ஆளப் பிறந்தோம் – 10

திரு.இள.தினேஷ் பகத்

வெற்றி வேண்டுமா, போட்டுப் பாரடா எதிர்நீச்சல்’’ என்ற பழைய திரைப்படப் பாடலைக் கேட்டு இருக்கிறீர்களா? கேட்கவில்லை எனில், ஒருமுறை இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். வாழ்க்கையில் அடிபட்டு பிரச்சினைகளில் விழுந்து அந்த அனுபவத்தில் இருந்து மீண்டு வருபவர்களே சாதனையாளர்கள்.

‘‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’’ என புத்தர் கூறியது முற்றிலும் உண்மை. ஆனால் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் ஒரு இலட்சிய ஆசை. எந்தச் சூழ்நிலையிலும் அந்த இலட்சியத்தை விட்டு விலகாத விடாமுயற்சியே அவருக்கு வெற்றி மாலையைச் சூடும்.

வாழ்க்கையில் பல தோல்விகளைக் கடந்து வெற்றி பெறுபவர்களை பீனிக்ஸ் பறவையோடு ஒப்பிடுவது வழக்கம். பீனிக்ஸ் பறவை என்று ஒரு பறவை உண்டா? பீனிக்ஸ் பறவை தன் சாம்பலில் இருந்து உயிர்த்து எழும்பி புதிதாய் பிறக்குமாமே உண்மையா? பீனிக்ஸ் பறவை பற்றி பண்டைய கிரேக்க, ரோமானிய புராணக் கதைகளில் தகவல்கள் காணப்படுகின்றன. ஒரு கதையையும் கூறி வருகின்றனர். பீனிக்ஸ் பறவைகக்கு எப்படியாவது சூரியனை தொட்டுவிட வேண்டும் என்ற ஆசையாம். எப்படியாவது சூரியனை தொட்டுவிட வேண்டும் என்ற ஆவலில் சூரியனை நோக்கி விடாப்பிடியாக பறந்து போகுமாம். ஆனால் குறிப்பிட்ட தூரம் வரைதான் பீனிக்ஸ் பறவையால் பறக்க முடியும். அதற்குள் சூரியனின் வெப்பம் தாங்க முடியாமல் உடல் கருகி சாம்பலாகி மண்ணில் விழுந்துவிடுவாம். வீழ்ந்து போனோமே என்று சோர்ந்துவிடாது மீண்டும் சாம்பலை உடலில் பூசிக்கொண்டு புதிய உத்வேகத்தோடு தனது முயற்சியை மேற்கொள்ளும். இது வெற்றி கிடைக்கும் வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இவை யாவும் காலங்காலமாகச் சொல்லப்பட்டு வந்த கதையாக இருக்கலாம். ஆனால் எந்தப் பறவைக்கும் இல்லாத ஒரு சக்தி அதாவது தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை பீனிக்ஸ் பறவைக்கு இருப்பதாக நம்பப்படுகிறது என்பது மட்டும் உண்மை. அதனால்தான் பலமுறை தோல்வி அடைந்திருந்தாலும் மறுபடியும் மறுபடியும் வெற்றியை நோக்கிச் செல்பவர்களை பீனிக்ஸ் பறவைக்கு உவமையாக கூறலாம்.

வணக்கம் தோழர்களே! சென்ற இதழின் தொடர்ச்சியான SSB நேர்காணலில் நாள்-3 (குழு சோதனை-1) எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பார்ப்போம்.

(i) குழு திட்டமிடல் பயிற்சி (GPE)

போட்டியாளர்கள் 10-15 பேர் கொண்ட குழுவாகப் பிரிக்கப்பட்டு பின்னர் சிக்கலான பிரச்சினைகளைக் கொண்ட ஒரு தலைப்பு (கதை) வழங்கப்படுகிறது. போட்டியாளர்கள் பிரச்சினைகளைக் கண்டறிந்து அதற்கான நடைமுறைத் தீர்வை வழங்க வேண்டும்.

