ஆளப் பிறந்தோம் – 3

திரு. இள. தினேஷ் பகத்

ன் இனிய சகோதர / சகோதரிகளுக்கு வணக்கம். கடந்த இதழில் CSAT தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் பொது அறிவுத்தாளில் பாடவாரியாக எவ்வாறு தயார் செய்ய வேண்டும் எனப் பலவற்றைப் பார்த்தோம். இந்த இதழில் முதன்மைத் தேர்வின் அமைப்பு முறை, அதற்கான பாடத்திட்டங்கள் என்ன? போன்ற விவரங்களைப் பார்க்க இருக்கிறோம்.

முதன்மை தேர்வைப் பொருத்தவரை 9 தாள்கள் அமைக்கப்பட்டிருக்கும். அவற்றை கட்டுரை வடிவில் (Descriptive Type) எழுத வேண்டி இருக்கும். அவற்றில் முதல் இரண்டு தாள்கள் தாய்மொழிப் பாடம் மற்றும் ஆங்கிலப் பாடம் ஆகியவற்றில் நம் புலமையை சோதிக்கும் வகையில் வினாக்கள் அமைக்கப்பட்டு இருக்கும். முதல் மற்றும் இரண்டாம் தாளில் எடுக்கப்படும் மதிப்பெண்கள், தரவரிசைப் பட்டியலுக்குச் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால், இந்தத் தாள்களில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று, தேர்வாகி இருந்தால்தான் மற்ற விடைத்தாள்கள் திருத்தப்படும்.

முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் அதற்கான மதிப்பெண்கள் போன்றவற்றை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அட்டவணை வடிவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தந்துள்ளேன்.

அ.எண் பாடத்தலைப்பு மதிப்பெண்கள்
1 Paper-A, Compulsory Indian Language

[அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள ஏதாவது ஒரு மொழி (தாய்மொழி)]

300
2 Paper – B, English [ஆங்கிலம்] 300
3 Paper-1, Essay [கட்டுரைத் தாள்] 250
4 Paper – 2, General Studies -I (Indian Heritage and culture, History & Geography of the world) பொது அறிவுத் தாள் – 1[இந்தியப் பாரம்பரியம் மற்றும் பண்பாடு, வரலாறு, உலக புவியியல்] 250
5 Paper-3, General Studies-II (Governance, constitution, polity, social justices, international relations)

பொது அறிவுத்தாள் – 2 [ஆளுகை, அரசியலமைப்பு, ஆட்சி அமைப்பு முறை, சமூக நீதி மற்றும் சர்வதேச உறவுகள்]

250
6 Paper-4, General Studies-III (Technology, Economics development, Bio-diversity, Environment, Security and Disaster Management) பொது அறிவுத்தாள் – 3 [தொழில் நுட்பம், பொருளாதார மேம்பாடு, பல்லுயிரின மேம்பாடு, சுற்றுச் சூழல், பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை] 250
7 Paper-5, General Studies-IV (Ethics, Integrity, Aptitude)  பொது அறிவுத்தாள் – 5 [நெறிமுறைகள், நேர்மை, தகுதிநிலை] 250
8 Paper-6, Optional – I விருப்பப் பாடம் -1 250
9 Paper-7, Optional – II விருப்பப் பாடம் – 2 250

மேற்கண்ட 9 தாள்களையும் எவ்வாறு தயார் செய்வது போன்ற விவரங்களை ஒவ்வொரு தாளிற்கும் சுருக்கமாகத் தனித்தனியாகப் பார்க்க இருக்கிறோம்.

அதற்கு முன்பாக ஒரு கதையைக் கூறுகிறேன்: ஒரு நாள் வாசலில் உள்ள படிக்கலானது, கருவறையில் தெய்வமாக உருவாக்கப்பட்டிருக்கும் கற்சிலையைப் பார்த்து,“நீயும், நானும் ஒரே மணலில் தான் பிறந்தோம்” ஆனால் உன்னை மதிக்கிறார்கள் என்னை மட்டும் மிதிக்கிறார்கள்” என்று கேட்டது, அதற்கு கருவறையில் வீற்றிருக்கும் கற்சிலை பின்வருமாறு சொன்னது.

