ஆளப் பிறந்தோம் – 8

திரு. இள. தினேஷ் பகத்

 ‘‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்’’                  (குறள் 620)

இந்தக் குறளின் பொருள் மனச்சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சி செய்பவர் விதியையும் புறந்தள்ளிவிட்டு வெற்றி காண்பர்.

நம்மில் பலர் ஏதோ ஒரு சில போட்டித் தேர்வுகளில் பங்கேற்றுவிட்டு முழுமையாகத் தயாராகாமல் அரைகுறையாகப் படித்து தேர்வு எழுதி தேர்ச்சியுற்று எதாவது ஒரு தனியார் வேலைகளுக்குச் சென்று நானும் அரசாங்க போட்டித் தேர்வுக்குப் படித்தேன். ‘‘என் தலை எழுத்து, என்னால் தேர்ச்சி பெற முடியவில்லை’’ என நொந்துக் கொண்டே காலத்தைத் தள்ளுகின்றனர்.

ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் எல்லாம் விதிவிட்ட வழி என்று முடங்கிக் கிடக்காமல் தொடர்ந்து முயற்சி செய்பவருக்கு நிச்சயம் வெற்றி கிட்டும். ஆதலால் எவரும் விதியைக் காரணங்காட்டி முடங்கிக் கிடக்கக் கூடாது. விதியையும் புறந்தள்ளி முன்னேறி வைக்க வல்லமை உடையது விடாமுயற்சி. ஆகவே, தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருப்பவர் விதியை வீழ்த்தி வெற்றி பெறுவது நிச்சயம் என்கிறார்.

என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம். கடந்த இதழில் SSC(CGL) தேர்வில் வெற்றிப் பெறுவதற்கான பல்வேறு யுத்திகளைப் பார்த்தோம். இந்த இதழில் SSC (CHSL) என்று அழைக்கப்படும் Combined Higher Secondary Level தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்க இருக்கிறோம்.

CHSL தேர்வின் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில், கீழ்க்கண்ட துறைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

  1. Postal Assistants
  2. Sorting Assistants (SA)
  3. Data Entry Operator
  4. Lower Divisional Clerk
  5. Junior Secretarial Assistant

(i) கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் (அ) பல்கலைக்கழகத்தில் 12-ஆம் வகுப்புக்கு இணையான கல்வித் தகுதி பெற்ற அனைவரும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

(ii) வயது வரம்பு

  1. பொதுப் பிரிவினர் (General) – 18 வயது முதல் 27 வயது வரை
  2. பிற்படுத்தப்பட்டோர் (ம) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (OBC) – 18 வயது முதல் 30 வயது வரை
  3. பட்டியல்/பழங்குடியினர் – 18 வயது முதல் 32 வயது வரை

(ஒரு சில பதவிகளுக்குக் குறிப்பிட்ட வயதிற்குள் இருக்க வேண்டும்)

(iii) தேர்வு முறை

SSC (CHSC) தேர்வு Tier-1 (ம) SSC (CHSC) தேர்வு Tier-2 என இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது.

(iv) SSC (CHSC) Tier-1 தேர்வு முறை

இந்த Tier-1 தேர்வு (Online Mode) கணினி வழியாக (ம) கட்டுரை எழுதும் வகையிலும் நடத்தப்படுகிறது.

முதலில் 100 வினாக்கள் தலைப்பின் கீழ் தலா 25 வினாக்கள் வீதம் 200 மதிப்பெண்களுக்கு கணினி வழியாக (Online) 1 மணிநேரத்திற்கு நடைபெறும்.

Sl.No. Section No.of Questions Total

Marks

1. General

Intelligence

25 50
2. General

Awareness

25 50
3. Quantitative

Aptitude

25 50
4. English

Language

25 50
  Total 100 200

 

அடுத்ததாக கட்டுரை வடிவில் விடையளிக்கும் வகையில் 100 மதிப்பெண்களுக்கு 1 மணிநேரத்திற்கு விடையளிக்கும் வகையில் தேர்வு நடைபெறும்.

SSC (CHSC) Tier-1-ல் தவறாக விடையளிக்கப்பட்ட ஒவ்வொரு வினாவுக்கும் தலா ½ மதிப்பெண் கழித்தம் செய்யப்படும். SSC (CHSC) Tier-2-இல் தவறாக விடையறுக்கப்பட்ட ஒவ்வொரு வினாவுக்கும் தலா 1 மதிப்பெண் கழித்தம் செய்யப்படும்.

