சாதனையாளர்கள் பக்கம்

மதுரை.ஆர்.கணேசன்

லக அழகியியலின் கதவுகள் வானம் எத்தனை அழகானது அதற்கு பின்னால் சுழழும் வானியியல் அற்புதங்களை கண்டு ரசிக்க நம்கண்களுக்கு ஒருநாள் போதாது ஒவ்வொரு நாட்களும் ஆர்வத்தை தூண்டி சிலாக்கிக்க செய்யும் என்பது மிகையில்லை..! 

விஞ்ஞானிகள் பலவருடங்களாக கடுமையான உழைப்பிற்கு பின்னரே ஆராய்ச்சி செய்வதற்காக TELESCOPE எனும் தொலைநோக்கியை 1608ல் டச்சுக்  காரரான ஹான்ஸ்லிப்பர்ஷா மற்றும் 1609ல் இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“..உலகமே வியக்கும் அளவிற்கு இந்தியா நிலவின் தென்துருவத்தை ஆராய சந்திராயன் 3 ராக்கெட் விண்ணிற்கு அனுப்பப்பட்டு மகத்தான வெற்றியை நாட்டு மக்களுக்கு பரிசளித்திருக்கிறது…”

இந்த சமயத்தில் இந்திய வரலாற்று சாதனையின் உந்துதலின் பேரில் “..அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒரே நாளில் தொலைநோக்கியை தாங்களாகவே  கற்றுக்கொண்டு தயாரித்திருக்கிறார்கள்..” ஆச்சர்யம் தவிர்த்து முதலில் பாராட்ட வேண்டும்..!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் 1 – 3 வார்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள நீயூட்டன் அறிவியல் மன்றம் ஒவ்வொரு வருடமும் புதிய புதிய அறிவியல் நிகழ்வுகளை மாணவர்களுக்காக செயல்ப டுத்தி வருகிறது.

அந்தவகையில் இந்த கல்வி ஆண்டில் “..சர்வதேச குறுங்கோள் தினத்தை முன்னிட்டு வானியியல் அறிவோம் நம்ம தொலை நோக்கியை நாமே செய்வோம்..” என்ற கருத்தின் அடிப்படையில் இம்மன்றமும் மற்றும் ஓபன் ஸ்பேஸ் பவுண்டேசன் குழுவினரோடு இணைந்து தேர்வு செய்யப்பட்ட 12 மாணவர்கள் தொலைநோக்கியை தயாரித்திருக்கின்றனர்.

இந்த மாணவர்கள் குழுக்களாக பிரிந்து கொண்டு தொலைநோக்கியை தயாரித்து தங்களது பெற்றோர்களிடம் காட்டுவதற்காக வீட்டுக்கு எடுத்து சென்றனர் மேலும் இதற்கான தயாரிப்பு செலவை ஒவ்வொரு மாணவர்களின் பெற்றோர்களே மனமுவந்து ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

வானோக்கு அதிசயங்களை அவ்வப்போது மாணவர்கள் பெற்றோர்களுடன் சேர்ந்து பார்த்து மகிழ்ந்தனர் அந்த அனுபவத்தை பள்ளிக்கு வரும் போது ஆசிரியர்களிடம் மிகுந்த சந்தோசத்துடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்..!

விண்வெளி அற்புதங்களை காண ஒளியியல் தொலைநோக்கி, பெரிய ஒளித்தெறிப்பு தொலைநோக்கி, ஒளிமுறிவுத்தொலைநோக்கிகள், கதிர்வீச்சுத் தொலைநோக்கிகள், சூரியத் தொலைநோக்கி, விண்வெளித் தொலைநோக்கி போன்ற பலவகையான தொலைநோக்கிகள் இருக்கிறது.

இதில் மாணவர்களுக்கான பிரத்யேகமான “..REFRACT TELESCOPE 40 NDS என்ற குறைவான பொருட்செலவில் 40மிமீ ஒளிவிலகல் தொலைநோக்கியை மாணவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்..” என்பது கவனிக்கத்தக்கது !

காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர், முனைவர் பாலசுப்ரமணியன் மற்றும் உத்திரமேரூர் வட்டார கல்வி அலுவலர் கலாவதி மாணவர்கள் உருவாகிய தொலைநோக்கியை நேரில் பா ர்வையிட்டு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்திருக்கிறார்கள்..!

