உயர்வுக்கு வழிகாட்டும் உயிர்கல்விப் படிப்புகள் -02

முனைவர். எஸ். அன்பரசு

த்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பெறுவது  அகில இந்திய அளவிலும் உலக அளவிலும் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு வாய்ப்பாக அமைகிறது. பொதுவாகவே அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் கல்வி பெற நுழைவு தேர்வு அவசியமாகிறது. நாடு முழுவதும் இருக்கிற 14 மத்திய பல்கலைக்கழகங்களில்கலை, அறிவியல், தொழிற்கல்வி, தொழில்நுட்பம், சட்டம் ஆகிய பட்ட, பட்ட மேற்படிப்புகளை ஒரே நுழைவு தேர்வை எழுதுவதன் மூலம் எளிதாக நுழைய முடியும்.

தமிழகத்தில் திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் 2009 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையாக வெளி மாநில மாணவர்கள் கல்வி கற்று வரும் சூழலில், தமிழக மாணவர்களுக்கு மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது எனலாம். கேரளத்தில் பள்ளிக் கல்வியை முடித்தவுடன் ஒரு ஆண்டை நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்காகவே செலவழிக்கிறார்கள். இந்த ஆண்டு Tuition year என்று அழைக்கப்படுகிறது.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் நடத்தப்படுகிற நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற ஒரு ஆண்டு தயாரிப்பு என்பது போதாது. குறைந்தது ஒன்பதாம் வகுப்பிலிருந்து மாணவர்கள் தங்களது இலக்கை நிர்ணயித்துக் கொண்டு குறிப்பிட்ட நுழைவுத் தேர்விற்கு தயார் செய்து வருதல் வேண்டும். மிகக் குறைந்த செலவில் உயர் கல்வியினை பெற மத்தியப் பல்கலைக்கழகங்கள் பேருதவியாய் இருக்கின்றன. தகுதியான பேராசிரியர்கள்,  உலகத் தரத்திலான ஆய்வகங்கள்,  மேற்படிப்பு, ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு பெறுவதற்கான சர்வதேச தொடர்புகள் ஆகியவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் சிறப்பம்சங்களாக பார்க்கப்படுகிறது.

மத்தியப் பல்கலைக்கழகம் – திருவாரூர்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படுகிற  இளங்கலை பட்டப்படிப்புகள்

  1. B.Tech.,- Bachelor of Technology (4)
  2. B.Sc., Bachelor of Science (3)
  3. B.Sc., (Hons) – Bachelor of Science (Honours) (3)
  4. B.Sc.,Ed., – Bachelor of Science and Bachelor of Education (4)
  5. B.A., -Bachelor of Arts (3)
  6. B.A., (Hons) – Bachelor of Honours (3)
  7. B.A ,Ed., – Bachelor of Arts and Bachelor of Education (4)
  8. B.A.,L.L.B., – Bachelor of Arts and Bachelor of Law (5)
  9. B.A.,L.L.B (Hons)., – Bachelor of Arts and Bachelor of law(Honours) (5)
  10. L.L.B., Bachelor of Law(3)
  11. B.C.A., – Bachelor of Computer Application(3)
  12. B.B.A., – Bachelor of Business Administration (3)
  13. B.P.A.,- Bachelor of Performing Arts(4)
  14. B.Voc., – Bachelor of Vocational Education(3)
  15. I.M.Tech.,- Integrated Master of Technology (B.Tech+M.Tech)(5)
  16. I.M.Sc.,- Integrated master of Science (B.Sc.,+M.Sc.,)
  17. I.M.A +(Integrated Master of Arts(B.A.,+M.A.,) (5)

பட்டப் படிப்பின் உட்பிரிவுகள்

B.Tech., Computer Science and Engineering, Electronics and Communication Engineering, Electrical Engineering, Civil Engineering, Printing and Packing Technology
B.Sc.,-Textile Design  B.Sc.,(Hons)-Physics, Economics
B.Sc.,Ed., Mathematics, General
B.A., International Relations, Vocational Studies, Chinese language, German
B.A.,(Hons) Political Science, Sanskrit
B.A.,Ed., General B.A.L.L.B., General
B.A.L.L.B.,(Hons), General L.L.B., – Law  B.C.A.,- General B.B.A. General B.P.A., – Music B.Voc., – Food ProcessingTechnology,  Sugar Technology, Retail Management and  Logistic Management, Hospital and Tourism,  Biomedical Science, Mass Communication and Video Production, Banking and  Finance, Retail Management, Travel and Tourism Management,  industrial Waste Management I.M.Tech.,-Computer Science and Engineering I.M.A.,- English,  Economics, Political Science,  Sociology,  Language Science,  History,  Anthropology,  Social Management, Hindi and Telugu I.M.Sc.,- Mathematics, Life Science, Physics,  Chemistry, Computer Science, Bio Technology,  Biology,  Applied Geology Chemical Sciences,  Optometry and Vision Sciences,  Environmental Science, Microbiology,  Biochemistry, Statistics Psychology, Geography and Geology

