ஆளப் பிறந்தோம்

திரு.இள.தினேஷ் பகத்

ளம் வயது முதலே கிரிக்கெட்டின்மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தான் அந்த இளைஞன். தன்னுடைய தெருவில் நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அந்த இளைஞனின் திறமையை ஆரம்பக் கட்டத்திலேயே அடையாளம் கண்டுவிட்ட அவனது தந்தை அது எந்த விதத்திலும் வீணாகிவிடக்கூடாது என்று கருதி கிரிக்கெட் அகாடெமியில் சேர்த்துவிடுகிறார்.

அதன் பிறகு முறையாகக் கிரிக்கெட் பயிற்சி பெற ஆரம்பித்த அந்த இளைஞனும் தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள ஆரம்பிக்கிறான். விதி யாரை விட்டது? அந்த இளைஞனுக்கு 14 வயது இருக்கும்போது அனைத்தும் மாறியது. அவரின் சகோதரர் தொழில் தொடங்கப் பணம் தேவைப்பட்டதால் சொந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டிற்குச் சென்றார்கள். நல்ல தொடக்கம் கண்ட அந்த இளைஞனின் அண்ணனின் தொழில் திடீரென பெரும் சரிவை சந்தித்துப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. ஆன்லைனில் வர்த்தகம் செய்துவந்த அந்த இளைஞனின் தந்தையும் எதிர்பாராத நஷ்டத்தைச் சந்தித்தார். அதில் அவர் செய்த சிறிய தவறால் அதுவரை சம்பாதித்து வைத்திருந்த மொத்தப் பணத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நம்பிக்கையானவர்கள் என்று அவர் நம்பியவர்கள் அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தனர். இதனால் மிகுந்த மனக்கஷ்டத்திற்கு உள்ளாகியிருந்த அந்த இளைஞனின் தந்தையைப் பக்கவாதம் நோய் தாக்கியது. கழிவறை செல்வதற்குக்கூட அவரை ஒருவர் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தச் சரிவில் இருந்து மீண்டு வருவது அந்த இளைஞனுக்குப் பெரும் சவாலாக இருந்தது. அந்த சமயத்தில்தான் ரஞ்சி ட்ராபி தொடரில் விளையாட அந்த இளைஞனுக்கு வாய்ப்பு கிடைத்தது. 4 நாட்கள் நடந்த ரஞ்சி ட்ராபி போட்டியில் டெல்லி அணி பெங்களூர் அணியுடன் மோதிக் கொண்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காமல் நின்று கொண்டிருந்த அந்த இளைஞன் மறுநாள் ஆட்டத்தைத் தொடர வேண்டும். அந்தப் பெரிய பொறுப்புடனும், அன்றைய தினத்தில் விளையாடிய அசதியுடனும் வீட்டிற்குச் செல்கிறான், அந்த இளைஞன். இரவு உணவை முடித்துவிட்டு தூங்கிக் கொண்டிருக்கையில் அதிகாலை 2 மணியளவில் மொத்த குடும்பமும் பதறி எழுகிறது. காரணம், அந்த இளைஞனின் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு தன்னுடைய கடைசி சுவாசத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்தார். அருகேயிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழக்கிறார்.

மொத்த குடும்பமும் இடிந்துபோய் அமர்ந்திருந்தது. தன்னைக் கிரிக்கெட் வீரனாக்கிப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்ட தந்தையின் மரணம் அந்த இளைஞனை வெகுவாகப் பாதித்திருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு தன்னுடைய அணிப் பயிற்சியாளருக்குப் போன் செய்து விவரத்தைக் கூறுகிறார், அந்த இளைஞன். ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்த அவர் நீ என்ன முடிவு எடுத்திருக்கிறாய் என்கிறார். நாளைய போட்டியில் நான் நிச்சயம் களமிறங்குவேன் என்கிறான் அந்த இளைஞன். அந்த இளைஞன் உறுதியாக இருந்ததால் பயிற்சியாளரும் சம்மதித்து விடுகிறார். தந்தையின் சடலம் நடு வீட்டில் கிடக்க போட்டியை முடித்துவிட்டிருந்தான். அந்த இளைஞன் தன் தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்தான். குடும்பத்தினர் பலர் அதிர்ச்சியடைந்துவிட்டனர். அந்த இளைஞனை இந்திய கிரிக்கெட் வீரனாக்கிப் பார்க்க வேண்டும் என்று விரும்பிய அவனது தந்தை நிச்சயம் ஏற்றுக்கொண்டிருப்பார். தன் தந்தையின் இறுதிச் சடங்கின்போது இந்திய அணிக்காக தான் நிச்சயம் விளையாடுவேன். எதுவென்றாலும், அது தடுக்க முடியாது என்று தன் சகோதரனிடம் சூளுரைத்தான். சொன்னதைப் போலவே செய்தான்.

யார் அந்த இளைஞன்? தன்னுடைய ஆக்ரோச குணத்தால் எதிரி அணிகளுக்கு சிம்மசொப்பனமாகவும், கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாகவும் பவனி வந்து கொண்டிருக்கும் தி கிங் விராட் கோலி.

விராட் கோலி போல் தனக்கு நடக்கும் சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுபவர்களே சரித்திரத்தில் இடம்பெறுகின்றனர்.