“நான் சிற்பியின் உளியினால் ஏற்பட்ட வலியினைத் தாங்கிக் கொண்டு அழகான சிற்பமாக உருவமாற்றம் அடைந்தேன். ஆதலால் நான் உயர்ந்து நிற்கிறேன். ஆனால் நீயோ உளியின் வலி பொறுக்காது உடைந்து போனாய், ஆகவே தான் நீ படிக்கல்லாய் மிதிக்கப்படுகிறாய்” என்று கூறியது.

நாளைய நம்பிக்கை நாயகர்களே; போட்டித் தேர்வுக்காகப் பலர் பலவாறு போட்டித் தேர்வு மையங்கள் மற்றும் சுயமாகத் தயார் செய்து கொண்டு இருக்கின்றனர். இருப்பினும், ஒரு சில தேர்வுகளில் தோல்வி அடைந்ததுமே, அயர்ச்சி அடைந்து மேற்சொன்ன கதையில் உள்ள படிக்கற்களாக அடியிலே தங்கி விடுகின்றார்கள்.

மிகச் சிலரே தன்னுடைய தோல்விகளிலிருந்து துவண்டு விடாமல் தொடர் முயற்சியால் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு, வெற்றி பெற்று அனைவரும் மதிக்கும் வண்ணம் அரசாங்கத்தின் உயர் பொறுப்பில் வீற்றிருக்கின்றனர்.

Paper-A [Compulsory Indian  Language] தமிழ்

இந்த தாளைப் பொறுத்தவரை இதற்கான சிலபஸ் என்ன என்பதைப் பார்க்கப் போகிறோம். கட்டாயத் தாளில் குறைந்தபட்சம் 33% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும்.

பத்தாம் வகுப்புத் தரத்தில் இந்த தேர்வில் வினாக்கள் அமையும்.

பாடத்திட்டங்கள் மற்றும் மதிப்பெண்கள் என்ன?

  1. Comprehension of given passages (பத்தியைப்படித்து விளக்கத்தோடு சுருக்கி விடை தருக) – 60 மதிப்பெண்
  2. Precis writing (சுருக்கி எழுதுதல்) – 60 மதிப்பெண்

iii.     Usage & Vocabulary (பயன்பாடு மற்றும் சொல் வளம்) 40 மதிப்பெண்

  1. Short Essay (சிறுகட்டுரை வரைக) – 100 மதிப்பெண்
  2. Translation from English to Tamil
    (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தல்) 40 மதிப்பெண்

Paper-B [Compulsory English] –
கட்டாய ஆங்கிலத் தாள்

  1. Comprehension of given passages (பத்தியை படித்து விளக்கத்தோடு சுருக்கி விடைதருக) – 60 மதிப்பெண்
  2. Precis writing (சுருக்கி எழுதுதல்) – 60 மதிப்பெண்

iii.     Usage & Vocabulary (பயன்பாடு மற்றும் சொல்வளம்) – 40 மதிப்பெண்

  1. Short Essay (கட்டுரைவரைக) – 100 மதிப்பெண்

ஆங்கிலத்தாளைப் பொறுத்தவரை, கீழ்கண்ட இரண்டு புத்தகங்களைத் தயார் செய்தாலே போதும்.

Compulsory English For IAS Main Exami nation. – Bhardwaj A P

151 Essays S.C. Gupta

Paper-I (Essay) கட்டுரைத்தாள்

ஒருகட்டுரைக்கு 125 மதிப்பெண்கள்வீதம் இரண்டு கட்டுரைகள் மட்டும் இந்த தேர்வில் எழுத வேண்டி இருக்கும்.

IAS தேர்வில் தர வரிசைப் பட்டியலில் முதல் இடங்களைப் பிடிப்பவர்கள் (Toppers) இந்தத் தேர்வுத் தாளில் கவனம் ெசலுத்தி அதிக மதிப்பெண் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கேட்கப்பட்ட கட்டுரையின் தலைப்பைப் பொறுத்தே, தங்களின் எண்ணங்களை முறையான வரிசையில் சரியான அர்த்தத்துடன் தெளிவான எழுத்து நடையுடன் எழுத வேண்டும்.

Paper 2, General studies – 1

முதன்மைத் தேர்வின் பொது அறிவுத் தாள்-1 பாடத்திட்டம் என்ன?,எவ்வாறு கட்டுரை வடிவில் விடை அளிப்பது? போன்ற விபரங்களைப் பார்க்க இருக்கின்றோம்.

