உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள் -04

முனைவர். எஸ். அன்பரசு,  முதுகலை இயற்பியல் ஆசிரியர்.

ந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. NTA எனப்படும் National Testing Agency இத்தேர்வினை நடத்துகிறது. தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு விலக்கு கோரி சட்டமன்றத்தில் இரண்டு முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக பரிசீலனையில் உள்ளது. எனினும் மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் நீட் தேர்வு இப்போது கட்டாயமாக உள்ளது. நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை, குறைந்தபட்ச மதிப்பெண், அதிகபட்ச மதிப்பெண், சராசரி மதிப்பெண் இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது. நீட் தேர்வில் குறைந்தபட்சமாக தேர்ச்சி பெற்றாலே சுயநிதி மருத்துவ கல்லூரிகளிலும், அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பிக்கலாம்.

சாதிய இட ஒதுக்கீட்டு முறையிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிலும் விண்ணப்பிக்க நீட் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி போதுமானது. முதுநிலை நீட் தேர்வில் பூஜ்ஜியம்  மதிப்பெண் பெற்றால் கூட மருத்துவச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். கடினமான தேர்வாக நீட் தேர்வு சித்தரிக்கப்பட்டாலும், மற்ற நுழைவுத் தேர்வை ஒப்பிடும் பொழுது நீட் தேர்வு எளிமையானது தான். ஏனெனில் இத்தேர்வில் 100% இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களிலிருந்து மட்டுமே 180 வினாக்கள் இடம்பெறும். பொது அறிவு, மொழித்திறன்,  நடப்பு நிகழ்வுகள், பொதுக்கணிதம், Numerical Aptitude,  Logical Thinking  உள்ளிட்ட பகுதிகளில் கேள்விகள் இடம் பெறுவதில்லை.

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள மருத்துவப் படிப்புகள்

  1. Bachelor of Medicine and Bachelor of Surgery (MBBS)
  2. Bachelor of Dental Surgery (BDS)
  3. Bachelor of Ayurvedic Medicine and Surgery (BAMS)
  4. Bachelor of Homeopathic Medicine and Surgery (BHMS)
  5. Bachelor of Unani Medicine and Surgery (BUMS)
  6. Bachelor of Siddha Medicine and Surgery (BSMS)

நீட் தேர்வு இல்லாத மருத்துவப் படிப்புகள்

 மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை நிபுணர்களை உள்ளடக்கியதே மருத்துவத்துறை ஆகும். அவ்வகையில் நீட் தேர்வு இல்லாத பல மருத்துவப் படிப்புகள், வேலை வாய்ப்புகளை அள்ளித் தருகின்றன.

  1. Bachelor of Natural and Yoga Sciences (BNYS)

மாற்று மருத்துவ முறையில் முதன்மையானதாகக் கருதப்படும் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா தற்போது உலக அளவில் கவனம் ஈர்க்கும்  மருத்துவ படிப்பாகும். இப்படிப்பிற்கு இதுவரை நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்படவில்லை.

  1. Doctor of Pharmacy (Pharm.D)

 Pharm D என்பது ஒரு வருட Internship பயிற்சியை உள்ளடக்கிய ஆறு வருட படிப்பாகும். டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்,அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு பல்கலைக்கழகங்களிலும் சில தனியார் பல்கலைக்கழகங்களிலும் இப்படிப்பு கற்பிக்கப்படுகிறது. மருந்துகள் குறித்த அரசு, தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களில் இப்படிப்பிற்கான தேவை தேசிய அளவிலும், உலக அளவில் அதிகரித்து வருகிறது என்பதே கவனம் இருக்கும் செய்தியாகும்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம் வேறு எந்தத் துறைகளை விடவும் மருத்துவத்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. எந்த ஒரு உடல்நல குறைவிற்கும் பொது மருத்துவத்தை விட குறிப்பிட்ட உறுப்பு துறை சார்ந்த நிபுணர்களை அணுக வேண்டி உள்ளது. இன்றைய மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையும், துறை சார்ந்த நிபுணர்களின் எண்ணிக்கையும் இல்லை. உறுதியான வேலை வாய்ப்புகளை நீட் தேர்வு இல்லாத, கீழ் காணும் மருத்துவப் படிப்புகள் அள்ளித் தருகின்றன. டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 3-4 ஆண்டு படிப்புகளாக குறைந்தது 20 இடங்கள் என்ற எண்ணிக்கையில் இணை மருத்துவப் படிப்பு களுக்கான இடங்கள் உள்ளன.

  1. B.Sc. – Accident & Emergency Care, Technology
  2. B.Sc. – Audiology & speech Language Pathology
  3. B.Sc. – Cardiac Technology
  4. B.Sc. – Cardio Pulmonary Perfusion Care Technology
  5. B.Sc. – Critical Care Technology
  6. B.Sc. – Dialysis Technology
  7. B.Sc. – Neuro Electrophysiology
  8. B.Sc. – M.L.T. ( Medical Lab Technician)
  9. B.Sc. – Medical Sociology
  10. B.Sc. – Nuclear Medicine Technology
  11. B.Sc. – Operation Theatre &Anaesthesia Technology
  12. B.Optom (Optometry)
  13. B.Sc. – Physician Assistant
  14. Bachelor of Science in Prosthetics & Orthotics
  15. B.Sc. – Radiography and Imaging Technology
  16. B.Sc. – Radiotherapy Technology
  17. B.Sc. Medical Record Science
  18. B.Sc. Respiratory Therapy
  19. B.Sc. Clinical Nutrition
  20. B.Sc. Clinical Research
  21. B.Sc. Nursing
  22. B. pharm
  23. Bachelor of industrial microbiology
  24. Bachelor in operation theatre technician
  25. Bachelor of Anatomy
  26. Bachelor of Physiology
  27. Bachelor of pathology
  28. Bachelor of occupational therapy

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பட்டய படிப்புகள்.

  1. Diploma in Accident Emergency Care Technology
  2. Diploma in Operation Theatre and Anaesthesia Technology
  3. Diploma in Critical Care Technology
  4. Diploma in Medical Record Science
  5. Diploma in Radiology and Imaging Technology
  6. Diploma in Optometry Technology
  7. Diploma in Ophthalmic Nursing Assistant
  8. Diploma in Stroke Support Technology
  9. Diploma in Nursing Aid
  10. Diploma in Dental Assistant
  11. Diploma in Podiatry
  12. Diploma in Cardiac non Invasive Technology
  13. Diploma in Dialysis Technology
  14. Diploma in Medical Laboratory Technology
  15. Diploma in Health Care
  16. Diploma in Radiography and Imaging Technology

இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை உள்ள மேல் கண்ட பட்டயப்  படிப்புகள் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் பல்கலைக்கழகங்களிலும் கற்பிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு துறை நிபுணர்களுக்கும், மருத்துவத் துறையில் மிகப்பெரிய வரவேற்பும், வேலை வாய்ப்பும் தேசிய அளவில் வெளிநாடுகளிலும் காத்திருக்கின்றன.