 CENTRAL UNIVERSITY
OF TAMIL NADU

  1. M.Sc., Physics, Chemistry, Mathematics, Life Science (5), B.Sc.,Ed,Mathematics (4), I.M.A., Economics (5), B.ScTextile Design (3)
    BPA.,Music (4)

CENTRAL UNIVERSITY
OF RAJASTHAN

B.Tech.,Computer Science & Engineering, Electronics & Communication Engineering (4)I.M.Sc.,Biotechnology, Mathematics, Computer Science, Physics, Chemistry, Environmental Science, Microbiology, Economics, Biochemistry, Statistics (5)

CENTRAL UNIVERSITY
OF KARNATAKA

B.Tech Electrical Engineering.
Electronics & Communication Engineering (4)I.M.Sc.,Psychology, Geography, Geology (5)
BBA.,General (3) I.M.A.,English, Economics (5) B.Voc.,Food Processing Technology, Sugar Technology (3)

CENTRAL UNIVERSITY OF ORISSA

  1. M.Sc.,Mathematics (5) BCA.,Computer Applications (3)

CENTRAL UNIVERSITY
OF SOUTH BIHAR

B.A.LLB(Hons.)Law+Arts (5)

B.Sc., Ed.,General (4)

B.A..Ed.,General (4)

CENTRAL UNIVERSITY
OF KASHMIR

B.Tech., Computer Science & Engineering (4)  I.M.Sc.,Physics, Mathematics, Zoology, Biotechnology (5)  B.A.LLB.,Law + Arts (5)
B.Voc., Tourism & Hospitality Management, Retail Management and Logistic Management (3)

CENTRAL UNIVERSITY
OF KERALA

B.A., International Relations (3)

CENTRAL UNIVERSITY OF ANDHRA PRADESH

B.Sc (Hons.} -Economics (3) B.A (Hons.}Political Science (3) B.Voc.,Travel and Tourism Management, Retail Management (3)

CENTRAL UNIVERSITY
OF GUJARAT

I.M.A.,,Social Management (5) B.A., Vocational Studies, Chinese Language, German (3)

CENTRAL UNIVERSITY
OF HYDERABAD

I.M. Tech.,Computer Science & Engineering (5)
I.M.Sc.,Mathematical Science, System Biology, Physics, Chemical Sciences, Optometry and Vision Sciences, Applied Geology (5)

I.M.A.,Economics, Political Science, Sociology, Language Science, History, Anthropology, Hindi, Telugu (5)

CENTRAL UNIVERSITY
OF JAMMU

  1. M.Sc.,Physics, Chemistry, Botany, Zoology (5) BA..Ed.,General (4)

B.Sc., Banking and Finance, Retail Management, Hospitality & Tourism (3)
Diploma Retail Management, Beauty Care, Apparel Merchandising (1)

CENTRAL UNIVERSITY OF HIMACHAL PRADESH

B.Sc(Hons).,Physics (3)

Mass communication & Video Production (3)

BA (Hons).,Sanskrit (3)

CENTRAL UNIVERSITY  OF HARYANA

B.Tech.,Civil Engineering, Computer Science & Engineering, Electrical Engineering, Printing and Packing Technology (4)

B.Voc.,Biomedical Science, Retail Management & Logistic Management, Industrial Waste Management (3) LLB.,Law (3)

CUCET OFFICIAL WEBSITE: https://www.cucetexam.in/

மொத்தம் 100 வினாக்கள்.இரண்டு மணி நேர எழுத்து தேர்வு நூறு வினாக்களுடன் கொள் குறி வகையை சார்ந்ததாக இருக்கும். ஒரு சரியான வினாவிற்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும். ஒரு தவறான வினாவிற்கு புள்ளி இரண்டு ஐந்து மதிப்பெண்களும் (0.25) குறைக்கப்படும்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில்  65 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் பாடப் பிரிவிற்கு தகுந்தாற் போல் கணிதம், இயற்பியல், வேதியியல் அல்லது பிற பாடங்களைக் கொண்ட பிரிவில் சேர்கின்ற பட்டப்படிப்பிற்கு தகுந்தார் போல் படித்திருக்க வேண்டும்.

மற்ற எந்தக் கல்வி நிறுவனங்களையும் விட மத்திய பல்கலைக்கழகத்தில் கல்வி கட்டணம் மிகக் குறைவு. மாணவர்கள் ஒரே நுழைவுத் தேர்வினை எதிர்கொள்வதன் மூலம் உயர் கல்வி, வேலை வாய்ப்பு, ஆராய்ச்சி வாய்ப்பினை பெற முடியும். =