ஆளப் பிறந்தோம் – 32

திரு. இள. தினேஷ் பகத்
ஆப்பிரிக்கக் காடுகளில் வாழும் அனைத்து விலங்குகளும் தினம் தினம் வாழ்க்கையின் போராட்டத்தைச் சந்திக்கும். கீழ் வானம் சிவக்கும் போது ஒரு பக்கம் மான், மற்றொரு பக்கம் சிங்கம் வந்து நிற்கும். சிங்கத்திற்கு மானைப் பிடித்து உண்ண வேண்டும் என்ற ஒரு வேலை மட்டுமே. ஆனால் மானுக்கோ, சிங்கத்திடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும். காடுகளில் உள்ள புற்களை உண்டு பசியாறவும் வேண்டும் என்ற இரண்டு நிபந்தனைகள் உண்டு. ஒரு வலிமையுள்ள சிங்கம் கிட்டத்தட்ட 10 முறைகளுக்கும் மேல் மானை விரட்டினால் மட்டுமே மானைப் பிடிக்க முடியும். சிங்கத்திடமிருந்து மான் பலமுறை தப்பிக்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் மான் உயிருக்காக ஓடுகிறது; சிங்கம் பசிக்காக ஓடுகிறது.
என் இனிய சகோதர / சகோதரிகளுக்கு வணக்கம்.
நாம் வாழ்க்கையில் இலட்சியத்தை அடைய வேண்டுமென்றால், நம் ஓட்டம் உயிர்க்கான ஓட்டமாக இருக்க வேண்டும். உணவுக்கான ஓட்டமாக இருக்கக் கூடாது. போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகி வருபவர்கள் தனக்கான இலட்சியத்தை நோக்கி ஓடும்போது சிந்தனைச் சிதறல்கள் இல்லாமல் ஓடினால் மட்டுமே அந்த இலக்கினை அடைய முடியும்.
இந்த இதழில் SSC பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் Sub Inspector பணியிடங்களுக்கான அறிவிப்பு வந்துள்ளது. SSC நடத்தும் இந்த உதவி ஆய்வாளர் தேர்வுக்கான முழு விவரத்தினைப் பார்க்கலாம்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலினை எதிர்நோக்கி தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
‘‘வெற்றியை தீர்மானிப்பது ஆயுதங்களல்ல, வெகுமக்களே’’ என்ற உண்மையை ஊருக்குப் பறைசாற்றியது வியட்நாம். அமெரிக்க, பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய வியட்நாமியர்களை ‘‘யானையை எதிர்க்கும் வெட்டுக்கிளிகளின் போர்’’ என்று சொன்னவர்களைப் பார்த்து ஹோசிமின் ‘‘விமானங்களையும் பீரங்கிகளையும் எதிர்க்க மூங்கில் குச்சிகளைத் தவிர நம்மிடம் ஒன்றும் கிடையாது; ஆனால் மார்க்சியமும், லெனினியமும் என்ற வழிகாட்டுதலில் நிகழ்காலத்தை மட்டுமல்ல, எதிர்காலத்தையும் உருவாக்க முடிகிறது. இன்று வெட்டுக்கிளிகள் யானையுடன் சண்டை போடுகிறது; ஆனால் நாளை யானையின் குடல் பிடுங்கியெறியப்படும்’’ என்று சொன்னது உற்சாகப்படுத்த மட்டுமல்ல, உண்மையில் நடந்தேறியது.
தனது வலிமையை காட்ட வேண்டும் என்பதற்காக சரணடைந்த ஜப்பானின் மீது
1945 – இல் ஹிரோசிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டுகளைப் போட்டு இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாம் யுத்தத்தின் போது அதைவிடப் பயங்கரமான குண்டுகளை வியட்நாமின் மீது வீசியது. வெறும் மூங்கில் கழிகளையும், குச்சிகளையும் வைத்தே கொரில்லா யுத்தத்தின் மூலம் பீரங்கிகளையும் விமானங்களையும் நவீன குண்டுகளையும் கொண்ட அமெரிக்காவை ஓட வைத்தனர் வியட்நாம் மக்கள்.
