சாதனையாளர் பக்கம்
மதுரை ஆர். கணேசன்
தமிழகத்தின் பாரம்பரிய கலைகளில் “..சிலம்பம்..” போன்ற தற்காப்புக் கலைகளை யாவரும் கற்றுக்கொண்டால் எந்தச் சூழ்நிலையிலும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்..!
சிலம்பக் கலையை, குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் கற்றுக் கொள்வது மூலம் மனதை ஒரு முகப்படுத்த முடியும், கவனச் சிதறல் ஏற்படாமல் தடுக்க முடியும், நரம்பு சம்பந்தப்பட்ட நோய் வராமல் காக்க முடியும் என்று சொல்லப்படுகிறது..!
அந்த வகையில் மதுரையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும் சில பள்ளிகளில் “..106 வருடம் பாரம்பரியம் கொண்ட நாடார் வித்யாசாலை நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலம்பப் போட்டியில் உலக சாதனை..” படைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..!
இப்பள்ளி நிர்வாகிகள் மற்றும் தலைமையாசிரியர் பே.காந்திபாய் சுவாமியடியாள், செ.டேனியல் துரைப்பாண்டியன், சிவா ஆகியோர்கள் மேற்பார்வையில் இணைந்து சிலம்ப மாஸ்டர் கே.ரமேஷ்குமார் மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறார்.
ஒவ்வொரு வருடமும் நடைபெறும் குடியரசுதின விழா, மேதின விழா, விளையாட்டு விழா மற்றும் பள்ளி விழாக்களில் “..சிலம்ப விளையாட்டுப் போட்டி..” மிகச்சிறப்பாக நடத்தப்படுகிறது.
அதேபோல இந்த ஆண்டும் 78 – ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரைக் கல்லூரி மைதானத்தில் “..சிலம்பப் போட்டி..” நடை பெற்றது. மதுரை மாவட்ட அளவில் 278 – பள்ளிகள், கல்லூரிகளின் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
18.8.24 அன்று காலை 9.00 மணி முதல் 10.17 மணி வரை அதற்கான நடுவர்கள் குழு மத்தியில் சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் “..நாடார் வித்யாசாலை நடுநிலைப் பள்ளியில் பயிலும் 35 – மாணவர்கள் தொடர்ந்து 78 – நிமிடங்கள் 78 – வகையான சிலம்பம் சுழற்றும் முறைகளை நேர்த்தியாகக் கையாண்டு தொடர் சிலம்பப் போட்டியில் உலக சாதனை..” படைத்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது..!
பே.காந்திபாய் சுவாமியடியாள், தலைமையாசிரியர்,
“..கற்பக விருட்சமாய் வளர்ந்திருக்கின்ற இப்பள்ளியின் 2024 -2025 கல்வியாண்டில் மதுரைக் கல்வி மாவட்டம், மண்டல அளவில் ஹாக்கி, கைப்பந்து, கோகோ போன்ற வெளி அரங்க விளையாட்டுகளில் எங்கள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பதினான்கு வயது ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்கள். மேலும் வாசிக்க…. ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.