வாழ்த்துக் கட்டுரை

மதுரை.ஆர்.கணேசன்

முனைவர் கே.ஆர்.சசிகலா

குழந்தைகளுக்கு வழிகாட்டியாக விளங்குபவர்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் மட்டுமல்ல நாட்டில் உள்ள ஆசிரியர்களுக்கும் அளவற்ற பங்குண்டு.!

கல்வியில் மனப்பாடம், செயல்வழி கற்றல் மூலமாக முக்கிய இடங்களுக்கு மாணவர்களை கூட்டி சென்று அனுபவ அறிவை ஊட்டுவது ஒருவழி என்றால், படிப்பே வராது என்ற மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களது மனநிலையை அறிந்து கற்பிக்கச் செய்வது இன்னொரு வழி.!ுழந்தைகளுக்கு வழிகாட்டியாக விளங்குபவர்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் மட்டுமல்ல நாட்டில் உள்ள ஆசிரியர்களுக்கும் அளவற்ற பங்குண்டு.!

அத்தகைய ஆசிரியர்களில் மதுரையை சேர்ந்த ஆசிரியை முனைவர். சசிகலா தன் விடாமுயற்சியால் மாணவர்களை மதிப்பெண்களாலும், சமூக மதிப்புகாளாலும் உயரச் செய்திருக்கிறார்.!

ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் சசிகலா. இவருடைய அண்ணனின் படிப்பை தியாகம் செய்யச் சொல்லியும், அம்மா வயர் கூடை முடைந்தும் படிக்க வைத்திருக்கிறார்கள். காரணம், பெண் குழந்தைக்கு கல்வி முக்கியம் என்பதை அம்மா அதிகமாக அறிந்து வைத்திருந்தார்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதல் மாணவியாக கணிதத்தில் தேர்வாகி தங்க மெடல் பெற்றும், அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலைக் கணித பட்டப்படிப்பும் பல்கலைக்கழக அளவில் ஐந்தாம் இடத்தை பெற்றிருக்கிறார். கல்லூரியில் படிக்கும் போது “சிறந்த மாணவிக்கான.. தங்கப் பதக்கம்” தவிர யுவகலா பாரதி விருதும் பெற்றிருக்கிறார்.

திருமணத்திற்குப் பின்னர் இவரது படிப்பின் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட கணவர் முனைவர் பட்டம் படிப்பதற்கான செயல்பாடுகளை ஆர்வமாக ஈடுபட்டு, ஒத்துழைப்பு தந்திருக்கிறார் அதன் விளைவாக முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியை சசிகலா தன்னுடைய பத்து வருட அனுபவத்தில் மிகவும் நன்றாகப் படித்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் முத்து முத்தான கையெழுத்திலும் ஜொலித்து பயன் பெற்றிருக்கிறார்கள்.

தற்போது மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தா சி.பி.எஸ்.இ., பள்ளியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறார்.

மாணவர்களின் நலனில் அக்கறை கொண்ட ஆசிரியை முனைவர் கே.ஆர்.சசிகலா 35, “.. ஒருசாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். படிக்கணும் என்பதற்காக என் தாயும், தந்தையும் எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தார்கள் எனது தலைமுறையில் முதல் பெண் பட்டதாரி, என்தாய்க்கு ஆசிரியர் பணி மட்டுமே தெரியும் என்பதால் என்னை அதற்காகவே தயார் செய்தார்கள்.

பள்ளியில் பயின்ற போது ராமசுந்தரவல்லி எனது பள்ளி முதல்வராக இருந்தார் பி.எட்., பட்டம் பெற்ற உடனேயே தியாகராஜா பள்ளியில் வேலை கிடைத்தது. அப்போது அவரும் எனது கல்லூரி பேராசிரியர் C.ராமலட்சுமி அவர்களும் இணைந்து மேற்கொண்டு படிக்க அறிவுறுத்திப் பாராட்டி அனுப்பினார்கள் மேலும் இறையன்பு ஐ.ஏ.எஸ்., அவர்கள் கைகளால் நன்றாக படித்ததற்காக முதல்பரிசு மற்றும் பாராட்டுப் பெற்றேன்.

