வாழ்த்துக் கட்டுரை

முனைவர் என்.சி.ராஜ்குமார்

பாரதியின் “..ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா..” வசீகர வரிகள் படிக்கும் குழந்தைகளின் மனதில் விளையாட்டை விதைக்கிறது இருப்பினும் குழந்தைப் பருவத்திலேயே விளையாட்டிலும் கண்ணுக்கு இமை போலிருந்தால் முதுமையில் குழந்தைகள் போல ஓடி ஆடி விளையாட முடியும்..!

விளையாட்டினால் உடல் அர்த்தப்படும், விளையாட்டில் சாதித்தால் வாழ்க்கை நிறைவாகும் என்று விளையாட்டுத்துறை பயிற்சியாளர்கள் முன்மொழிகிறார்கள். அதனை வழிமொழிய இளையோர்களே விளையாட்டுத் துறையில் நீங்கள் பலவெற்றிகளை அடைவதற்காக இக்கட்டுரை. வாங்க விளையாடுங்கள் ! என வரவேற்கிறது…,

தமிழகத்தில் மூன்று முறை தேசிய விருது பெற்றவர். 175 க்கும் மேலான விளையாட்டுத் துறை பற்றிய புத்தகங்கள் எழுதியிருக்கும் பிரபல விளையாட்டுவீரர் மறைந்த முனைவர் எஸ். நவராஜ் செல்லையா இவரது மகன் முனைவர்
ராஜ்குமார் 55, தனது விளையாட்டுத்துறை அனுபவங்களை அளவலாகிறார்.

அதற்கு முன்னதாக முனைவர் ராஜ்குமார் கல்வித்தகுதி பற்றிய சிறுகுறிப்பு.., B.P.E. உடற்கல்வி இளங்கலை பட்டப்படிப்பு, B.P.Ed.உடற்கல்வியியல் பட்டயப் படிப்பு, M.P.Ed. உடற்கல்வி பட்டமேற் படிப்பு, M.Phil. உடற்கல்வியியல் இளமுனைவர், M.Sc. யோகா பட்டப்படிப்பு, PGDT.டென்னிஸ் பட்ட மேற்படிப்பு, Dip in yoga பட்டயப்படிப்பு, Ph.D. உடற்கல்வியியல் ஆய்வறிஞர் பட்டம்., இன்னும் PDF போஸ்ட் டாக்டர் பெல்லோஷிப் பண்ணனும்னு தன்னை ஆயத்தப் படுத்திக் கொண்டி ருக்கிறார்..!

2006-ஆம் ஆண்டு முதல் எஸ்.ஆர்.எம்.,பல்கலைக் கழகத்தில் பிசிக்கல் எஜூகேஷன் அன்ட் ஸ்போட்ஸ் எஜூகேஷன் டிபார்ட்மெண்ட்டில் துணைப் பேரா சிரியாகப் பணிபுரிகின்ற முனைவர் ராஜ்குமார் அகில இந்திய அளவில் நடைபெற்ற பல்வேறு மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் கலந்து
கொண்டு விளையாட்டுக்களின் உடற்கல்வி, உடல்தகுதி, உடல்நலம், சமச்சீர் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்ற பலதலைப்புகளில் கட்டுரைகள் சமர்ப்பித்திருக்கிறார்.

2007 ல் மும்பையில் நடைபெற்ற உலகச் சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கான கிரிக்கெட் அணிக்குத் தலைமைப் பயிற்சியாளராக இருந்து முதல் பரிசையும் பெற்றுப் பெருமை சேர்த்திருக்கிறார்.

2015, 2016ல் தென்கொரியா நாட்டிலும் மற்றும் 2018, 2019ல் இத்தாலியில் நடைபெற்ற உலக பல்கலைக் கழகங்களுக்குக்கான டென்னிஸ் போட்டிக்கான இருபாலர் அணிக்கும் பயிற்சியாளராகப் பணியாற்றியிருக்கிறார்.

ஒரு பிசிக்கல் டைரக்டர் எல்லா விளையாட்டை பற்றியும் தெரிஞ்சுருக்கணும், எல்லா விளையாட்டுகளையும் விளையாட தெரியணும். அப்படித் தெரிந்து புகுந்து விளையாடும் முனைவர் ராஜ்குமார் அகில இந்திய அளவில் டென்னிஸில் 4 முறை வெற்றி பெற்றுள்ளார் மேலும் பத்து வருடங்களாக வாலிண்டியர்ஸ் ரெக்கார்ட் பண்ணியிருக்கிறார். இந்திய அளவில் 90 ஆண், 70 பெண் வீரர்கள் இவரிடம் பயிற்சி பெற்றுச் சாதித்திருக்கின்றனர்.

