ஆளப் பிறந்தோம்-5

திரு. இள. தினேஷ் பகத்

ம் கண்களையும், மனதையும் அதிகம் கவருவது அழகு தான். நாம் அழகாகத் தோன்ற வேண்டும் என்று நினைப்பது இயல்பே. அழகைப் பற்றி நம் ஒவ்வொருவரின் மதிப்பீடுகளும் அளவுகளும் நிறைய உள்ளது.அழகு என்பது பல்வகைப்பட்டது. நிறம், தோற்றம் என்ற வரையறைகள் அழகிற்கு இல்லை. நீங்கள் உங்கள் அழகைக் கூட்ட நினைக்கும் போது அல்லது நீங்கள் உங்கள் மனதளவில் எவருடனாவது தம்மை ஒப்பிட்டு நாம் அழகாக இல்லை என்று நினைத்தால் உங்கள் அளவுகோலை மாற்றுங்கள். நாலடியாரின் இந்தப் பாடலை நினைவு கூறுங்கள்.

நாலடியார் – பாடல் 131

“குஞ்சி யழகும் ெகாடுத்தானைக் ேகாட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – ெநஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு”

இப்பாடலுக்கான பொருள்

குஞ்சி என்பது ஆண் தலைமுடி ஆகும். அந்தக் குடுமியின் அழகும் (அந்தக் காலத்தில் ஆண்கள்குடுமி வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது) முந்தானையில் கரையிட்ட அழகும், மஞ்சள் பூசுவதினால் ஏற்படும் அழகும் அழகல்ல. கல்வியினால் நாம் பெறும் அறநெறி தவறாத வாழ்க்கையை ஏனைய ெபாருட்கள் தரும் தோற்ற அழகோடு ஒப்பிடும்ேபாது நாம் உண்மை நெறிக்கு ஏற்ப நடுவுநிலைமையுடன் வாழ்கிறோம் என்ற பெருமிதமும், அப்படி வாழ்வதற்கான நெறிகளைக் கற்றுத்தந்த கல்வியினால் நாம் பெறும் அழகே உண்மையான அழகாகும்.

என் சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம். கடந்த ெதாடர்களில் UPSC முதல் நிலைத்தேர்வு (ம) மெயின் தேர்வுகளின் பாடத்திட்டம், படிக்க வேண்டிய புத்தகங்கள் என்ன என்று பார்த்தோம்.

இந்த தொடரில் நேர்காணல்தேர்வு(ம)நேர்காணலில் தேர்வரிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன போன்ற விவரங்களைப் பாா்க்க இருக்கிறோம்.

முதல்நிலை (ம) முதன்மைதேர்வுகளின் மூலம் தேர்வர்களின் பொது அறிவு (ம) எழுதும் திறன் போன்றவை சோதிப்பதாக அமைந்திருக்கும். ஆனால் நேர்முகத் தேர்வு என்பது தேர்வர்களின் பொதுவான அறிவு (ம) தன்னைப் பற்றியும், தன்னுடைய மாநிலத்திலும், தேசத்திலும் உள்ளேயும் வெளியேயும் நடக்கும் நிகழ்வுகள் பற்றியும், சமூகப் பண்புகள் நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொள்வதில் ஈடுபாடு (ம) புதுமையான நிகழ்வுகள் பற்றிய எண்ணங்கள் (ம) இளைய தலைமுறையினரின் புதிய முயற்சிகளை வெளிக்கொணரக் கூடிய ஆர்வத்தினை தூண்டுவதே நேர்காணலின் முக்கிய நோக்கமாகும்.

UPSC நேர்காணல் தேர்வில் தேர்வரிடமிருந்து எதிர்பார்ப்பது என்ன? என்பதைப் பார்ப்போம்.

நேர்காணல் நடைபெறுவதற்கு முன்பே தேர்வாணையத்திடம் தெரிவு செய்யப்பட்டவர் பற்றிய முழு விபரமும் (Detailed Application Form) இருக்கும். அதை ஒட்டியே கேள்விகளை எழுப்புவர்.

UPSC ஆட்சிப் பணிக்கான நேர்காணல் என்பது ‘ஆளுமைத் தேர்வு’ என்பதாகும். இதன் குறிக்கோள் பணிநாடுநரின் ஆளுமையை மதிப்பீடு செய்வதாகவும், அவர் திறமையான நிர்வாகத் தகுதி வாய்ந்தவரா, இல்லையா என்பதையும் மதிப்பிடுவதாகவும் இருக்கும். ஆகையால் நேர்முகத் தேர்விற்கு சரியான முறையில் திட்டமிடல் அவசியம்.

நேர்முகத் தேர்வுக்குத் தயார் செய்தல் என்பது ஒரு தொடர் நிகழ்வு. முதல்நிலைத் தேர்வு (ம) முதன்மைத் தேர்விற்கும் படிக்கும் போது நேர்முகத் தேர்வுக்கும் சேர்த்து தயார் செய்து கொள்ள வேண்டும்.