(v) SSC (CHSL) Tier-1 தேர்வு முறை
Session Section Modules Subject No.of Marks Time
Session-1 Section-1 Module-1 Mathes 30 60 x 3 = 180 1 hour
(2 hours 15 minutes)   Module-2 Reasoning and

Intelligence

30
  Section-2 Module-1 English Language 40 60 x 3 = 180 1 hour
  Module-2 General Awareness 20  
Section-3 Module-1 Computer

Knowledge

15 15 x 3 = 45 15 minutes
Session-II Section-3 Module-2 Skill Test/Typing Test Module
(15 minutes)     Part-A     5 minutes
      Part-B     10 minutes

 

SSC (CHSC) தேர்வுக்கான பாடத் திட்டங்களை (Syllabus) பணியாளர் தேர்வு வாரியத்தின் ssc.nic.in
இணையப் பக்கத்தில் தரவு இறக்கிவிடுங்கள். Syllabus-இன்படி ஒவ்வொரு பாடமாக படிக்கத் தொடங்குங்கள்.

ஏற்கெனவே, கடந்த இதழில் SSC (CGL) தேர்வுக்குப் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்ன என்று குறிப்பிட்டு இருந்தேன்.

SSC (CGL) தேர்வாக இருந்தாலும் சரி,

SSC (CHSL) தேர்வாக இருந்தாலும் சரி,

SSC (MTS) தேர்வாக இருந்தாலும் சரி,

படிக்க வேண்டிய பாடத்திட்டங்கள் ஒன்றுதான். கேட்கப்படும் வினாக்களின் தன்மை மட்டுமே வேறுபட்டு இருக்கும்.

SSC (CGL) தேர்வில் வினாக்கள் சற்று கடினமாகவும், SSC (CHSL) தேர்வில் சுலபமாகவும், SSC (MTS) தேர்வில் மிகவும் சுலபமாகவும் வினாக்கள் அமையப் பெற்றிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பெரும்பாலும் தமிழக இளைஞர்கள் மத்திய பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் கலந்துகொள்வதில்லை. அரிதினும் அரிதாக ஒரு சிலரே இத்தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி  பெறுகின்றனர்.

நாளைய நம்பிக்கை நாயகர்களே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC) நடத்தும் தேர்வுக்காக மட்டுமே தமிழக இளைஞர்கள் தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்த தேர்வுகளில் மட்டும் அதிக போட்டிகள் (Competition) நிலவி வருகின்றது. அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேர்வுகளில் நமது தமிழக மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டு வெற்றி பெற்று மத்திய அரசுப் பணிகளில் அமர வேண்டும்.

போட்டித் தேர்வு வகுப்புகளில் மாணவர்களிடம் மத்திய அரசுப் பணித் தேர்வுகளுக்கு ஏன் விண்ணப்பம் செய்யவில்லை என்று கேட்டும் ஒவ்வொரு முறையும் மாணவர்கள் சொல்வது இதுதான். ‘‘சார் நான் அரசுப் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தேன்; எனக்கு ஆங்கிலம் வராது சார்’’. இதுபோல பதில்கள்தான் கூறப்படுகின்றன.

நம் ஒவ்வொருவரின் பதிலும் இதுதான் அரிமாக்களே! கடந்த மாதம் விண்ணை முட்டும் சாதனையை செய்த, சந்திரனை தொட்ட சந்திராயன்-3 விண்கலத்தை உருவாக்கியது, அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் படித்த, அறிவியல் விஞ்ஞானி திரு. வீர முத்துவேல் அவர்களின் சாதனைகளை நினைவுகூர்ந்து பாருங்கள். ஏன், சந்திராயன்-1, சந்திராயன்-2 திட்ட இயக்குனர்கள் திரு. மயில்சாமி அண்ணாதுரை, திருமதி. முத்தையா வனிதா, அக்னியின் தந்தை APJ அப்துல் கலாம் ஐயா அவர்களாக இருக்கட்டும், ISRO முன்னாள் தலைவர் திரு. K. சிவனாக இருக்கட்டும். இவர்கள் எல்லாம் அரசுப் பள்ளிகளில் பயின்று நாடு போற்றும் விஞ்ஞானிகள் ஆன கதைகளைக் கேட்டது இல்லையா?

ஏன், இனிமேல் தயக்கம் “English is just language not a knowledge”. ஆங்கிலம் என்பது வெறும் மொழி மட்டுமே; அறிவல்ல என்று அறிஞர்கள் பலர் கூறி கேட்டது இல்லையா?

வாருங்கள் தோழர்களே! இனி ஒரு விதி செய்வோம். அடுத்த இதழில் UPSC அகில இந்தியக் குடிமைப்பணி வாரியம் நடத்தும் பிற தேர்வுகள் பற்றிப் பார்க்க இருக்கிறோம். நன்றி