ஆளப் பிறந்தோம்-4
திரு. இள. தினேஷ் பகத்
அறிஞர் பிளாட்டோ. (கி.மு 427 முதல் கி.மு. 347) காலக்கட்டத்தில் வாழ்ந்தவர். பிளாட்டோ கல்வியின் சிறப்பை உணர்ந்திருந்தால் தான் “ஒரு மனிதன் படிக்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே மேல்” என்று கூறியுள்ளார். கடந்த இதழில் முதன்மைத் தேர்வின் அமைப்பு மற்றும் அதற்கான பாடத் திட்டத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியினை இந்த இதழில் பார்க்க இருக்கிறோம்.
Paper-3, General Studies-2
முதன்மைத் தேர்வின், பொது அறிவுத்தாள் பாடத்திட்டம் என்ன? படிக்க வேண்டிய புத்தகங்கள் என்ன? என்பதைப் பார்க்கலாம்.
Indian Constitution historical underpinnings, evalution, features, amendments, significant provisions and basic structure. (இந்திய அரசியலமைப்பு, வரலாற்று கட்டமைப்பு, அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள், அரசியலமைப்பின் திருத்தங்கள், சிறப்பு வாய்ந்த சட்டப் பிரிவுகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு.)
Parliament and state legislature structure, functioning, conduct of business, power privileges and issues arising out of these. (பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றம், அமைப்பு செயல்பாடு, அலுவல்கள் நடைபெறும் விதம், அதிகாரங்கள் மற்றும் சலுகைகள் மற்றும் இவற்றிலிருந்து எழும் புகார்கள்)
Functions and responsibilities of the union and the states, issues and challenges pertaining to the federal structure, devalution of powers and finances upto local levels and challenges therein. (மத்திய மற்றும் மாநில அரசுகளிள் செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகள், கூட்டாச்சி அமைப்பு தொடர்பான சவால்கள் மற்றும் பிரச்சனைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரம் மற்றும் நிதிப் பகிர்வு தொடர்பான சவால்கள்.)
Comparison of the Indian constitutional scheme with that of other countries. (இந்திய அரசியலமைப்புத் திட்டத்தை உலகின் பிறநாட்டு அரசமைப்புத் திட்டங்களோடு ஒப்பீடு செய்தல்.)
Separation of power’s between various organs dispute redressal mechanisms and institutions. (அரசியலமைப்பின் பல்வேறு அங்கங்களுக்கிடையான அதிகாரப் பகிர்வு.)
Issues relating to poverty and hunger. (வறுமை மற்றும் பட்டினி தொடர்பான பிரச்சனைகள்.)
Salient features of the representations of people’s Act. (மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் சிறப்பம்சங்கள்.)
Role of civil services in democracy. (மக்கள் ஆட்சியில் குடிமைப்பணிகளின் பங்களிப்பு.)
Statutory, regulatory and various quasi-judicial bodies. (சட்டமன்ற நிறுவனங்கள், ஒழுங்குமுறை நிறுவனங்கள் மற்றும் நீதி சார்புடைய அமைப்புகள்.)
Important international institutions, agencies and fora, their structure, man data. (முக்கியத் துவம் வாய்ந்த சர்வதேச நிறுவனங்கள், முகாம்கள் மற்றும் மன்றங்கள் ஆகியவற்றின் அமைப்பு மற்றும் ஆணைகள்.)
Issues relating to development and management of social sector/service relating to Health, Education, Human Resources. (சமுதாயத் துறைகள் சார்ந்த மேம்பாடு மற்றும் மேலாண்மை தொடர்பான சிக்கல்கள், மனித வளம், மருத்துவம், கல்வி போன்ற சேவைகள்.)
India and it’s neighbourhood – relations. (இந்தியாவும், அதன் அண்டை நாட்டு உறவுகளும்.)
Development processes and the development industry the role of NGOS. SHGS, Various groups and association’s donor’s, charities,
institutional and other shareholders. (வளர்ச்சிக்கான செயலாக்கம் மற்றும் தொழில்துறை வளர்ச்சி, தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் போன்ற பல்வேறு அமைப்புகள், கொடையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் போன்றவர்களின் பங்களிப்பு.)
General Studies Paper-II பாடத்திற்கு கீழ்க்காணும் புத்தகங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
Indian Polity by M Lakshmikant
Our Parliament by Subhash C. Kashyap
Introduction To The Constitution Of India by D.D.Basu
Governance Constitution & Social Justice by Salman Khurshid & Gaurav Gupta
Polity-க்கான 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள NCERT புத்தகங்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.
அடுத்ததாக, பொது அறிவுத்தாள் – 3க்கான பாடத்திட்டம் என்ன? படிக்க வேண்டிய, புத்தகங்கள் என்ன? என்று பார்க்க இருக்கிறோம்.