(ii) முற்போக்கான குழுப் பணி (PGT)

போட்டியாளர்கள் ஒரு குழுவில் கொடுக்கப்பட்ட
4 தடைகளைக் கடக்க வேண்டும். அவர்களுக்குச் சில உதவிப் பொருட்கள் மற்றும் சில விதிமுறைகளும் வழங்கப்படுகிறது. இதில் போட்டியாளரின் தலைமைப் பண்பு வெளிக்கொணரப்படுகிறது.

(iii) குழுத் தடைப் பந்தயம் (GOR)

ஒவ்வொரு குழுவும் கொடுக்கப்பட்ட 6 தடைகளுக்கு மற்றொரு குழுவுடன் போட்டியிட வேண்டும்.

நாள்-4 (குழு சோதனை-2)

(i) விரிவுரை

ஒவ்வொரு போட்டியாளருக்கும் 4 தலைப்புகள் வழங்கப்படுகின்றன. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து 3 நிமிடங்கள் பேச வேண்டும்.

(ii) தனிப்பட்ட தடைகள் (IO)

ஒவ்வொரு போட்டியாளரும் 3 நிமிட இடைவெளியில் தடைகளை நீக்க வேண்டும். எவ்வளவு தடைகளை நீக்குகிறாரோ, அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.

(iii) கட்டளைப் பணி (CT)

ஒவ்வொரு போட்டியாளரும் மற்ற போட்டியாளரை தனது துணை அதிகாரியாகப் பாவித்து தடைகளைக் கடக்க வேண்டும்.

(iv) இறுதிக் குழு பணி (FGT)

முழுக் குழுவும் மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட பணியினை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும்.

நாள்-5 (மாநாடு)

முந்தைய நாட்களில் போட்டியாளர்களை மதிப்பீடு செய்த அனைத்து அதிகாரிகளும் கலந்துகொள்ளும் வகையில் மாநாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மதிப்பீட்டாளரும் ஒரு போட்டியாளரின் தகுதியைப் பற்றி தங்களுக்குள் விவாதிக்கின்றனர்.

ஒவ்வொரு போட்டியாளருக்கும் தங்களின் மொத்த மதிப்பீடு விவரிக்கப்படும். வாரியத்தின் முன் தனித்தனியாக ஆஜராகி கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்.

SSB Interview முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு போட்டியாளர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு முப்படைகளில் அதிகாரியாகப் பணி அமர்த்தப்படுகிறார்கள்.

இந்தியப் பொறியியல் தேர்வு

அடுத்ததாக UPSC தேர்வு ஆணையம் நடத்தும் இந்தியப் பொறியியல் தேர்வு (IES-Indian
Engineering Service) பற்றி பார்க்கலாம். IES என்பது இந்திய அரசின்கீழ் உள்ள பல்வேறு துறைகளுக்கான பொறியியல் பணிகளுக்கான Group A மற்றும் Group B அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் ஒரு தேர்வாகும்.

  1. கல்வித் தகுதி

இந்தியாவிலே இன்ஜினியர்களுக்கு அதிகச் சம்பளம் வழங்கும் பகுதி இதுதான். இதற்கு கீழ்க்கண்ட 4 பொறியியல் பாடப்பிரிவை படித்தவர்கள் மட்டுமே தகுதி பெறுவர்.

  1. சிவில் இன்ஜினீயரிங்
  2. மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்
  3. எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்
  4. எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்

இதுதவிர, பிற பாடப்பிரிவை படித்தவர்கள் எழுத முடியாது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  1. வயது வரம்பு

பொதுப் பிரிவினர் 21 வயதிலிருந்து 30 வயது வரையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயது வரையும், பட்டியல் இனத்தோர் மற்றும் பழங்குடியினர் 35 வயது வரையிலும் இத்தேர்வை எழுதலாம்.

