கட்டுரை-9

திரு. இள. தினேஷ் பகத்

மது நாடு 77வது சுதந்திர தின நாளை கொண்டாடி மகிழ்ந்து வருகிறது. 1947 ஆகஸ்ட் 15-க்குப் பிறகு பிறந்த நாம் அனைவரும் சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம். நம் நாடு அந்நியருக்கு ஏன் அடிமைப்பட்டது என்று நினைத்துப் பார்த்து இருக்கிறோமா?

நாட்டுப் பற்றில்லாமல் முறையாக நாட்டை பாதுகாக்காமல் இருந்தமையால் வணிகம் செய்யவந்த ஐரோப்பியர்கள் நமது நாட்டை பிடித்துக் கொண்டு ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்குமேல் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். அடிமைத் துன்பம் தாங்காமல் அல்லற்பட்ட இந்திய மக்களில் சந்திக்கும் இயல்புடையவர்கள், நாட்டுப்பற்றுக் கொண்டவர்கள், வீட்டை மறந்தார்கள், தன்னலத்தை துறந்தார்கள், பாரத நாட்டின் விடுதலைக்காகப் போராடினார்கள், சிறைப்பட்டார்கள், சித்ரவதைக்கு ஆளானார்கள். எண்ணற்றோர் செய்த உயிர் தியாகங்களால்தான் நம் நாடு சுதந்திரமடைந்தது.

வணக்கம் தோழர்களே! இந்த இதழில் நாம் UPSC (அகில இந்திய குடிமைப் பணிகள் வாரியம் நடத்தும் (Combined Defence Services Exam) தேர்வு பற்றி பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்பாக நம் தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடி இந்த உலகத்திலேயே யாரும் அனுபவிக்கக் கூடாத ஒரு மரணத்தை ஆங்கிலேய அரசு அவருக்கு வழங்கியது. யார் அவர்? ஏன் இந்த கொடூரம்? ஆங்கில அரசுக்கு அப்படி என்ன செய்தார் அவர்? அவரின் கதையை இந்திய மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். (The Real Master சூரியா சென்) வங்காள மாநில மக்கள் சூரியா சென்னை ‘மாஸ்டர்தா’ என்று அழைத்தனர். காரணம் பள்ளி ஆசிரியரான சூரியா சென் இளம் மாணவர்களைக் கொதித்து எழச்செய்தார்.

ஆங்கிலேயர்கள் துப்பாக்கி, பீரங்கி கொண்டு தாக்கும் போது, கத்தி, வாள் வைத்திருக்கும் நம் பாரத தேசத்து வீரர்களால் போராடி ெஜயிக்க இயலாது என எண்ணி மிகப்ெபரிய திட்டம் ஒன்று வகுக்கிறார் சூரியா சென். பெரிய படைக்கொண்ட ஆங்கிலேயர்களின் போர் ஆயுதக் கிடங்கை வெறும் 65 பேர் கொண்ட குழுவை அமைத்து சிட்டகாங்கில் உள்ள இராணுவ கிடங்கை கைப்பற்றினார். முதலி.ல் இவரது தலைமையிலான குழு ஒன்று தொலைபேசி, தந்தி வசதிகளை செயலிழக்கச் செய்து செய்தித் தொடர்பு அமைப்புகளை முற்றிலும் அழித்துவிட்டனர். இதனால்ா சிட்டகாங் நகரம் நாட்டின் பிற பகுதிகளுடன் செய்தித் தொடர்பு வசதிகளை இழந்தது.

சூரியா சென்னின் மற்றொரு குழுவினர் ஆயுதக் கிடங்கில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் ஆயுதக் கிடங்கை சூறையாடினர். இந்த குழு இரண்டு இராணுவ கிடங்குகளைப் பிடித்துவிட்டாலும் அவற்றுக்குத் தேவையான ரவை அதாவது வெடிமருந்து பொருட்களை அபகரிக்க முடியாமல் திரும்ப நேர்ந்தது. இரவு 10 மணிக்கு நடந்த அந்த திடீர் தாக்குதலில் ஒரு குழு பிடிபட்டு ஆங்கிலேயர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. மற்றொரு சிறு குழு வெற்றிகரமாக ஆயுதக் கிடங்கை மட்டும் பிடித்துவிட்டது. ஆனால் வெடிமருந்து பகுதியை அபகரிக்கச் செய்யும் போது ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் பின்தள்ளப்பட்டு விரட்டப்பட்டனர்.

தன்னுடைய ஆயுதக் கிடங்கையே சூறையாடி சென்ற சூரியா சென்னை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என எண்ணி ஆங்கிலேய இராணுவம் வெறிபிடித்து தேடிக்கொண்டிருந்தது. சூரியா சென் ஆங்கிலேய காவல் துறையிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்துகொண்டே இந்திய விடுதலை இயக்கத்திற்குப் புத்துணர்வு ஊட்டிக்கொண்டே இருந்தார்.