இந்த ஜனநாயக நாட்டில் வாக்களிப்பதன் மூலம் வலிமையான பாரதத்தை மீட்டு எடுப்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும்.ஆப்பிரிக்கக் காடுகளில் வாழும் அனைத்து விலங்குகளும் தினம் தினம் வாழ்க்கையின் போராட்டத்தைச் சந்திக்கும். கீழ் வானம் சிவக்கும் போது ஒரு பக்கம் மான், மற்றொரு பக்கம் சிங்கம் வந்து நிற்கும். சிங்கத்திற்கு மானைப் பிடித்து உண்ண வேண்டும் என்ற ஒரு வேலை மட்டுமே. ஆனால் மானுக்கோ, சிங்கத்திடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும். காடுகளில் உள்ள புற்களை உண்டு பசியாறவும் வேண்டும் என்ற இரண்டு நிபந்தனைகள் உண்டு. ஒரு வலிமையுள்ள சிங்கம் கிட்டத்தட்ட 10 முறைகளுக்கும் மேல் மானை விரட்டினால் மட்டுமே மானைப் பிடிக்க முடியும். சிங்கத்திடமிருந்து மான் பலமுறை தப்பிக்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் மான் உயிருக்காக ஓடுகிறது; சிங்கம் பசிக்காக ஓடுகிறது.
என் இனிய சகோதர / சகோதரிகளுக்கு வணக்கம்.
நாம் வாழ்க்கையில் இலட்சியத்தை அடைய வேண்டுமென்றால், நம் ஓட்டம் உயிர்க்கான ஓட்டமாக இருக்க வேண்டும். உணவுக்கான ஓட்டமாக இருக்கக் கூடாது. போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகி வருபவர்கள் தனக்கான இலட்சியத்தை நோக்கி ஓடும்போது சிந்தனைச் சிதறல்கள் இல்லாமல் ஓடினால் மட்டுமே அந்த இலக்கினை அடைய முடியும்.
இந்த இதழில் SSC பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் Sub Inspector பணியிடங்களுக்கான அறிவிப்பு வந்துள்ளது. SSC நடத்தும் இந்த உதவி ஆய்வாளர் தேர்வுக்கான முழு விவரத்தினைப் பார்க்கலாம்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலினை எதிர்நோக்கி தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
‘‘வெற்றியை தீர்மானிப்பது ஆயுதங்களல்ல, வெகுமக்களே’’ என்ற உண்மையை ஊருக்குப் பறைசாற்றியது வியட்நாம். அமெரிக்க, பிரெஞ்சு ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடிய வியட்நாமியர்களை ‘‘யானையை எதிர்க்கும் வெட்டுக்கிளிகளின் போர்’’ என்று சொன்னவர்களைப் பார்த்து ஹோசிமின் ‘‘விமானங்களையும் பீரங்கிகளையும் எதிர்க்க மூங்கில் குச்சிகளைத் தவிர நம்மிடம் ஒன்றும் கிடையாது; ஆனால் மார்க்சியமும், லெனினியமும் என்ற வழிகாட்டுதலில் நிகழ்காலத்தை மட்டுமல்ல, எதிர்காலத்தையும் உருவாக்க முடிகிறது. இன்று வெட்டுக்கிளிகள் யானையுடன் சண்டை போடுகிறது; ஆனால் நாளை யானையின் குடல் பிடுங்கியெறியப்படும்’’ என்று சொன்னது உற்சாகப்படுத்த மட்டுமல்ல, உண்மையில் நடந்தேறியது.
தனது வலிமையை காட்ட வேண்டும் என்பதற்காக சரணடைந்த ஜப்பானின் மீது
1945 – இல் ஹிரோசிமா, நாகசாகி நகரங்களின் மீது அணுகுண்டுகளைப் போட்டு இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாம் யுத்தத்தின் போது அதைவிடப் பயங்கரமான குண்டுகளை வியட்நாமின் மீது வீசியது. வெறும் மூங்கில் கழிகளையும், குச்சிகளையும் வைத்தே கொரில்லா யுத்தத்தின் மூலம் பீரங்கிகளையும் விமானங்களையும் நவீன குண்டுகளையும் கொண்ட அமெரிக்காவை ஓட வைத்தனர் வியட்நாம் மக்கள்.
இந்த ஜனநாயக நாட்டில் வாக்களிப்பதன் மூலம் வலிமையான பாரதத்தை மீட்டு எடுப்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும்.