வணக்கம் தோழர்களே! இந்த இதழில் இந்திய இரயில்வே துறையில் வேலை பெறுவது எப்படி? என்று பார்க்க இருக்கிறோம். இந்திய இரயில்வே துறையில் பணிபுரிய வேண்டும் என்பது பலரின் கனவு. தமிழ்நாட்டிலிருந்து தயார் செய்யும் மாணவர்களுக்கு மிகவும் சவாலான தேர்வாக இருந்து வருவதும், இந்திய இரயில்வேத் துறையின் தேர்வு மட்டுமே. ஆண்டுதோறும் இரயில்வே துறையின் மூலம் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு அதிகமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பெரும்பாலும் வடமாநில இந்தியர்களே இத்தேர்வுக்காக விண்ணப்பம் செய்து வேலை வாய்ப்புப் பெறுகின்றனர்.

பெரும்பாலும் தமிழக இளைஞர்கள் இரயில்வே தேர்வுகள் எழுத முன்வருவதில்லை. இருப்பினும் ஒரு சில மாணவர்கள் இத்தேர்வுகளில் வெற்றி பெற்று பணிவாய்ப்பும் பெறுகின்றனர்.

RRB (Railway Recruitment Board) இரயில்வே தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளின் விவரம் :

  1. RRB JE
  2. RRB பாராமெடிக்கல் ஆட்சேர்ப்பு
  3. RPF கான்ஸ்டபிள் தேர்வு
  4. RITES ஆட்சேர்ப்பு
  5. RPF SI தேர்வு
  6. RRB ALP
  7. RRB Group-D
  8. RRB NT PC தேர்வு
  9. RRB JE தேர்வு

கல்வித் தகுதி

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக கீழ்க்கண்டவாறு கல்வித் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

SNO

Posts

Educational Qualifications

1. Junior Engineer Diploma/Degree in Engineering
2. Departmental Superintendent Diploma/Degree in Engineering from any discipline
3. Junior Engineer

(Information Technology)

கீழ்க்கண்ட பாடப்பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

1. PGDCA/B.Sc. (Computer Science)

2. B.Tech. (Computer Science)

3. B.C.A./B.Tech. (IT)

4. DOEACC B Level Course

4. Chemical & Metallurgical Assistant இளநிலை அறிவியல் பட்டத்துன் இயற்பியல் (அ) வேதியியல்  பிரிவில் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு

பொதுப் பிரிவினர் (GT) 18 வயதிலிருந்து 33 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) 36 வயது வரையிலும், பட்டியல் இனத்தோர் (ம) பழங்குடியினர் 38 வயது வரையிலும் இத்தேர்வினை எழுதலாம்.

தேர்வு முறை

RRB (JE) தேர்வு 2 கட்டங்களாகத் தேர்வு நடைபெறும்.

முதல் கட்டம் : RRB JE CBT-1 (Computer Based Test-1)

இரண்டாம் கட்டம் : RRB JE CBT-2 (Computer Based Test-2)

இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 40% ஆகும். மேலும் தவறாக அளிக்கப்படும் பதில்களுக்கு மூன்றில் ஒரு பங்கு மதிப்பெண் குறைக்கப்படும்.

RRB JE CBT-1 Exam Pattern
Subject No.of
questions
Marks Duration
Mathematics 30 30 90 Minutes
General Awareness & Reasoning 25 25
General Awareness 15 15
General Science 30 30
RRB JE CBT-2 Exam Pattern
Subject No.of
questions
Marks Duration
General Awareness 15 15 120 Minutes
Physics & Chemistry 15 15
Basic of Computers and Applications 10 10
Basic of Environment and Pollution Control 10 10
Technical Abilities 100 100  

 

RRB JE Books for CBT-I ேதர்வுக்கு பாட வாரியாகப் படிக்க வேண்டிய புத்தகங்கள்.

RRB JE Books for CBT-1

படிக்க வேண்டிய புத்தகங்கள்

Subject

Book Name

Author/Publication

Mathematics Quickest Mathematics Kiran Publication
Advance Mathematics Rakesh Yadav
General Science Lucent General Science Lucent
Reasoning A Modern Approach to Verbal & Non-verbal Reasoning R.S. Aggarwal
G.K./Currrent Affairs Lucent G.K. Renu Sinha, Manvendra Mukul, Sanjeev Kumar

Dr. Binay Karna

Computer Science and Information Technology GKP GKP Publications

 

RRB JE Books for CBT-2 ேதர்வுக்கு பாட வாரியாகப் படிக்க வேண்டிய புத்தகங்கள்.

RRB JE Books for
Mechanical Engineering

  1. Mechanical Engineering for Competitions – R.K. Jain
  2. Objective Mechanical Engineering Competitive Exams – G.K. Publications

RRB JE Books for
Civil Engineering

  1. Objective Questions & Answers in Civil Engineering – S.K. Duggal
  2. Civil Engineering Through Objective – Type Questions – S.P. Gupta and S.S. Gupta

RRB JE Book’s for
Computer  Science

  1. Objective Computer Science & Information Technology – Jushta Jaiswal

RRB JE Book’s for
Electronics Engineering

  1. Objective Electrical, Electronics and Telecommunication Engineering – B.L. Theraja and R.K. Pandey
  2. RRB Electronics and Telecommuncation Engineering Examination Guide for JE – GKP

RRB JE Books for
Electrical Engineering

  1. Question Bank in Electrical Engineering – J.B. Gupta
  2. Electrical Engineering – Objective Type Questions Satya Prakashan Publications

RRB CBT-1 (ம) CBT-2-இல் தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு செய்த பிறகு ஜூனியர் எஞ்சினயராக இரயில்வே துறையில் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. =

நன்றி அடுத்த இதழில் சந்திக்கிறேன்.