தமிழகத்தின் எங்கோ ஒரு அரசு பள்ளியிலிருந்து மாணவர்களை நாட்டின் அடுத்த தலைமுறைக்காண விஞ்ஞாணிகள் ஆக்குவதற்கான இலக்கை நோக்கி படிக்கும் போதே களம் அமைத்து தரப்பட்டுருக்கிறது அத்தகைய பெருமைமிகு மாணவர்கள் ஆசிரியர்கள் தலைமையாசிரியரிடம் பேசினோம்…,

சு.சந்தானலட்சுமி, தலைமையாசிரியர்,

“…எங்களது பள்ளி மாணவர்களுக்கு தொலைநோக்கியை பற்றியும் அதன் பாகங்கள், வகைகள், பயன்கள் பற்றி தெளிவாக கூறியும் பின்னர் தயாரிக்கும் முறை பற்றியும் விளக்கி மாணவர்களை நேர்த்தியாக செய்ய தூண்டிய ஒபன் ஸ்பேஸ் பவுண்டேசன் நிறுவனத்திற்கு நன்றி..!

விண்ணில் நடக்கும் விந்தைகளை தாங்கள் அறிந்ததுடன் மாணவர்களையும் அறியச் செய்து அவர்கள் தன்னுடைய நண்பர்களுக்கும் கற்றுக்கொடுக்கும் விதமும் அருமை.,

அத்துடன் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த எங்கள் பள்ளியில் உள்ள நீயூட்டன் அறிவியல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் அறிவியல் ஆசிரியர் மற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவர்க்கும் என் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..”

ரா.வித்யா, எட்டாம் வகுப்பு..,

“…வானத்தை வெறும் கண்ணால் பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை அதுவே இரவில் பார்த்தால் நட்சத்திரம், நிலா தெரிகிறது ஆனால் அவற்றை மேலும் உற்று நோக்கும் வகையில் தொலைநோக்கியை தயாரிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதுவும் தொலைநோக்கியின் ஒவ்வொரு பாகங்களை நன்கு அறிந்து கொண்டு எங்களது பள்ளி நண்பர்களுடன் இணைந்து எங்களுக்கான தொலை நோக்கியை நாங்களே உருவாக்கினோம் இது அளவில்லா மகிழ்ச்சியளிக்கிறது..”

ஜி.டி.சுதிக்ஷா எழாம் வகுப்பு.,

“..விந்தையான விண்வெளி ஒரு அற்புதம் இதை காண கண்கோடி வேண்டும் அந்த நிலாவினை கூர்ந்து கவனிக்க எங்கள் பள்ளியின் நீயுட்டன் அறிவியல் மன்றம் மூலம் கிடைத்தது.

விண்வெளி அற்புதத்தை காண நம்ம தொலைநோக்கியை நாங்களே தயாரிக்க வாய்ப்பு கிடைத்தது இதற்கு ஒபன் ஸ்பேஸ் பவுண்டேசன் பேரூதவியாக இருந்தது ஏனெனில் எங்கள் கனவினை நனவாக்கி தந்திருக்கிறது மிகவும் சந்தோசம்..”

ஆ.வைஷ்ணவி எட்டாம் வகுப்பு.,

“..இந்த பிரபஞ்சம் மிகவும் வித்தியாசமானது அதை காண்பதற்கு இருகண்கள் போதாது விசித்திரமான விண்வெளியை அருகில் காணவேண்டும் என்ற ஆவல் குறுகிய காலத்தில் அந்த வாய்ப்பினை எங்கள் பள்ளி ஏற்பாடு செய்து தந்ததில் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

தொலைவிலிருந்து தொலைநோக்கியை நாங்களே செய்திடும் நல்வாய்ப்பு ஒபன் ஸ்பேஸ் பவுண்டேசன் மற்றும் எங்கள் பள்ளியின் நீயுட்டன் அறிவியல் மன்றம் மூலமாக செய்தோம் பார்த்தோம் மகிழ்ந்தோம் இனி நிலாவை மட்டுமா ? பூமிக்கு அருகில் வரும் நட்சத்திரங்களையும் கண்டுகளிக்க உள்ளோம்…”

பூ.நிவேதா எட்டாம் வகுப்பு.,

“..தொலைநோக்கி பற்றி பாட புத்தகத்தில் படித்திருக்கிறோம் அவற்றை கோளரங்கத்தில் கிரணங்கள் காலத்தில் என்ன நடக்கும் என்பதை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன் இப்போது நாங்களே தொலைநோக்கியின் ஒவ்வொரு பாகங்களின் பெயர் மற்றும் அவற்றின் பயன்பாடுகளையும் தெரிந்து கொண்டு தயாரித்தோம்.