Paper-4, General Studies-3
Indian Economy and issues relating to planning, Mobilization of resources, growth, development and employment. (இந்தியப் பொருளாதாரம் மற்றும் திட்டமிடுதல் தொடர்பான பிரச்சனைகள், வளங்களை திரட்டல் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு.
Investment Models (மூலதன மாதிரிகள்)
Government Budgeting (அரசின் நிதி சார்ந்த திட்டமிடுதல்)
Disaster and Disaster Management (பேரிடர் மற்றும் பேரிடர் மேலாண்மை)
Various security forces and agencies and their mandate. (பல்வேறு வகையான பாதுகாப்பு படைகள் மற்றும் முகமைகள் மற்றும் அவற்றின் பயன்கள்)
Security challenges and their management in border areas – linkages of organized crime with terrorism. (எல்லைப் பகுதி பாதுகாப்பில் உருவாகும் சவால்கள் மற்றும் மேலாண்மை, திட்டமிடப்பட்ட குற்றங்களுக்கும் தீவிரவாதத்திற்குமிடையேயான தொடர்பு)
Role of external state and non-state actors in creating challenges to Internal security. (உள்நாட்டு பாதுகாப்பில் சவால்கள் ஏற்படுத்தும் வெளிநாட்டு அரசு சார்ந்த / சாதாரண நபர்கள் நிறுவனங்களின் பங்களிப்பு)
Land reforms in India. (இந்தியாவில் நிலச் சீர் திருத்தம்)
Science and Technology, developments and their applications and effects in everyday life. (அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு, மேம்பாடு மற்றும் அன்றாட வாழ்வில் இவற்றின் பயன்பாடுகள் மற்றும் ஏற்படுத்திய தாக்கங்கள்)
Awareness in the field of IT space, Computers, Robotics, Nano-technology, Bio-Technology and Issues relating to intellectual Properly rights. (தகவல் தொழில் நுட்பம், விண்வெளி கணினிகள், எந்திரவியல், நானோ தொழில்நுட்பம் ஆகியவற்றில் விழிப்புணர்வு மற்றும் அறிவுசார் சொத்துரிமை)
Major crops-cropping patterns in various parts of the country have different types of irrigation and irrigation system storage, transport and marketing of agriculture produce and issues and related constraints, e-technology in the aid of farmers. (முக்கியப் பயிர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயிரிடுதல் முறைகள் மற்றும் பல்வேறு வகையான நீர் பாசன வகைகள் மற்றும் நீர்ப் பாசன சேமிப்பு முறைகள், வேளாண் பொருட்களுக்கான போக்குவரத்து வசதி மற்றும் சந்தைப்படுத்துதலில் உள்ள பிரச்சனைகள் மற்றும் அது தொடர்பான தடைகள், விவசாயிகளுக்கு உதவக்கூடிய மின் தொழில்நுட்பங்கள்)
Inclusive growth and issues arising from it. (அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் இதிலிருந்து எழும் பிரச்சனைகள்)
Food processing and related industries in India, scope and significance, location, upstream and downstream requirements, supply chain management. (இந்தியாவில் உணவு பதப்படுத்துதல் தொடர்பான தொழிற்சாலைகள், இலக்கு, தனிமுறை சிறப்பு, அமைவிடம், ஏற்ற இறக்கங்கள், தேவைகள், அளிப்பு சங்கிலி மேம்பாடு)
General studies paper – III பாடத்திற்கு கீழ்க்காணும் புத்தகங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
Indian Economy Book by Ramesh Singh
Challenges to Internal Security of India By Ashok Kumar
Environment & Ecology by R. Rajagopalan
Hindu newspaper and Yojana Magazine (மாத இதழ்)
6th to 12th வரை NCERT புத்தகத்தில் (Disaster management and science and technology) தலைப்பில் கட்டாயம் படிக்க வேண்டும்.
அடுத்ததாக, பொது அறிவுத்தாள்-4 க்கான பாடத்திட்டம் என்ன? படிக்க வேண்டிய புத்தகங்கள் என்ன? பார்ப்போம்.
Paper -5, General studies – 4
Attitude-content, structure, function its influence, and relation with thought and behaviour moral and political attitude, social influence and persuasion. (மனப்பாங்கு-உட்பொருள், அமைப்பு மற்றும் செயல்பாடுகள், சிந்தனை மற்றும் செயல்பாடுகள், மனப்பாங்கின் செல்வாக்கு, நேர்மை சார்ந்த மற்றும் அரசியல் மனப்பாங்கு, சமூக செல்வாக்கு மற்றும் கொள்கைப் பற்று.)
Emotional intelligence, concepts, and their varieties and applications in administration and governance. (உணர்ச்சி அறிவாற்றல், பொதுவான கருத்து, நிர்வாகம் மற்றும் ஆளுகையில் இதன் பயன்பாடுகள்.)