ஒருநாள் அவரது உறவினரான நேத்திரா சென் என்பவரின் வீட்டில் தலைமறைவாக இருந்த போது, ஆங்கிலேய இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டார். சூரியா சென்னைத் தூக்கில் இடுவதற்கு முன்பாக உயிருடன் இருக்கும்போதே அவரது ஒவ்வொரு பற்களையும் குறடால் பிடுங்கி எறிந்தனர். பின்னர் கால்கள் மற்றும் கைகளில் உள்ள அனைத்து மூட்டெலும்புகளையும் சுத்தியால் உடைத்தனர். உணர்விழந்த நிலையில் இருந்த சூரியா சென்னை தூக்கு மேடையில் ஏற்றி தூக்கில் தொங்கவிடப்பட்டு இறந்த பிறகும் திரும்பி விடுவாரோ என்று பயந்து கணத்த இரும்புக் கூண்டுக்குள் அடைக்கப்பட்டு வங்கக் கடலில் தூக்கி வீசப்பட்டார்.

சூரியா சென்னைப் போல எண்ணிலடங்கா பாரதத் தாயின் தவப்புதல்வர்கள் நம் நாட்டின் விடுதலைக்காகப் போராடி தன்னுடைய இன்னுயிர்களைத் தந்து நமக்கெல்லாம் சுதந்திர இந்தியாவை பரிசளித்துச் சென்றுள்ளார். அவர்களின் உயிர்த் தியாகங்களை அனுதினமும் நினைவுகூர்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். மேலும், நாட்டை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும்.

நாட்டினைப் பாதுகாக்கும் முப்படைகளில் தரைப்படை, விமானப்படை, கப்பல் படைகளில் உயர் அதிகாரிகளாக பணியாற்றக் கூடிய வாய்ப்பினை வழங்க கூடிய UPSC-தேர்வாணையத்தால் நடத்தப்படும் (Combined Defence Services) தேர்வுக்கு எவ்வாறு தயாராவது? இந்த தேர்வில் கலந்துக் கொள்வதற்கான தகுதிகள் என்ன? பாடத் திட்டங்கள் என்ன? போன்ற விவரங்களைப் பார்க்க இருக்கிறோம்.

(i)      கல்வித் தகுதி

  1. Indian Military Academy & Officer’s Training Academy – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  2. Indian Naval Academy – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பொறியியலில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  3. Air Force Academy – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அறிவியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் (இயற்பியல் (ம) கணிதப் பாடத்துடன் (அல்லது) பொறியியலில் இளநிலைப் பட்டம்) பெற்றிருக்க வேண்டும்.

(ii)     வயது வரம்பு

20 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் CDS ேதர்வில் பங்குபெறலாம்.

(iii) பாலினத் தகுதி

  1. Indian Military Academy & Indian Naval Academy – திருமணமாகாத ஆண்கள் மட்டும்
  2. India Airforce Academy – திருமணமான (ம) திருமணமாகாத ஆண்கள் மட்டும்
  3. Officer Training Academy – திருமணமாகாத ஆண்கள் (ம) பெண்கள் மட்டும்

(iv) தேர்ந்தெடுக்கும் முறைகள்

  1. எழுத்துத் தேர்வு
  2. SSB Interview / Personality Test
  3. Document Verification
  4. Medical Examination

எழுத்துத் ேதர்வு Indian Military Academy, Indian Naval Academy and Air Force Academy-க்கு Officer Training Academy-க்கு என கீழ்க்கண்டவாறு நடைபெறும்.

Indian Military Academy, Indian Naval Academy and Air Force Academy
S.No.                Subject                Maximum Marks                Duration
1. English                120                2 hours
2. General Knowledge                120                2 hours
3. Elementary Mathematics                100                2 hours
Officer’s Training Academy
S.No. Subject                Maximum Marks                Duration
1. English                100                2 hours
2. General Knowledge                100                2 hours

* எழுத்துத் தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலம் (ம) இந்தி வடிவத்தில் இருக்கும்.

* கொள்குறி வகை வினாக்கள் தேர்வில் கேட்கப்படும்.

* Negative மதிப்பெண் 1/3 என்ற முறையில் கழிக்கப்படும். (அதாவது ஒவ்வொரு தவறான பதிலுக்கும் அந்த கேள்வியின் மொத்த மதிப்பெண்கள் 1/3 கழிக்கப்படும். (எ.கா.) கேள்விக்கு 2 மதிப்பெக்ள் என்பதால் அதில் 1/3, அதாவது 0.66 மதிப்பெண்கள் விடை தவறாக இருந்தால் கழிக்கப்படும்).