அதிகமான புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் (ம) பத்திரிக்கைகள் (ம) தினசரிகள் ஆழ்ந்து படித்தல் (ம) நல்ல உச்சரிப்புடன் கூடிய கலந்துரையாடல் திறனை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

நேர்காணலில் தெளிவாகப் பதிலை வெளிப்படுத்த வேண்டும்.

எளிமையாகக் கூறல் (ம) விவாதத்தினை முறையாகப் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

வெவ்வேறு கண்ணோட்டத்தில் நிகழ்வினை சமூக, பொருளாதார ரீதியில் அணுகுதல், அதுபற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

நேர்முகத் தேர்வில் தேர்வுக்குழு தேர்வர்களின் சில பண்புகளை உற்றுநோக்கி, இவர் ஆட்சிப் பணிக்கு தகுதியானவரா? இல்லையா? என முடிவு செய்வார்கள்.

தன்னைப் பற்றியும், தன்னுடைய பொழுது போக்கு பற்றியும், தன்னுடைய இதர திறமைகளைச் சார்ந்தும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தயாராக இருத்தல் வேண்டும்.

நேர்முகத் தேர்வில் தேர்வர்கள் தங்களின் அறிவுத்திறன் மட்டுமின்றி, அவருடைய முழுமையான ஆளுமை வளர்ச்சி, நேர்மை, விழிப்புணர்வு, நாணயம், தலைமைப் பண்பு ஆகிய பண்புகளை வெளிப்படுத்தும் விதமாக பதில் அளிக்க வேண்டும்.

மேலும், தவறான எண்ணங்களுக்கு இடமளிக்காதவராகவும், இறுக்கமான சூழலையும் கையாளும் திறன் உடையவராகவும் இருக்கிறாரா என்பதனை தேர்வுக்குழு உற்றுநோக்கும்.

நேர்முகத் தேர்வில் பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்

  1. தேர்வரின் பெயர் தொடர்பான பிரபலமான புகழ்பெற்ற நபர்கள் பற்றிய தொடர்பான கேள்விகள்.
  2. தேர்வரின் ெசாந்த ஊர், மாவட்டம் (ம) மாநிலம் தொடர்பான கேள்விகள்.
  3. தேர்வரின் விண்ணப்பத்தில் தெரிவித்த தகவல்கள் தொடர்பான கேள்விகள்.
  4. தேர்வரின் குறிக்கோள் (ம) குடிமைப் பணியைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணம்.
  5. சமீபத்திய செய்திகளில் தேர்வரின் விருப்பப் பாடத்தோடு தொடர்பு இருந்தால் அதைச் சார்ந்த கேள்விகள்.
  6. தேர்வர் விரும்பும் பொழுதுபோக்குகள், ஏன் அந்த பொழுதுபோக்கினை தேர்ந்தெடுத்தீர்கள் என்பன போன்ற கேள்விகள்.
  7. சூழ்நிலை சார்ந்த கேள்விகள் (முக்கியமான சூழ்நிலைகளை வைத்து நீங்கள் அந்தப் பொறுப்பில் இருந்தால் என்ன செய்வீர்கள்) என்பது போன்ற கேள்விகள்.
  8. சமீபத்திய முக்கிய நிகழ்வுகள்/நிதிக்குழு தொடர்பானவை/பெண்கள் (ம) குழந்தைகள் மீதான வன்முறை அதற்கு அரசு எடுத்த எதிர்வினை/முக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு/விளையாட்டுப் போட்டிகள்/நேர்காணலுக்கு செல்லும் போது நிகழும் முக்கிய நிகழ்வுகள் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும்.

இறுதியாக UPSC (அகில இந்திய ஆட்சிப் பணிக்கு) சேர விரும்புபவர்கள் எப்பொழுதிலிருந்து தயாராக வேண்டும்? புதிதாக இத்தேர்விற்கு தயாராகுபவர்கள் எங்கிருந்து தயாராக வேண்டும்? தினமும் எவ்வளவு நேரம் தயாராக வேண்டும்? விருப்பப் பாடத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? ஆங்கிலத்தில் மிகவும் புலமைப் பெற்றிருக்க வேண்டுமா? இத்தேர்வினை எதிர்க்கொள்ள பயிற்சி நிலையம் அவசியமா? இலவசமாக UPSC தேர்விற்கு பயிற்சி மையம் செயல்படுகிறதா? போன்ற கேள்விகள் தேர்வர்களுக்கு இருக்கும். ஒவ்வொன்றாக இந்த கேள்விகளுக்கான விளக்கத்தைப் பார்ப்போம்.

  1. குடிமைப் பணி ேதர்விற்கு எப்பொழுதிலிருந்து தயாராகலாம்?