Contributions of moral thinkers and philosophers from India and the world. (இந்தியா மற்றும் உலக நாடுகளின் நெறிச் சிந்தனையாளர்கள் மற்றும் தத்துவவாதிகளின் பங்களிப்பு.)
Ethics and human interface essence, determinants and consequences of ethics in human actions. Dimensions of ethics, in private and public relationships of great leaders. Reformers and administrators role of family, society and education institutions in includely values. (அரசியல் மற்றும் மனித தொடர்பு, அறிவியலின் அடிப்படை மற்றும் மனித செயல்பாடுகளில் அற இயல்பின் உணர்வுகள், அரசியலின் பரிமாணங்கள், பொது மற்றும் தனியார் தொடர்பில் அற இயல். சொந்த வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் சிறந்த தலைவர்கள், சீர்திருத்தவாதிகள் மற்றும் நிர்வாகிகளின் போதனைகள், மனித விழுமியங்களை கற்பித்தலில் குடும்பம், சமுதாயம் மற்றும் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு.)
Aptitude and foundation values for civil service, integrity, impartiality and non partnership, objectivity dedication to public service, empathy, tolerance and compassion towards the weaker section. (குடிமைப் பணிக்கான மனப்பாங்கு மற்றும் விழுமியங்கள், பொது சேவை சார்ந்த அர்ப்பணிப்புடன் கூடிய நேர்மை, நடுநிலைத் தன்மை, இரக்கத்துடன் கூடிய சலிப்புத்தன்மை மற்றும் நலிவுற்ற பிரிவினருக்கான இரக்க உணர்வு.)
Probity in governance, concept of public service, philosophical basis of governance and probity. Information sharing and transparency in government, right to information, codes of ethics, codes of conduct, citizen’s characters, work culture, quality of service delivery, utilisation of public funds, challenges of corruption. (ஆளுகையில் நேர்மை, பொதுக் கருத்து, பகுத்தறிவுச் சிந்தனை சார்ந்த ஆளுகை மற்றும் நேர்மை, தகவல்களைப் பகிர்தல் மற்றும் அரசின் வெளிப்படைத் தன்மை, தகவல் அறியும் உரிமை, நெறிமுறைகளின் தொகுப்பு, நடத்தை விதிகளின் தொகுப்பு, குடிமக்கள் சாசனம், பணக் கலாச்சாரம், சேவையைக் கொண்டு சேர்ப்பதின் பண்பு, பொதுப்பணத்தை பயன்படுத்துதல், ஊழலுக்கான சவால்கள்.)
இந்தப் பகுதியில் இடம்பெறும் வினாக்களைத் தேர்வின் மனப்பாங்கு மற்றும் நேர்மை, ஒழுக்கம், நாணயம் மற்றும் மனப்பாங்கு ஆகியவற்றை பொதுச் சேவையில் அவர் எவ்வாறு அணுகுகிறார் என்பதையும் பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளை சமூகத்துடன் எதிர்கொண்ட போது அவர் வினையாற்றிய விதம் மற்றும் முடிவெடுத்தல் திறன் ஆகியவற்றை பரிசோதிக்கும் வகையிலும் இருக்கும். வினாக்கள் நிகழ்வு (case study) எதிர்கொள்ளுதல் போன்ற கூறுகளைக் கொண்டிருக்கும்.
General studies paper – IV பாடத்திற்கு கீழ்காணும் புத்தகங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
The lexicon for ethics, Integrity & Aptitude
11th and 12th NCERT – psychology
Hindu newspaper
அடுத்ததாக பொது அறிவுத் தாள் 6 மற்றும் 7 தேர்வுகளின் விருப்பப் பாடத்தை சார்ந்தது, மேலும் கீழ்க்கண்ட விருப்பபாடத்தின் பட்டியலிருந்து ஏதேனும் ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
பொது நிர்வாகம் | கட்டடப் பொறியியல் | மேலாண்மை |
சமூகவியல் | இயந்திரவியல் | மனிதம் |
புள்ளியியல் | மருத்துவ அறிவியல் | அரசியல் அறிவியல் |
விலங்கியல் | தத்துவம் | பன்னாட்டு உறவு முறை |
வேளாண்மை | இயற்பியல் | மனோ தத்துவம் |
கால்நடை அறிவியல் | புவியியல் | வணிகம் மற்றும் கணக்கியல் |
மானுடவியல் | மண்ணியல் | பொருளாதாரம் |
தாவரவியல் | வரலாறு | மின்னணு பொறியியல் |
வேதியியல் | சட்டம் |
அடுத்த இதழில் இதன் தொடர்ச்சியைப் பார்க்க இருக்கிறோம் நன்றி…