எனக்கு ஆராய்ச்சிப் படிப்பில் அதிக ஆர்வம் இருந்தது. அப்போது எனக்கு
வழிகாட்டுதல் இல்லை. ஆதலால் விஞ்ஞானி ஆகும் கனவு கனவாகவே போய்விட்டது. ஆதலால் மாணவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப
அவர்களைத் தயார் செய்கிறேன்.

மாணவனின் கையெழுத்தை மாற்ற குறைந்தது 60 நாட்களாகும். முதலில், தனிக் கவனம் செலுத்தி ஒருமாணவருக்கு ஒருகோடு போட்ட நோட்டு போடச் சொல்லுவேன் அதில் தினமும் ஒருபக்க அளவுக்கு கையெழுத்தை எழுதணும். நம்ம எழுதிக்கொடுத்து நம்மளோட எழுத்து மாதிரியே அதுல எழுதணும்.

இப்படி 60 நாட்கள் செய்தால் எப்படிப்பட்ட குழந்தையோட கையெழுத்தும் நிச்சயம் மாறும், அதுமட்டுமல்ல, சும்மா திருத்தக்கூடாது. அந்த எழுத்தில் தவறு விடுகிற இடத்தில திருத்தி, எழுத்து வடிவத்தை அப்பப்ப திருத்தி எழுதச் சொல்லனும்.

கணிதப் பாட புத்தகத்திலும் மாணவர்கள் ஈஸியா புரிஞ்சுக்கிற சில கான்செப்ட் இருக்கும், முதல்ல வீக்கா இருக்கிறவங்களுக்கு இந்த கான்செப்ட்டை நடத்தணும், அதுல டெஸ்ட் வைக்கணும்.

அதுல அவங்க அதிக மார்க் வாங்கும் போது அவர்களுடைய சைக்காலஜிக்கல் மேத்ஸ் வராது அப்படி என்ற எண்ணத்தை மாத்தினா போதுங்க, ஆட்டோமேட்டிக்கா மற்ற பாடங்களை ஈசியா படிச்சிடுவாங்க.,

இப்படி என்கிட்ட மார்க் வாங்கின மாணவர்கள் அதிகம். அதிலும் ஒரு மாணவன் வைத்தியநாதன் 95 மதிப்பெண் வாங்கினான். இன்றைக்கும் ஆசிரியர் தினத்தன்று எனக்கு வரும் முதல் விஷ் அவனோடதா தான் இருக்கும்.

மரச்செடிகள் நடச்சொல்லுவேன், ஆம்புலன்ஸ் கிராஸ் பண்ணும் போது அதில் இருப்பவர்களுக்காக ரெண்டு நிமிஷம் இறைவனை கும்பிட
சொல்லுவேன்.

கற்ற கல்வியை சகமாணவர்களிடம் பகிர்ந்து கொள்ளச்சொல்லுங்கள், புத்தகங்கள் பத்திரமாக வைத்துக் கொள்ளச்சொல்லுங்கள், முதல்ல கிழியாமல் பாத்துக்க சொல்லுங்க. யாரிடமும் எந்த பொருளும் கடன் வாங்கி பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் போன்ற நல்லொழுக்கங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன்.

வகுப்பு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே கிளாஸ் வாசல்ல ஒரு 5 மினிட்ஸ் முன்னாடி கிளாஸ் என்ன நடக்கின்றது என்று அப்சர்வ் பண்ணுவேன். அப்படி பண்ணும் போது பிரிவியஸ் கிளாஸ்ல ஏதாவது டீச்சர் திட்டி இருந்தாலும் பசங்கள வந்து கொஞ்சம் கடினமாக நடத்தி இருந்தாலும் நான் பாடம் நடத்துவதை கொஞ்சம் தாமதமாகவே குழந்தைகளிடம் கொஞ்ச நேரம் பேசிட்டு அதுக்கப்புறம் கிளாஸ்ல போகும் போது அவர்களுக்கும் அது ரொம்ப திருப்தியாக இருக்கும்.

