை.

ஏப்ரல், 2011இல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவள், மே 2013இல் எவரெஸ்ட் ஏறும் போது பல போராட்டங்களுக்குப் பிறகு உலகின் உயர்ந்த சிகரத்தில் அவள்…

என்ன? வியப்பாக இருக்கிறதா?

‘‘இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்’’

இந்த குறளுக்கான விளக்கம் : துன்பம் வந்த போது அதற்காக வருந்திக் கலங்காதவர், அந்த துன்பத்திற்கே துன்பம் உண்டாகி அதை ெவன்று விடுவார். இந்த குறளுக்கான உதாரணமாக விளங்குபவர் நாம் மேற்சொன்ன கதையின் நாயகி, பத்ம அருணிமா சின்ஹா.

RRB (NTPC) Non Technical Popular Categories Exam தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆவது என்பது பற்றி பார்க்கலாம்.

  1. RRB (NTPC) மூலம் வழங்கப்படும் பணியிடங்கள்
  2. Commercial Apprentice, 2. Station Master, 3. Goods Guard, 4. Junior Accounts Assistant cum Typist, 5. Senior Clerk cum Typist, 6. Senior Time Keeper, 7. Traffic Assistant, 8. Commercial cum Ticket Clerk, 9. Junior / Senior cum Typist, 10. Train’s Clerk.
  3. கல்வித் தகுதி

ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியே கல்வித் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, (i) 12ஆம் வகுப்பு தேர்ச்சி, (ii) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் (UG Degree), (iii) கணினியில் தட்டச்சுப் பயிற்சி English/Hindi.

III. வயது வரம்பு

பொதுப் பிரிவினர் (GT) 18-லிருந்து 30 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) 33 வயது வரையிலும், பட்டியல் இனத்தோர் (ம) பழங்குடியினர் 35 வயது வரையிலும் இத்தேர்வை எழுதலாம்.

  1. தேர்வு முறை

RRB (NTPC) தேர்வு 3 கட்டங்களாக நடைபெறுகிறது.

  1. முதல் கட்டம் – CBT-1 (Computer Based Test-1)
  2. இரண்டாம் கட்டம் – CBT-2 (Computer Based Test-2)
  3. மூன்றாம் கட்டம் – தட்டச்சுத் திறன் / Computer Based Aptitude Test)

RRB (NTPC) Stage-1
Exam Pattern

Subject No.of Questions Marks Duration
Mathematics 30 30 90 Mins
General
Intelligence and
Reasoning
30 30
General

Awareness

40 40
Total 100 100

 

RRB (NTPC) Stage-2
Exam Pattern

Subject No.of Questions Marks Duration
Mathe
matics
35 35 90 Minutes
General

Intelligence and

Reasoning

35 35
General Awareness 50 50
Total 120 120

 

இத்தேர்வில் தவறாக அளிக்கப்படும் பதில்களுக்கு மூன்றில் ஒரு பங்கு மதிப்பெண் குறைக்கப்படும்.

Computer Based Aptitude Test (CBAT)

  1. i) போக்குவரத்து உதவியாளர் (ம) ஸ்டேசன் மாஸ்டர் பணியை தேர்வு செய்தவர்களுக்கு மட்டும் நடைபெறும்.
  2. ii) ேதர்வர்கள் தகுதி பெற ஒவ்வொரு கட்டத்திலும் குறைந்தபட்சம் 42 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

iii) (CBAT) எதிர்மறை மதிப்பெண் இருக்காது.

தட்டச்சு திறன் தேர்வு

தேர்வர்கள் கணினியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்தில் (அ) இந்தியில் 25 வார்த்தைகள் தட்டச்சு செய்ய வேண்டும்.

RRB (NTPC) தேர்வுக்குப் படிக்க வேண்டிய புத்தகங்கள்

  1. Quick Arithmatic – Ashish Agarwal
  2. Mathematics – Chapter wise – solved paper Prem Kumar
  3. Advance Maths – Rakesh Yadav
  4. Magical Book in Quicker Maths M. Tyra

General Intelligence & Reasoning

  1. Analytical Reasoning – M.K. Pandey
  2. How to Crack Test of Reasoning
    Jaikishan & Premkishan
  3. General Intelligences and Test of
    Reasoning – Arihant

General Awarenss

  1. General Awareness – Disha
  2. Lucent G.R. – Lucent’s
  3. General Awareness – Arihant

RRB (NTPC) ேதர்வில் CBT-1 (ம) CBT-2 (ம) CBAT ேதர்ச்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு (ம) மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு இரயில்வே துறையில் அவர்கள் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் பணியிடம் வழங்கப்படுகிறது.

நன்றி அடுத்த இதழில் சந்திக்கிறேன்.