ஒருவர் தங்களுடைய பள்ளிப் படிப்பு முடித்தவுடனே குடிமைப்பணித் தேர்விற்கு தயாராவது சிறப்பானது ஆகும். சிலர் போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கு உகந்த பாடப் பிரிவுகளை பட்டப் படிப்பிற்கும் தேர்வு செய்கின்றனர். பட்டப் படிப்பிற்கு எந்த பாதிப்பும் இல்லாமல், கவனம் முழுவதும் பட்டப் படிப்பை வெற்றிகரமாக முடிப்பதில் ஆர்வமாக இருந்துகொண்டே குடிமைப் பணித் தேர்விற்கும் தயாராகலாம்.

  1. புதிதாகக் குடிமைப் பணித்தேர்விற்குத் தயார் செய்பவர்கள் எங்கிருந்து தயாராக வேண்டும்?

புதிதாக இத்தேர்விற்குப் படிக்க துவங்குபவர்கள், தினசரி ஒரு ஆங்கிலம் (ம) ஒரு தமிழ் செய்தித்தாள் வாசித்தலில் இருந்தே துவங்க வேண்டும். நாளிதழ்களில் வரும் ெசய்திகளை அப்படியே உள்வாங்காமல் ஏன்? எதற்காக இந்தச் செய்தி வந்துள்ளது? இந்தச் செய்தியின் பின்புலம் என்ன? இதன் தாக்கம் சமூகத்தில் எவ்வாறு இருக்கும்? என அலசி ஆராய்ந்து பணித்தேர்விற்குத் தயார் செய்வதற்கான அடிப்படை ஆகும்.

  1. விருப்பப் பாடத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

விருப்பப் பாடத்தினைத் தெரிவு செய்வதற்கு முன்பு இத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள், எந்த விருப்பப் பாடம் எளிமையானதாக இருக்கும், இத்தேர்விற்கு தயாராகி கொண்டு இருக்கும் பிற போட்டியாளர்களை சந்தித்து ஆலோசனைகளைக் கேட்ட பிறகு விருப்பப் பாடத்தைத் தேர்வு செய்யலாம். முக்கியமாக நாம் தேர்ந்தெடுக்கும் விருப்பப் பாடம் பொது அறிவுத்தாளில் ஏதாவது ஒன்றுக்கு உதவி புரிகிறதா என்ற கோணத்திலும் ஆராய்ந்து தேர்வு செய்யலாம். (எ.கா.) Geography விருப்பப் பாடமாக தேர்ந்தெடுத்தால் முதன்மைத் தேர்விலும் Geography உதவியாக இருக்கும்.

  1. தமிழில் எவ்வாறு தயார் செய்வது?

தமிழில் தயார் செய்வது என்று முடிவெடுத்துவிட்டால் முதலில் நாம் நமது ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் முதல்நிலை (ம) முதன்மைத் தேர்வுகளில் வினாக்கள் ஆங்கிலம் (ம) இந்தி படிவத்திலேயே அமைந்திருக்கும்.

  1. தினமும் எவ்வளவு நேரம் படிக்க வேண்டும்?

வெற்றி பெற்றவர்கள் அனைவரும் நம்மில் ஒருவரே. பிறக்கும் போது கற்றுக்கொண்டே பிறக்கவில்லை; வேற்றுகிரக வாசிகளும் அல்ல. பொதுவாக அனைவருக்கும் உறக்கம் 6 மணியிலிருந்து 8 மணிநேரம் அவசியம். தினமும் 5-லிருந்து 10 மணிநேரம் தீவிர வாசிப்பு தேவை.

  1. பயிற்சி நிலையத்தில் சேர்ந்துதான் படிக்க வேண்டுமா?

தற்போது கைப்பேசியுகம் செயல்படுகிறது என்றே கூறலாம். தற்போதைய தகவல் தொழில்நுட்ப இணைய வளர்ச்சியினால் குக்கிராமத்திலிருந்துகூட தயாராக முடியும். முன்பெல்லாம் குடிமைப் பணித்தேர்வு என்றாலே பயிற்சி பெற மாணவர்கள் டெல்லி சென்று வந்தனர். அங்கு சென்று படித்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற மாயை இருந்தது. ஆனால் தற்போது சென்னையிலேயே தரமான பயிற்சி நிலையங்கள் செயல்படுகின்றது.

  1. இலவசமாக பயிற்சி நிலையம் செயல்படுகிறதா?

தமிழக அரசு ஆண்டுதோறும் இலவச நுழைவுத் தேர்வுகளை நடத்தி இலவசத் தங்குமிடம் (ம) உணவுடன் கூடிய இலவசப் பயிற்சிகளை மாணவர்களுக்கு சென்னையில் வழங்குகிறது. அதில் சேர இந்த இணைய முகவரியினை பாருங்கள் (http://www.civilservicecoaching.com).

நன்றி, அடுத்த இதழில் பணியாளர் தேர்வு வாரியம் (Staff Selection Commission) மூலம் நடத்தப்படும் தேர்வுகள் என்ன? அதற்கு எவ்வாறு தயார் செய்வது போன்ற விவரங்களைப் பார்க்க இருக்கிறோம். l