விளையாட்டைப் பற்றி மட்டுமே பேசுகிற விளையாட்டை மிகவும் நேசிக்கிற முனைவர் ராஜ்குமார்…,

ஏன் விளையாடனும்? விளையாட்டு சார்ந்த படிப்புகள்? பயிற்சிகள்? உணவுப் பழக்க
முறைகள்? போன்ற பல எண்ணங்களுக்கு நிறைவாகப் பதிலளிக்கிறார்.

“..உங்க பசங்களுக்கு முதல்ல விளையாட்டில் ஆர்வமிருக்கிறதா ? என்று தெரிந்து கொள்ள வேண்டும், அந்த விளையாட்டில் ஈடுபாடு மற்றும் அதற்கான பயிற்சியாளர்களிடம் சேர்ந்து விட்டு தினமும் கண்டிப்பாக பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும், பணவசதியும் இருக்க வேண்டும்,

உங்களுக்கு அரசு பங்களிப்பு இருந்தாலும் முக்கியமாக பெற்றோர்களின் முழுமையான பங்கும் இருக்க வேண்டும் இதெல்லாம் இருந்தால் மாவட்டம், மாநிலம் தேசிய அளவையும் தாண்டி சர்வதேச அளவிலும் சாதிக்க முடியும்..!

விளையாடறதால பல நன்மைகள் இருக்கு, நாம எப்போதும் இளமையாக இருக்கலாம், நோய் நொடிகள் நம்மை அண்டாது, நீங்க யாருன்னு மக்களுக்கு தெரியணும்னா ? அல்லது சீக்கிரம் பிரபலம் ஆகணும்னா “..ஸ்போட்ஸ் மூலமாக லிவிங் காட்..” ஆகிடலாம்.!

மேலும் உங்களால் சொசைட்டி நல்லாயிருக்கும் இந்த சொசைட்டியும் நல்ல அந்தஸ்த்து, வேலையை கொடுக்கும், மேலும் பணம், புகழ் அனைத்தும் விளையாட்டில் சாதிக்க முடியும்.!

இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடிக்கும் மேல் இதில் எத்தனை பேர் ஸ்போட்ஸ்ல இருக்காங்க? புள்ளி ஒருசதவீதம் கூட இல்லை !? வருத்தமாக இருக்கிறது மத்திய அரசு ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள் 12 ஆம் வகுப்பு பாடத்தில் 2 பாடம் ஸ்போட்ஸ் கொண்டு வரப்போறாங்க..? சந்தோசமாக இருக்கிறது.

அதனால ஸ்போட்ஸ் பற்றி நிறைய தெரிஞ்சுக்கிடனும், ஸ்போட்ஸ்சில் உள்ள விஷயங்களையும் கத்துக்கிடனும், எங்க அப்பா போல நானும் ஸ்போட்ஸ்மேன் ஆனேன். இப்ப எனக்கு 55 வயசு ஆகுது ஆனால் 30 வயதிற்குரிய ஆற்றல் இருக்கிறது. இன்றும் டென்னிஸ் விளையாடுகிறேன். போட்டிக்குப்  போகிறேன், வெற்றி பெற்று வர்றேன்.

முதல்ல ஸ்கூல் லெவல்ல சப்ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என்று 19 வயது வரை இருக்கிறது. ஒலிம்பிக்கிற்கு வயது வரம்பு கிடையாது, வயது குறைவாக இருந்தாலும் அல்லது நீங்க 60 வயதில் பிட்டாக இருந்தால் கலந்து கொள்ளலாம், இங்க பர்பார்மென்ஸ் முக்கியம்..!

உடற்கல்வி சார்ந்த படிப்பு படிக்கணும்னா +2 முடித்த பிறகு B.Sc.பிசிக்கல் எஜுகேஷன் பண்ணலாம், B.P.E. பேச்சுலர் ஆப் பிசிக்கல் எஜுகேஷன் இதற்கு +2 முடித்து 3 வருட டிகிரி கோர்ஸ் படிக்கணும், அடுத்து பிஜி B.P.Ed 2 வருடம் இதுவும் பிசிக்கல் எஜுகேஷன், அப்புறம் மாஸ்டர் ஆப் பிசிக்கல் எஜுகேஷன், M.Phil மாஸ்டர் ஆப் பிளாஸபி 1 வருடம், புல்டைம் PhD. 3 வருடம், பார்ட்டைம் PhD. 4 வருடம், அடுத்து டிப்ளமோ இன் பிசிக்கல் எஜுகேஷன், இதை அரசு நடத்தும் இதை படித்து விட்டால் பிசிக்கல் எஜுகேஷன் டீச்சர் ஆகிடலாம். M.Sc., யோகா, PhD டிப்ளமோ இன் யோகா, பிஜி டிப்ளமோ இன் யோகா, மேலும் நீங்கள் கோட்ச் ஆகணும்ன்னா NIS நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்போட்ஸ் என்று இருக்கிறது பத்து மாசம் டிப்ளமோ கோர்ஸ் இதைப்படித்து முடித்தால் கோட்ச் ஆகிடலாம்.

