ஆளப் பிறந்தோம்

திரு.இள.தினேஷ் பகத்

‘‘ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்’’

இந்த குறளின் விளக்கம், ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் (தேடிய செல்வங்கள் அனைத்தும்) இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.

நம்மால் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியுமா? என்று தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பவர்களால் ஒருபோதும் போட்டித் தேர்வுகளில் மட்டும் அல்ல, போட்டி மிகுந்த வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியாது. மாறாக, எந்த நிலையிலும் ஊக்கத்தோடு, செயல்படுபவர்களே, வெற்றி மாலை சூடுவார்கள்.

நம்மில் பலருக்கும் தோன்றும் ஒரு எண்ணம் -எனக்கு மட்டும்தான் இப்படி நடக்குது, என்னோடு படிச்சவங்க எல்லாம் நல்ல ஒரு பதவியில் இருக்காங்க. நானும் நல்லாதான் படிக்கிறேன். ஆனால், வெற்றி பெற முடியவில்லை. அப்படி, இப்படின்னு நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அது முற்றிலும் தவறானது. நமக்கு வரும் துன்பங்களை தவிடு பொடியாக்கி, கிடைத்த அனுபவங்களைக் கொண்டு வீறுநடை போடுபவர்களே வெற்றியாளர்கள்.

சார்லி சாப்ளினை நம்ம எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவருடைய இளமைக் காலம் யாருமே நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்குத் துன்பங்கள் நிறைந்ததாக இருந்தது. ஒரு வேளை உணவுக்காக சார்லி சாப்ளின் சிறு வயதில் பேப்பர் போடுபவராக, பொம்மை செய்பவராக, முடிவெட்டும் தொழிலாளியாக, இதுபோல பல அவதாரங்களை எடுத்தார்.

ஏழ்மையில் இவரது ஆடைகளையும் தோற்றப் பொலிவையும் கண்ட மக்கள் இவரைக் கண்டவுடன் சிரிக்க ஆரம்பித்தனர். இங்கேதான் அவருக்கு ஒரு வெற்றி (Spark) உண்டானது. அந்தக்கணம் முதல் ‘‘கோமாளி’’ கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினார் சார்லி சாப்ளின்.

ஒரு மேடை நாடகத்தில் சிரமப்பட்டு நகைச்சுவையாகப் பேசி நடித்தார் சார்லி சாப்ளின். இருந்தும் பார்வையாளர்கள்் யாரும் சிரிக்கவில்லை. சார்லி சாப்ளின் பேசிய ஆங்கிலம் அவர்களுக்குப் புரியவில்லை என்ற உண்மை பிறகுதான் தெரிந்தது. மொழிகளைக் கடந்து நடை, உடை, பாவனைகளால் செய்யும் நகைச்சுவையே உலகம் முழுவதும் சென்று சேரும் என்பதை இந்தச் சம்பவத்தின் மூலம் தெரிந்துகொண்டார் சார்லி சாப்ளின்.

நாடக மேடையிலிருந்து திரைப்படங்களுக்கு வந்த சார்லி சாப்ளின் அடைந்த அவமானங்கள் பல. அவரது முதல் படம் படுதோல்வி அடைந்தது. அதற்காக அவர் சிறிதும் துவண்டுவிடவில்லை. தன் குறைகள் அனைத்தையும் ஊக்கத்துடன் வெற்றியை நோக்கி நிறைகளாக்கி திரைப்பட உலகில் தனக்கென ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்தார் சார்லி சாப்ளின்.

வணக்கம் தோழர்களே! ஒன்றை எப்படியும் சாதித்துவிட வேண்டும் என்ற இலட்சிய வெறி இருந்தால் மட்டுமே வெற்றியை அறுவடை செய்ய முடியும். கடந்த இதழில் Railway Recruitment Board இரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் Junior Engineer தேர்வு பற்றிப் பார்த்தோம். இந்த இதழில் Assistant Loco Pilot (உதவி லோகோ பைலட்) தேர்வு பற்றிப் பார்க்க இருக்கிறோம்.

