சாதனையாளர் பக்கம்

மதுரை ஆர். கணேசன்

ல்வி கற்கும் போதே பாரத தேசத்திற்கு மாணவர்கள் தங்களது திறமைகளால் பேரும், புகழும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட மாணவர்களே பாரத தேசத்தை வழிநடத்திச் செல்வார்கள் என்பதில் ஐயமில்லை..!

கல்வியின் நீட்சியாக பிறகலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும், கற்பதைப் பற்றிக் கொண்டால் எங்கேயும் எப்போதும் கைகொடுத்துப் பாராட்டும் சூழ்நிலையும் தேடி வரும்..!

மதுரை செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிற மாணவி ஏ.ஜி.கோபிகா “..பரதம், நீச்சல், ஜிம்னாஸ்டிக், யோகா, போன்ற கலைகளில் தன்னுடைய திறமைகளை வெளிக்கொணர்ந்து வருகிறார்.

பரதம் ஆடிய கோபிகாவின் கால்கள் நீச்சல் விளையாட்டுப் போட்டிகளிலிலும் துள்ளி விளையாடி மாவட்டம் முதல் மாநிலம் வரை 13 – தங்கம், 8 – வெள்ளி, 5 – வெண்கலப் பதக்கங்கள் வென்றிருக்கிறார்.

பரதம், நீச்சல் கற்றுக் கொண்டதினால் மற்ற விளையாட்டுக்களையும் எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை நிரூபிக்கும் வண்ணமாக கோபிகா ஜிம்னாஸ்டிக் போட்டியிலும் கலந்து கொண்டு மாவட்ட அளவில் 14 – தங்கம், 8 – வெள்ளி, 6 – வெண்கலப் பதக்கங்களும் பெற்றிருக்கிறார் மற்றும் மாநில அளவில்
7 – தங்கம், 6 – வெள்ளி, 3 – வெண்கலம் என்று பதக்கங்கள் வென்றிருக்கிறார்.

தேசிய அளவில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் மூன்று முறை கலந்து கொண்டிருக்கிறார், சமீபத்தில் தேசியப் பள்ளிகள் குழுமத்திற்கான ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்பதற்கான தமிழக அணி வீராங்கனைகளில் பத்தொன்பது வயது பிரிவில் ஒருவராக கோபிகாவும், தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

கு.ராஜ்குமார், பரதக்கலை மற்றும் நீச்சல் பயிற்சியாளர்.., “..நான் சென்னை கலாஷேத்ராவில் பரதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளேன். கலாஷேத்ராவின் பாணியில் சேவை மனப்பான்மையுடன் பரதக் கலையைக் கற்றுத் தருகிறேன். பரத நாட்டியப் பள்ளியை மதுரையில் 2009 – ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறேன். வாரத்தில் மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இங்கு பரதம், வாய்ப்பாட்டு, கூடவே யோகா சொல்லித் தரப்படுகிறது என்னிடம் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை ஐம்பதுக்கும் மேலான மாணவர்கள் பரதம் கற்றுக் கொள்கிறார்கள். கோபிகா ஒன்றாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து என்னிடம் பரதம் கற்று வருகிறார். அன்றைக்கு என்ன ஆர்வம் இருந்ததோ அதே ஆர்வத்துடன் இதுநாள் வரையிலிலும் கற்றுக் கொண்டிருக்கிறார்.

“..கோபிகாவுக்கு கடந்த நான்கு வருடம் முன்பு தான் பரதக்கலையின் முன்னோடி குருக்கள் முன்னிலையில் அரங்கேற்றம்..” நடந்திருக்கிறது.

மேலும் வாசிக்க…ஆளுமைச்சிற்பி மாத இதழைப் படியுங்கள்.