1990 ஆம் ஆண்டு வரைக்கும் ஸ்போட்ஸ்சே வித்தியாசமா இருந்தது. அப்ப ஸ்கில் இருந்தால் போதும் ஆனா இப்ப 90 சதவீதம் பிட்னஸ் 10 சதவீதம் ஸ்கில் என்று மாறியிருக்கிறது.

மேலும் ஒலிம்பிக் போட்டி 4 வருஷத்திற்கு ஒருமுறை நடத்துகிறார்கள். ஏன்னா நீங்க என்ன தான் பிட்டாக இருந்தாலும் 4 வருஷத்திற்குள் உடம்புல நிறைய மாற்றங்கள் ஏற்படும் அதனால 4 வருஷத்திற்கு ஒருமுறை நடத்துகிறார்கள்.

உணவு பற்றிச் சொல்லும் போது புரோட்டின் உடம்புக்கு மிகவும் அவசியம் மட்டன், சிக்கன், முட்டை எல்லாத்திலேயும் புரோட்டின் இருக்கு. அடுத்து கால்சியம், மல்டி விட்டமின் தேவை மேலும் ஒருநாளைக்கு 2 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்கணும், கீரை வகைகள், பாதாம் பருப்பு போன்றவைகள், புரூட்ஸ் சாப்பிடணும்,

விளையாடி முடித்து வந்தவுடன் ரெஸ்ட் எடுக்கணும். விட்டமின் சி போன்ற சாத்துக்குடி, எலுமிச்சம்பழம் ஜூஸ் குடிக்கணும். அப்புறம் ஹெவி பிரேக் பாஸ்ட், இடையில் சூப் குடிக்கணும், மட்டன், சிக்கன், வகைகள் சாப்பிடணும், அடுத்து ரெஸ்ட், அத்துடன் உடம்பையும் பார்த்துக்கிடனும்.

உடற்பயிற்சி ஒருநாளைக்கு மூன்று பகுதிகளாக அதாவது மூன்று 8 மணி நேரம் என்று பிரித்துக் கொள்ள வேண்டும் முதல் எட்டில் ஜென்ரல் பிட்னஸ் பண்ணனும், இரண்டாவது எட்டில் வெய்ட் ட்ரைனிங் பண்ணனும், மூன்றாவது எட்டில் ஸ்கில் சம்பந்தமா டெவலப் பண்ணனும்,

நான் நிறையா ஸ்போட்ர்ஸ் ஸ்டுடண்ட்டை உருவாக்கி வெற்றி பெற வைத்திருக்கிறேன். அவர்களது குடும்பம் பற்றித் தெரிந்து கொண்டு வேலை வாய்ப்புக்கும் ஏற்பாடு செய்திருக்கிறேன், மேலும் ஸ்போட்ஸில் மாஸ்டர் டிகிரி முதல் கோட்ச் ஆகணும் வைராக்கியம் கொண்டவர்களுக்கு கேட்கும் தகவல்கள் பெற்றுத் தந்திருக்கிறேன்.

விளையாட்டைப் பற்றியே நினைக்கிறேன் விளையாட்டைப் பற்றியே மற்றவர்களிடமும் பேசுகிறேன், எனக்கு விளையாட்டு என்பது உயிர் மூச்சு.! என்கிட்ட வரும் PhD மாணவர்களுக்கு கைடு பண்றேன். இன்னும் நூற்றுக்கணக்கான PhD மாணவர்களை உருவாக்கணும், ரீசர்ச் பண்ணனும் ஆசை!

எந்த நோயும் வராமல் தடுக்கணும்னா விளையாட்டில் முழு மூச்சாக ஈடுபடுங்கள். அதேபோல உங்க உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கணும்னா விளையாட்டையும் காதலியுங்கள் வாழ்க்கையில் மேம்படலாம் வாழ்த்துக்கள்..!

விளையாட்டையே வாழ்வாகக் கொண்டு உடல் நலம் பேணிட உத்வேகம் தருகின்ற சாதனையாளர் முனைவர் ராஜ்குமார் அவர்களது கனவுகள் நிறைவேறி தொடர்ந்து சாதிக்க ‘ஆளுமைச்சிற்பி’ மனதார வாழ்த்துகிறது.