வாழ்த்துக் கட்டுரை

மதுரை.ஆர்.கணேசன்

ந்திய நாட்டின் பெருமிதங்களில் (ISRO) “..இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்..” இந்தியாவின் பாதுகாப்பு, தகவல் தொழில் நுட்பம், விவசாயம் போன்ற அனைத்துத் துறைகளுக்கான  “..இதயம்..” என்றால் மிகையில்லை! 

அறிவியல் தொழில் நுட்பச் செயல்பாடுகள் மற்றும் விண்வெளி ராக்கெட் தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளவும், அத்துடன் அறிவுத் திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் அனைவர்க்கும் இடை நிலைக்கல்வி திட்ட இயக்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் சேலம் மாவட்டம் எட்டிக்குட்டைமேடு, கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் இடை நிலை ஆசிரியர் செ.தினேஷ் (39) அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனைகளை தூண்டி ஊக்கப்படுத்தி வருகிறார்.

கல்வியில் ஒரு பகுதியாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அனுமதி பெற்று ஆசிரியர் செ.தினேஷ் அறிவியல் சுற்றுலாவாக (ISRO) INDIAN SPACE RESEARCH ORGANIZATION “..இஸ்ரோ..” விற்கு அரசு பள்ளி மாணவர்களை அவர்களது பெற்றோர் விருப்பக் கடிதம் பெற்று அழைத்துச் செல்கிறார்.

அத்துடன் இவரது “..DARWIN SCIENCE CLUB..” மூலமாக அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு அறிவியல் சார்ந்து தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குகிறார்.

இந்த அறிவியல் மன்றத்தின் முக்கியமான நிகழ்வு மாணவர்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அழைத்து செல்வதும், அங்கு உள்ள Scientist களுடன் கலந்துரையாடுவதும் மற்றும் முக்கியமான இடங்களை பார்வையிடுவதும் ஆகும்.

புதுமை ஆசிரியர் மற்றும் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் ஒருங்கினைப்பாளர் செ.தினேஷ்..,

“…அரசு பள்ளி மாணவர்கள் வழக்கம் போல பள்ளிக்கூடம், வகுப்பறை, பாடம், மதிப்பெண்கள் தாண்டி அனுபவ அறிவின் மூலம் மனதில் விளைகின்ற அறிவியல் சிந்தனைகளுக்கு வழிவகுக்கும் திட்டமே எங்களது அறிவியல் சுற்றுலாவாகும்.

கல்விப் பாடப் புத்தகத்தில் உள்ள செயற்கை கோள்கள், ராக்கெட் போன்ற தகவல்கள் அனைத்தையும் நேரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சென்று பார்வையிடும் பொழுதும், அங்கு உள்ள விஞ்ஞானிகளுடன்  கலந்துரையாடும் பொழுதும் மாணவர்களுக்கு அறிவியல் மீது ஆர்வம் அ திகரிக்கிறது.

ஆதலால் மாணவர்களுக்கு அறிவியல் சுற்றுலா அழைத்து செல்லும் திட்டம் துவங்கி இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (Bangalore), விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம் (Trivandram), Hyderabad ISRO, ராக்கெட் ஏவுதளம் (ஹரிகோட்டா) போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று வருகிறோம்.

முதலில் நான் பணிபுரியும் பள்ளி மாணவர்களை அழைத்து சென்றேன். அதன் பின்னர் சேலம் மாவட்டத்தில் உள்ள மாணவர்களை அழைத்து சென்றோம்.

இதுவரை கடந்த 6 வருடங்களாக 2000 மாணவர்களுக்கு மேல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்து சென்றுள்ளோம்.

அறிவியல் சுற்றுலாவிற்கு ஐம்பது பேர் மட்டும் பங்கேற்க முடியும் கட்டணம் உண்டு. இதில் கலந்து கொள்ளும் அனைவர்க்கும் எங்களது மன்றம் சார்பாக ஒரு டிசர்ட், பேக் மற்றும் பேனா, நோட்டும் கொடுக்கப்படுகின்றன. 

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த அறிவியல் சுற்றுலாவில் பங்கேற்கின்றனர். மூன்று நாட்கள் அறிவியல் சுற்றுலாவில் வெவ்வேறு துறை சார்ந்த Scientist களுடன் மாணவர்கள் உரையாடலாம்.

குறிப்பாக மாணவர்களுக்கான ஆச்சரியம் அங்கே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ, ROBO, AERO SPACE மற்றும் மூளை நரம்பியல் துறை சார்ந்த விஞ்ஞானிகள் மூளை அருங்காட்சியகத்தில் மனிதனின் உண்மையான அனைத்து உள் உறுப்புகளையும் மாணவர்கள் தொட்டு பார்த்தும், அதனை சார்ந்த அனைத்து சந்தேகங்களை நேரடியாக கேட்டும் தெளிவு பெறுவார்கள்.

கல்லூரி மாணவர்களுக்கு அவர்களது தேவை அறிந்து அதற்கு ஏற்ற துறை மற்றும் நிறுவனங்களுக்கு Industrial Visit அழைத்து சென்று வருகிறோம்.

கோளரங்கம் சென்று வான்வெளி சார்ந்து அறிய இயலாத பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு Mobile Planetarium வாகனத்தை அவர்களது பள்ளிக்கே அனுப்பி வான் அறிவியல் சார்ந்த குறும் படங்களை 3D தொழில் நுட்பத்தில் காண்பிக்கிறோம்.

கோள்கள், சூரிய குடும்பம் போன்ற அனைத்தையும் விண்வெளி சென்று பார்த்த அனுபவம் போல உணருவார்கள்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அவர்களுக்கு தகுந்தாற் போல விஞ்ஞானிகளை நேரில் வரவழைத்து உரையாட வைத்து வருகிறோம் இதனால் தயக்கமின்றி கேள்வி கேட்க தோணும் அத்துடன் மாணவர்களது சிந்தனைத் திறன் வலுப்பெறுகிறது.

மாணவர்களுக்கு எளிதில் இயற்பியல், வேதியியல் சார்ந்த கூற்றுகள் புரியும் வகையில் எளிய அறிவியல் பரிசோதனை நிகழ்ச்சி செய்து வருகிறோம்.

இளம் விஞ்ஞானிகளாக மாணவர்களை உருவாக்கிட செயற்கைக் கோள் வடிவமைப்பு, Drone மற்றும் ரோபோ வடிவமைப்பு பயிற்சிகளை வழங்கி வருகிறோம்.

அறிவியல் சுற்றுலா அனுபவங்கள் மாணவர்களுக்கு தன்னிலிருந்து புதியவனாக உணர்த்துகிறது தானும் ஒரு விஞ்ஞானி ஆகவேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி விடுகிறது.

அதற்கேற்றாப்போல் மாணவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்பு பொருட்கள் தயாரிக்க ஆசை பிறக்கும் அதற்கான பாடத்தில் மேலும் ஈடுபாடு ஏற்படும். இப்படியான மாற்றங்கள் மாணவர்களிடத்தில் அறிவியல் சுற்றுலாவில் கிடைக்க செய்வதே எங்களது நோக்கமாகும்…”

அறிவியல் ஆர்வத்தை மாணவர்களிடம் தூண்டி, மேன்மை பெறச் செய்யும் ஆசிரியர் செ.தினேஷ் அவர்கள் பணி சிறக்க ‘ஆளுமைச் சிற்பி’ வாழ்த்துகிறது. 