  1. IES தேர்வு முறை
  2. முதல் கட்டம் – முதல் நிலைத் தேர்வு
  3. இரண்டாம் கட்டம் – முதன்மைத் தேர்வு
  4. இறுதிக் கட்டம் – நேர்முகத் தேர்வு

IES இந்தியப் பொறியியல் பணிக்கு மூன்று கட்டங்களாகத் தேர்வு நடத்தப்பட்டு, இந்த மூன்று கட்டங்களிலும் தேர்ச்சிப் பெற்று தரவரிசையில் முன்னிலை வகிப்பவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இந்த 3 கட்டங்களில் எதில் தோல்வியடைந்தாலும் தேர்வர்கள் மீண்டும் முதலில் இருந்தே தொடங்க வேண்டும்.

  1. முதல் நிலைத் தேர்வு

முதல் நிலைத் தேர்வு இரண்டு கட்டங்களைக் கொண்டது.

Stage Paper Type Duration Marks
Paper-I General Studies and Engineering Aptitude 2 hours 200
Paper-II Engineering Discipline (CE/ME/EE/E&T) 3 hours 300
                 Total Marks   500

Paper-I பாடத்திட்டங்கள்
(Syllabus) உள்ளடக்கிய படிக்க வேண்டிய புத்தகங்கள்

  1. General Studies and Reasoning Aptitude – R.K. Jain
  2. Engineering Ethics – S. Natarajan,
    M. Govindarajan, V.S. Senthilkumar
  3. Quantitative Aptitude for Competitive Exam – R.S. Agarwal
  4. ESE Engineering Aptitude – IES Master Publication
  5. இரண்டாம் கட்டம் – முதன்மைத் தேர்வு

இந்தத் தாள் சிவில் இன்ஜினீயரிங், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன் இன்ஜினீயரிங் இப்பிரிவுகளுக்குப் பொதுவானவை.

Paper-II Engineering Discipline தாளானது மேற்குறிப்பிட்ட 4 பிரிவுகளுக்கும் தனித்தனியாகத் தேர்வு நடைபெறும்.

 

Section Total Marks Number of Questions
Paper-I Civil / Electricial / Mechanical /

Electronics & Telecommunication

300 5 out of 8 optional questions

 

Paper-II Civil / Electricial / Mechanical /

Electronics & Telecommunication

300 5 out of 8 optional questions
Total 600 10 questions

 

IES முதல் நிலைத் தேர்வு (Prelims) Paper-II மற்றும் IES முதன்மைத் தேர்வு (Main) தேர்வுக்கும் பாடத்திட்டங்கள் உள்ளடங்கிய பிரிவு வாரியாகப் படிக்க வேண்டிய புத்தகங்கள் :

IES Book for Civil Engineering

  1. Strength of Material – Stephen Timoshenko
  2. Theory of Structures -S. Ramamrutham & S. Narayan
  3. Project Planning and Control with PERT & CPM – B.C. Punmia & K.K. Khandelwal
  4. Objective type and conventional questions and answers on Civil Engineering for all types of Examination & Interviews – R. Agor

IES Book for Electrical Engineering

  1. Modern Power System Analysis D.P. Kothari, I.J. Nagrath, R.K. Saket
  2. Digital Logic and Computer Design –
    M. Morris Mano
  3. Power Electronics – P.S. Bimbhra
  4. Higher Engineering Mathematics –
    B.S. Grewal

IES Book for Electronics and
Telecommunications Engineering

  1. Taub’s Principles of Communication Systems – McGraw Hill Education
  2. Handbook Electronics & Communication Engineering – Arihant
  3. Principles of Electromagnetics Matthew N.O. Sadiku & S.V. Kulkarni
  4. Callister’s Materials Science and Engineering – Wiley Publications
  5. Question Bank in Electronics & Communication Engineering – J.B. Gupta

IES Books for Mechanical Engineering

  1. Thermodynamics an Engineering Approach -Michael A. Boles and Yunus A Cengel
  2. Industrial Engineering and Management – O.P. Khanna
  3. Mechanics & Materials – Gere and Timoshenko
  4. A Text Book of Theory of Machine – Khurmi and Gupta
  5. A Text Book on Industrial Engineering Robotics and Mechatronics – Made Easy Publications

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள். பிறகு தேர்்ச்சி பெற்றவர்களுக்குப் பணியிடம் ஒதுக்கப்படுகிறது.