* எனவே, நன்கு தெரிந்த வினாக்களுக்கு மட்டுமே விடையளிக்க ேவண்டும்.

(v) CDS எழுத்துத் தேர்வுக்கான பாடத் திட்டம் (ம) படிக்க வேண்டிய புத்தகங்கள்

தேர்வுத் தாள்          படிக்க வேண்டிய பாட தலைப்புகள்                   படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல்

English * Idioms and Phrases 1. Objective General English – SP Bakshi

2. Word Power Mady Easy – Normen Lewis

3. High School English Grammar and

Compositon – Wren and Martin

* Fill in the blank questions
* Spotting Errors questions
* Sentence Arrrangement questions
* Selecting words
* Synonyms & Antonyms of ordering
of sentence
* Comprehension questions
* Ordering of words in sentence  
General

Knowledge

* Econimics 1. News Paper –

The Indian Express & Hindu

* Physics
* Politics 2. Monthly Magazine

Pratiyagita Darpan Editorial

* Sociology
* History 3. Year Book’s

India Year Book & Manorama

* Geography
* Current Affairs 4. General Awareness

Arihant Publications – Manohar Panday

* Chemistry
* Defence Related Awards
* Biology
* Spots
* Books
* Environment
Elementary

Mathematics

* Algebra 1. Quantitative Aptitude for Competititve

Examinations – R.S. Aggarwal

2. Mathematics of CDS – R.S. Aggarwal

3. Pathfinder for CDS-Arihant Publications

* Arithematic
* Trigonometry
* Geometry
* Monsuration  
* Statistics  

CDS எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் SSB என்று அழைக்கப்படும் Service Selection Board நடத்தும் 5 நாள் சோதனை (ம) செயல்முறையில் வெற்றிப் பெற்று, மருத்துவப் பரிசோதனை (ம) ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே முப்படைகளில் அதிகாரியாக ஒருவர் சேரலாம்.

SSB நேர்காணல் கடினமான (ம) நீண்ட நேர்காணல்களைக் கொண்டது. SSB நேர்காணல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

நாள்-1 (திரையாடல்)

ஒரு படம் 30 விநாடிகளுக்குக் காட்டப்படும். அதைத் தேர்வர்கள் 4 நிமிடங்களில் அந்தப் படத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு கதையை எழுத வேண்டும்.

குழு விவாதம் முறையில் தேர்வர்கள் தாங்கள் எழுதிய கதைகளைப் பிற தேர்வர்களுக்கு விவரிக்க வேண்டும் (ம) விவாதிக்க வேண்டும். மேலும் பொதுவான ஒருமித்த கருத்தை அடைய வேண்டும்.

40 கேள்விகள் கொண்ட 2 தேர்வுகள் தேர்வர்களின் நுண்ணறிவு மதிப்பீடு செய்வதற்கு நடத்தப்படும்.

நாள்-2 (உளவியல் ேசாதனை)

இரண்டாம் நாளில் உளவியல் சோதனை நான்கு விதமான சோதனைகள் செய்யப்படும்.

(i) கருப்பொருள் பார்வைத் தேர்வு (TAT)

தேர்வர்களுக்கு தொடர்ச்சியாக 12 படங்கள் காட்டப்படும். பின்னர் 4 நிமிடங்களுக்குள் அந்தப் படத்தினை ஒட்டிய பொருத்தமான கதையினை எழுத வேண்டும்.

(ii) வார்த்தை இணைப்பு சோதனை (WAT)

60 வார்த்தைகள் ஒவ்வொருவருக்கும் 15 வினாடி காட்டப்படும். மேலும் அந்த வார்த்தையைப் பார்த்து தங்கள் மனதில் தோன்றும் வாக்கியத்தை எழுத வேண்டும்.

(iii) சூழ்நிலை எதிர்வினை சோதனை (SRT)

60 நிஜ வாழ்க்கையைக் கொண்ட வினாத்தாள் தேர்வர்களுக்கு வழங்கப்படும். தேர்வர்கள் அந்த சூழ்நிலைக்கான எதிர்வினைகளை 30 நிமிடங்களுக்குள் எழுதவேண்டும்.

(iv) சுய விளக்க சோதனை (SDT)

கொடுக்கப்பட்ட சூழலுக்குத் தங்கள் சுயவிளக்கத்தை உள்ளடக்கிய சில பத்திகளைத் தேர்வர்கள் எழுத ேவண்டும். உதாரணமாக தேர்வர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் போன்றவர்களின் கருத்துகளையும் தேர்வர்கள் வளர்க்க விரும்பும் குணங்களையும் 15 நிமிடங்களுக்குள் எழுதவேண்டும்.

இதன் தொடர்ச்சியை அடுத்த இதழில் பார்க்கலாம். நன்றி!