நாம் அனைவருமே பயணம் செய்வதற்கு விரும்புவது இரயில் பயணங்கள்தான். பயணங்கள் மகிழ்ச்சியளிப்பதாகவும், விலை குறைவானதாகவும் இருப்பதும் இந்த இரயில்வே துறையில்தான். நாடு முழுவதும் ஒரு நாளில் பல இலட்சம் பேர்கள் இரயில் பயணங்கள் மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு இரயிலிலும் கிட்டதட்ட 10000 பேர்களுக்கு மேல் பயணம் செய்யும் பயணிகள் பாதுகாப்புடன் பயணம் செய்வதற்கான பொறுப்பு லோகோ பைலெட்டின் திறமையான தோளில் தாங்கியுள்ளது. இத்தகைய லோகோ பைலட் தேர்விற்கு எவ்வாறு தயார் ஆவது? என்பதைப் பார்க்கலாம்.

கல்வித் தகுதி

  1. 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பத்தார் குறிப்பிட்ட பிரிவில் ITI (NCVT/SCVT)-இல் அங்கீகரிக்கப்பட்ட கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

(or)

  1. Diploma in Engineering
  2. Degree in Engineering

வயது வரம்பு

பொதுப் பிரிவினர் (GT) 18 வயதிலிருந்து 28 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) 31 வயது வரையிலும், பட்டியல் இனத்தோர் (ம) பழங்குடியினர் 33 வயது வரையிலும் இத்தேர்வினை எழுதலாம்.

ேதர்வு முறை

RRB (ALP) தேர்வு 3 கட்டங்களாக நடைபெறும்.

முதல் கட்டம் : RRB (ALP) CBT-1

இரண்டாம் கட்டம் : RRB (ALP) CBT-2

மூன்றாம் கட்டம் : Computer Based Aptitude test

RRB (ALP) CBT-1 Exam Pattern

Subject

No.of Questions Marks

Duration

Mathematics

20 20 60 mins
General Intelligence & Reasoning

25

25

General Science

20

20

General Awareness on Current Affairs

10

10

Total 75

75

 

RRB (ALP) CBT-2 Exam Pattern:

Sl. No.

Sections No.of Questions Marks

Duration

  Part-A 100 100 90 mins
1. Mathematics
2. General

Intelligence & Reasoning

3. General

Science

4. General

Awareness on Current Affairs

  Part-B      
1. Relevant Trade 75 75 60 mins
  Total 175 175 2 hours

30 mins

       

இத்தேர்வில் தவறாக அளிக்கப்படும் பதில்களுக்கு மூன்றில் ஒரு பங்கு மதிப்பெண் குறைக்கப்படும்.

Computer-Based Aptitude Test

*        ALP தேர்வு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் நடைபெறும்.

முக்கியக் குறிப்பு

*        தேர்வர்கள் தகுதி பெற ஒவ்வொரு கட்டத்திலும் குறைந்தபட்சம் 42 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

*        2-ஆம் நிலை CBT-இன் பகுதி-A-யில் பெற்ற மதிப்பெண்களுக்கு 70% வெயிட்டேஜும்;

*        கணினி அடிப்படையிலான திறனறித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு 30% வெயிட்டேஜும்;

*        Aptitude தேர்வில் தகுதி பெறும் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டுமே ALP மெரிட் பட்டியல் எடுக்கப்படும்.

RRB (ALP) Books for CBT-1 & CBT-2

(Part-A) படிக்க வேண்டிய புத்தகங்கள்

Subject Book Name

Author/Publisher

Mathematics Quantitative Aptitude RS Aggarwal
  Advance Maths Rakesh Yadav
Fast Track Rajesh Verma
General Intelligence & Reasoning Test of Reasoning Edgar Thorpe
  Analytical Reasoning MK Pandey
General Intelligence and

Reasoning

Lucent’s
General Science General Science Ravi Bhushan
General Awareness on Current Affairs General Knowledge Lucent’s
Year Book Manorama

RRB (ALP) Books for CBT-2 (Part-B) படிக்க வேண்டிய புத்தகங்கள்

  1. Dilip Tiwari’s Technical Trades Railway Assistant Loco Pilot of Technician Exams.
  2. Exam Guide for the RRB Assistant Loco Pilot and Technician – R.P.H. Editorial Board

RRB (ALP) CBT-1 and CBT-2 and Computer Based Aptitude Test-3 தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்ப்பு (ம) மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு உதவி லோகோ பைலட் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சிக்குப் பிறகு பணியிடம் வழங்கப்படுகிறது.

நன்றி அடுத்த இதழில் சந்திக்கிறேன்.