  1. The Freedom struggle-it’s various stages and important contributors/contributions from different parts of the country. (இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு-அதில் பல்வேறு நிலைகள்-விடுதலைப் போராட்டத்தில் பங்கு வகித்தவர்கள்-இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து விடுதலைப் போராட்டத்திற்கான பங்களிப்பு.)
  2. Indian culture will cover the salient aspects of art forms, literature and architecture from ancient to modern times. (இந்தியக் கலாச்சாரத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் பல்வேறு கலை வடிவங்கள், இலக்கியம், பழங்கால இந்தியா முதல் நவீன இந்தியா வரை உள்ள கட்டடக்கலை.)

iii.     Modern Indian history from about the middle of the 18th century until the present, Significant events, personalities and issues. (18- ம் நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்து நவீன இந்திய வரலாறு நிகழ்காலம் வரை, முக்கிய நிகழ்வுகள் மற்றும் முக்கிய நபர்கள்.)

  1. History of the world will include events from 18th century such as a industrial revolution, redrawal of national boundaries, world wars, colonization, decolonization, political, philosophies like communism, capitalism and socialism etc, their forms and effect on the society. (18- ஆம் நூற்றாண்டிலிருந்து உலக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளான தொழில் புரட்சி, உலகப்போர்கள், பல்வேறு நாட்டின் எல்லைகள் மறுவரைவு, கா லனியாதிக்கம், அரசியல் தத்துவங்கள் பொதுவுடமை, முதலாளித்துவம், சமதர்மம் போன்றவைகள் மற்றும் அவைகள் பல்வேறு சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம்.)
  2. Post – independence consolidation and reorganization within the country, (சுதந்திரத்திற்கு பிந்தைய இந்திய கூட்டமைப்பு – இந்தியாவுக்குள் மாநிலங்களில் ஒருங்கிணைப்பு)
  3. Social empowerment, communalism, regionalism and secularism. (சமூக அதிகாரமளித்தல், வகுப்புவாதம், பிராந்திய வாதம், சமயச் சார்பின்மை)

vii.    Effects of globalization on Indian society (உலகமயமாக்களின் விளைவாக இந்திய சமூகத்தில் ஏற்பட்ட தாக்கம்)

viii.   Role of women and women’s organization, population and associate issues, poverty and development issues, urbanization their problems and their remedies.(மகளிர் நிறுவனங்களின் பங்களிப்பு, மக்கள் தொகை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகள், வறுமை மற்றும் மேம்பாட்டு நிகழ்வுகள், நகரமயமாக்குதல்-பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள்)

  1. Salient features of Indian society, diversity of India (இந்திய சமூகத்தின் சிறப்புகள், வேற்றுமையில் ஒற்றுமை)
  2. Salient features of world’s physical geography (உலக புவியியலின் சிறப்பம்சங்கள்)
  3. Important Geo physical phenomena, such as Earthquakes, Tsunami, Volcanic activity, Cyclone etc. Geographical features and their location changes in critical geographical features (including water bodies and ice caps) and in flora and fauna and the effect of such changes.(முக்கிய பௌதீக புவி அமைப்பின் சிறப்பு தன்மைகள், நிலநடுக்கம், சுனாமி, எரிமலை, சூறாவளிகள் போன்றவை, புவியியல் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் அமைவிடங்கள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், அவற்றின் மாற்றங்கள் மற்றும் தாக்கங்கள்)

xii.    Distribution of key natural resources across the world, factors responsible for the location of primary secondary and territory sectors industries in various parts of the world.(உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள இயற்கை வளங்கள், முதல், இரண்டாம் மற்றும் துணைநிலை தொழில்கள் அமைவிட காரணிகள்)

குடிமைப் பணி தேர்வின் General studies paper-1 பாடத்திற்கு கீழ்காணும் புத்தகங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  1. India’s Ancient Past- R S Sharma
  2. India’s Struggle For Independence-Bipan Chandra
  3. India Since Independence – Bipan Chandra
  4. History Of The World-Arjun Dev
  5. Geography – புவியியல் பாடத்திற்கு ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள NCERT புத்தகங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.