ஸ்டூண்ட்டை மைண்ட் ப்ரீயா வாங்க என்பேன். அப்படி இல்லாத பட்சத்தில் நம்ம சும்மா க்ளாஸ் எடுத்துட்டிருந்தாலும், அவங்கள கவனிக்கிற அந்த ஆர்வம் குறைந்து நடத்தின பாடத்தில் பாதி கூட அவுங்க மைண்ட் உள்ளே போகாது. முதல்ல அவங்க நம்ம நடக்கிறதை கேட்கக்கூடிய கவனத்தில் பக்கத்துல இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கணும் அப்பறம் கிளாஸ்
ஆரம்பிக்கணும்.

உதாரணமாக தற்போது பள்ளியில் ஒரு மாணவிக்கு கலெக்டர் ஆகவேண்டும் என்ற லட்சியம். இப்போது அவள் பதினோராம் வகுப்பு படிக்கிறாள், இப்போதே அவளுக்கு தேவையான அறிவுரைகள், வேலை வாய்ப்பு செய்திகள், அரசாங்க தேர்வு தாள்கள் போன்றவற்றை கொடுத்து வருகிறேன்.

ஆசிரியர் பணியில் இருக்கும் ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு மாணவனை தனது சொந்தப் பிள்ளைகளாக எண்ணி உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்கினால் ஒரு நல்ல சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும் என்பதில் எந்தவித ஐயமும் கிடையாது.

மாணவிகள், மாணவர்கள் இருவரையும் முதலில் அவர்களின் மனநிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும் ‘எவ்வாறு படிக்கின்றனர்?’ என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். ஒருசிலர் மனப்பாடம் அதிகமாக செய்வார்கள் ஒருசிலர் புரிந்து மட்டுமே எழுதுவார்கள்.

ஒருசிலர் இரண்டையும் செய்வார்கள் இதில் மனப்பாடம் மட்டும் செய்பவர்களை அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் அவர்களுக்கு எந்த இடத்தில் மதிப்பெண்கள் குறைகின்றன என்பதை
ஆராய்ந்து அதற்கு ஏற்றார்போல் தகுந்த பயிற்சி அளித்தால் அனைத்து மாணவர்களும் வெற்றி பெற செய்யலாம்.

எனது ஆசை மாணவர்கள் அனைவரும் ஒருசேர கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் நடத்த வேண்டும். எந்த மாணவரையும் இவ்வாறாக ஒதுக்கியும் முத்திரை குத்தியும் இழிவுபடுத்தக் கூடாது.

இது அனைத்து ஆசிரியர்களும் செய்ய வேண்டும். பாரபட்சம் மாணவர்களிடையே காட்டக்கூடாது. எனது இலக்கு IAS மற்றும் சிறந்த அதிகாரிகளை உருவாக்க வேண்டும் என்பது தான். என்னிடம் பயிலும் மாணவர்களை அதை நோக்கி தயார் செய்கிறேன்.

படிக்கும் போதே அரசுத் தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வதே எனது மிகப்பெரிய திட்டம். சரியான வழிமுறைகள் தெரியாத மாணவர்களுக்கு அக்கறை காட்டி அவர்கள் இலக்கை அடைவதற்கு உறுதுணையாக இருக்கிறேன்.

இலக்கை முடிவு செய்யுங்கள். இலக்கை நோக்கி பயணியுங்கள். இலக்குக்காக உழையுங்கள். இலக்கை ஒருநாள் அடைய முடியும்..!

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே எந்த விதமான பட்டமும் எந்த விதமான அடைமொழியும் தேவை இல்லை என்பது எனது கருத்து. இருந்தாலும், நல்ல ஆசிரியராக நல்ல மனுஷியாக வாழ வேண்டும் என்பதே எனது
எண்ணம். அந்த வழியில் எம்மாணவர்களையும் நல் வழிப்படுத்துவதில் திருப்தியும், மகிழ்ச்சியும் அடைந்து கொண்டிருக்கிறேன்..”

மாணவர்களிடம் தனிக்கவனம் செலுத்தி அவர்களைச் சாதனையாளர்களாக மாற்றிடத் துணை நிற்கும் முதல்வர். முனைவர் சசிகலா அவர்கள் பணி சிறந்திட ‘ஆளுமைச் சிற்பி’ வாழ்த்துகின்றது.