ஆளப் பிறந்தோம் – 29
திரு.இள.தினேஷ் பகத்
என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு,
வணக்கம். பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்குத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறையைக் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.
பள்ளி/கல்லூரிகளில் தேர்வுகள் இதுபோல ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு மாணவர்களின் தேர்ச்சியின் அடிப்படையில் அடுத்த வகுப்பிற்குச் செல்கின்றனர். மாணவர்களின் அறிவைச் சோதிப்பதற்கு மட்டுமே தேர்வுகள் நடைபெறுகின்றன. ஆனால் உண்மையான தேர்வு என்பது நீங்கள் என்னவாகப் போகின்றீர்கள் என்பதைத் தீர்மானிப்பதுதான், உங்களது முதல் தேர்வாகும்.
2025 – ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மத்திய/மாநிலத் தேர்வுகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன். எல்லாரும் ‘‘Money is always ultimate’’ என்று சொல்வார்கள். அது 100% உண்மைதான். வேலை இங்கே பிரதானம். ஆனாலும் இந்தப் பணத்தைக் காட்டிலும் பலம் தருவது ஒன்று உழைப்பு; மற்றொன்று தன்னம்பிக்கை. இந்த இரண்டையும் மூலதனமாகக் கொண்டு வெற்றி பெற்ற ஒருவரைத் தான் இந்த இதழில் பார்க்க இருக்கிறோம்.
அதற்கு முன்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO-ல் மனித விண்வெளி விமான மையத்தில் (HSFC) உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளின் முழு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
1. கல்வித் தகுதி
மருத்துவ அதிகாரி பணிக்கு MBBS (அ) M.D. முடித்திருக்க வேண்டும். இந்திய மருத்துவக் கவுன்சில் (அ) மாநில மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தொழில்நுட்ப உதவியாளர் பணிக்குத் துறை சார்ந்த பிரிவில் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விஞ்ஞானி, பொறியாளர் பணிகளுக்கு ME/M.Tech. முடித்திருக்க வேண்டும்.
டெக்னீஷியன் பணிகளுக்குப் 10 – ஆம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின்னர் ITI (ஐடிஐ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அறிவியல் உதவியாளர் பணிக்கு B.Sc. முடித்திருக்க வேண்டும்.
2. வயது வரம்பு
விஞ்ஞானி, பொறியாளர் பிரிவிற்கு 18 முதல் 30 வயது வரையிலும் இதரப் பணிகளுக்கு 18 வயது முதல் 35 வயது வரையிலும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
3. தேர்வு செய்யப்படும் முறை
மருத்துவ அதிகாரி பணிக்கு மட்டும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதரப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு (ம) திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் நடத்தப்படும் தேர்வு அறிக்கைகள் பற்றித் தெரிந்துகொள்வதற்கு https://www.isro.gov.in என்ற தளத்தைத் தொடர்பு கொள்ளவும்.
மதுரைதான் வீரபாண்டியன் அவர்களின் சொந்த ஊர். மிகவும் ஏழ்மையான குடும்பம். இவரது தந்தை பாத்திரங்களை தலைச் சுமையாக வைத்து வியாபாரம் செய்து வந்தவர். தாயார் வீட்டு வேலைகள் செய்து வந்தவர்.
மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.