அழகான நிலவு நமது பூமியின் துணைக்கோள் சாதாரணமாக பார்த்த எங்களுக்கு அவற்றின் மற்ற பகுதிகளை மேலும் கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பினை வழங்கிய எங்கள் பள்ளி நீயுட்டன் அறிவியல் மன்றம் மற்றும் ஒபன் ஸ்பேஸ் பவுண்டேசன் குழுவினருக்கும் நன்றி.

சு.நித்திலா எட்டாம் வகுப்பு..,

“..விண்வெளியில் நடக்கும் பல அற்புதங்களை நாம் வெறும் பார்க்க முடியாது ஆனால் நான் விண்வெளியை பற்றி தெரிந்து கொள்ள வேறு ஒரு கண் தேவைப்பட்டது அதுவே எனக்கு தொலைநோக்கியை உருவாகும் ஆர்வத்தை தூண்டியது.

தொலைநோக்கியை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் எங்கள் நண்பர்களுடன் குழுவாக பிரிந்து கொண்டு தயாரிக்க ஆயத்தமானோம் தொலை நோக்கியின் வகைகள் அதன் செயல்பாடுகள் பற்றி ஒபன் ஸ்பேஸ் பவுண்டேசன் கற்றுக் கொடுத்தனர்.

தொலைநோக்கியை தயாரித்து விண்வெளியின் அழகை பார்த்து ரசித்தோம் எனது கனவு நிறைவேறியது அடுத்து விண்வெளி ஆராய்ச்சி படிப்பு பற்றி படிக்க ஆசையாக இருக்கிறது..” 

நி.அன்பழகன் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் மற்றும் நீயுட்டன் அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர்..,

“..ஒரு ஆசிரியரின் கடமை என்பது மாணவர்கள் புதிதுபுதிதாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி விடுவது அந்த முயற்சியில் வியத்தகு கோள்கள் மற்றும் துணைக்கோள் பற்றி மாணவர்களுக்கு எளிமையாக புரிய வைக்க வேண்டும்.

அதிசயங்கள் நிறைந்த விண்வெளியினை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காக எங்கள் பள்ளியின் நீயுட்டன் அறிவியல் மன்றம் மற்றும் ஒபன் ஸ்பேஸ் பவுண்டேசன் சார்பாகவும் ஏற்பாடு செய்தோம்.

நம்ம தொலைநோக்கி உருவாக்கும் பயிற்சியை எங்கள் பள்ளியில் நடத்த திட்டமிட்டு ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை ஒவ்வொரு குழுவிலும் ஐந்து மாணவர்கள் என்று தனித்தனியாக பதிமூன்று குழுவாக பிரித்து தொலைநோக்கியை தயாரிக்க பயிற்சி அளித் தோம்.

முதலில் ஏன் இந்த தொலைநோக்கி ? எதற்க்காக இந்த தொலைநோக்கி ?  எப்படி பயன்படுத்துவது ? எப்படி செயல்படுகிறது ? இந்த தொலைநோக்கி வகைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு புகைப்படங்களுடன் விளக்கினோம்.

ஒவ்வொரு மாணவ குழுவினர்களுக்கும் தொலைநோக்கியை உருவாக்க தேவையான பொருட்கள் ஒவ்வொன்றாக வழங்கப்பட்டது அப்படி வழங்கும் போது அவற்றின் பெயர் அப்பொருள் எந்த பயன்பாட்டிற்கு உதவும் ? மற்றும் எவ்வாறு கையாள வேண்டும் ? என ஒபன் ஸ்பேஸ் பவுண்டேசன் குழுவினரால் சொல்லி கொடுக்கப்பட்டது. 

மாணவ குழுக்கள் தங்களது தொலைநோக்கியை தாங்களே மிகவும் ஆர்வத்துடன் தயார் செய்தார்கள் உடனே பள்ளிக்கு வெளியே கொண்டு சென்று வானத்தை பார்க்க வேண்டும் ஆர்வம் அதற்காக முதலில் தூரத்தில் உள்ள பொருட்களை உற்று நோக்க கற்றுக்கொடுக்கப்பட்டது.

பின்னர் இரவு நேரத்தில் வான்நோக்கும் நிகழ்வு எப்படி உற்று நோக்க வேண்டும் என்பதையும் விளக்கி சொல்லப்பட்டது அத்துடன் எந்த நேரத்தில் விண்வெளி அதிசயங்கள் நிகழும் என்கிற அட்டவணையும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வான்நோக்கு நிகழ்வுகள் எப்படி நிகழும் என்பதும் விளக்கப்பட்டது.

இதற்காக எங்களுடன் ஒத்துழைத்த ஒபன் ஸ்பேஸ் பவுண்டேசன் மற்றும் எங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவர்க்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்…”