உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள் -01
முனைவர். எஸ். அன்பரசு
வரும் காலங்களில் உள்ள வேலை வாய்ப்புகளைப் பொறுத்தே கல்லூரிப் படிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதே நேரத்தில் எல்லாப் படிப்புகளும், படிக்கின்ற நபரையும் கல்வி நிறுவனத்தையும் சார்ந்து வேலை வாய்ப்புகளைப் பெற உதவியாய் இருக்கிறது. அனைத்து தொழில்களும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய பரிமாணத்தை பெற்றுவரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு (A.I) தொடர்பான படிப்புகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. மனித மூளையின் செயல் திறனை அடிப்படையாகக் கொண்டு கற்றல், அனுமானித்தல், குறிப்பிட்ட பிரச்சினையை பல்வேறு விதத்தில் அணுகுதல், தீர்வுகளை வழங்குதல், மொழியைப் புரிந்து கொள்ளுதல், மருத்துவ அறிகுறிகளை ஆராய்தல், தானியங்கி செயல்முறைகள், உணர்திறன் என கணினியின் செயல்பாட்டை அதிகரித்தலே A.I எனலாம்.
செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) மருத்துவம், வணிகம், நிதி, சில்லரை வியாபாரம், மனித வளம், தயாரிப்பு, கல்வி, தொலைத்தொடர்பு, நிர்வாகம், போக்குவரத்து ஆகிய துறைகளில் தானியங்கி முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, வரும் காலங்களில் A.I இல்லாத துறைகளே இருக்காது.
தேடு பொறிகளில் A.I – Chat Gpt
Alphabet Inc. என்பது google தேடு பொறியின் தாய் வடிவமாக அக்டோபர் 2015ல் அதன் இணை நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் என்பவர்களால் அறிவிக்கப்பட்டது. இன்று கூகுள் தேடுபொறியானது கோடிக்கணக்கான இணைய பயன்பாட்டாளர்களின் முதன்மையான தேர்வாக இருக்கிறது. Generative Pre-trained Transformer எனும் GPT தொழில்நுட்பத்தில் கொடுக்கப்படுகிற உள்ளீடுகளைப் பொறுத்து, Natural language understanding (NLU), Contextual Text Generation, Language modelling, Adoption to user inputs, Handling diverse topics மற்றும் Context Retention என்னும் பிரிவுகளில் தரவுகள் பெறப்படுகின்றன. எதிர்காலத்தில் மனிதர்களைப் போல் உணர்வுகளை பெற்றால் மனித மூளையை விட பன்மடங்கு சிறப்பு வாய்ந்ததாக செயற்கை நுண்ணறிவு விளங்கும்.
A.I தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகள்
இளங்கலைப் பாடப்பிரிவுகள்
- Computer science
- Artificial intelligence
- Data science
- Mathematics or Statistics with AI
முதுகலைப் பாடப்பிரிவுகள்
- M.Sc, Computer science with AI
- Masters in A.I
- Masters in Data Science
முனைவர் பட்டப் படிப்பு
- Doctorate in Computer science with research focus on AI
- Ph.D in Artificial Intelligence
AI பாடங்கள் கற்பிக்கப்படும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள்
- Indian Institute of Technology (IIT’s)
- Indian Institute of Science (IISC)
Bangalore. - Indian Institute of Information Technology (IIIT) Hyderabad.
- National Institute of Technology (NIT’s)
- University of Hyderabad.
- Anna University, Chennai.
- Jawaharlal Nehru University (JNU), New Delhi.
- Birla Institute of Technology and Sciences (BITS) Pilani, Rajasthan.
- Indian Statistical Institute (ISI) Kolkata.
- Amrita Vishwa Vidyapeethum, Coimbatore.
மேற்கண்ட உயர்கல்வி நிறுவனங்களில் A.I பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவற்றைத் தவிர தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேரும்போது பாடத்திட்டம், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் ஆகியவற்றை ஒப்பிட்டு, பின் சேர்வது நலம்.
A.I தொடர்பான படிப்புகள் மற்றும் உட்பிரிவுகள்
Machine learning (இயந்திர மொழி), Natural Language Processing (மொழி செயல்பாடு) Computer Vision (கணினிக் காட்சி), Robotics (உயிரியலியம்), Ethics (தர்க்க நிலை), A.I Algorithms (ஆராய்ச்சி கணினி அளராதுகள்), Model Interpretability (மாதிரி விளக்க உருவாக்கல்) Ethical Considerations (தர்க்க நிலை கருத்துகள்), Re-inforcenent learning ( புதுப்பிப்பு – கற்றுக் கொள்ளுதல்), Natural Network Architectures (நிரப்பகக் கணினி அமைப்புகள்), Explainable A.I (விளக்கப்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு) ஆகியவை சான்றிதழ் படிப்புகளாக பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்னும் தொழில்நுட்பம் வளரும் போது A.I தொடர்பான படிப்புகளும் அதிகரிக்கும். இன்றைய சூழ்நிலையில் கணிப்பொறியின் அடிப்படை இல்லாதவர்கள் வேலைவாய்ப்புக்கு தகுதி இல்லாதவர்கள் ஆகிறார்கள். அதேபோல் இன்னும் பத்து ஆண்டுகளில் செயற்கை தொழில்நுட்பத்தின் அடிப்படையில்லாமல் எந்தவித வேலை வாய்ப்பையும் பெற இயலாது.
மாணவர்களின் விருப்ப தேர்வாக செயற்கை நுண்ணறிவு அமையும் போது உலகளாவிய வேலை வாய்ப்புகளை மாணவர்கள் பெறுவது உறுதி.
(உயர்கல்வி பற்றிய தேடுதல்கள் தொடரும்)