மூளை என்னும் முதல்வன்-09

திரு. A.மோகனராஜூ, சேலம்

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்கிறார்கள், வாய்க்கும் நோய்க்கும் என்ன தொடர்பு இருக்கிறது?. இது உண்மையா அல்லது வெறும் கதையா. எதுகை மோனை என்று வந்தால் எது வேண்டுமானாலும் சொல்வார்களா?. வாய்க்கும் நோய்க்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது !.

இருக்கிறது எங்கிறார் ஒரு நண்பர். நோய் வந்தால் மருத்துவர் இதைச் சாப்பிடக்கூடாது அதைச் சப்பிடக் கூடாது என்று சொல்கிறார். சுவையான எதையும் சுதந்திரமாகச் சாப்பிட முடியாது. வாய்க்கும் மனதிற்கும் பிடிக்காத கசப்பான மருந்துகளைக் கொடுத்துச் சாப்பிடச்சொல்வார்கள். நோய்கொண்ட மனிதனின் வாய், பொருள் புரியாத மொழியில் குழப்பமாக முணுமுணுத்துக்கொண்டே இருக்கும்.

சிரிப்பும் புன்னகையும் மகிழ்ச்சியின், அன்பின் வெளிப்பாடு, இன்பத்தின் திறவுகோல். முகத்தில் இருந்து வரும் சிரிப்பு, மலர்களில் இருந்து வரும் மணம் போன்றது. எல்லோரையும் மகிழ்விக்கும் சிரிப்பு ஆரோக்கியத்தின் அடையாளம். உடலில் எந்த நோயும் இல்லை என்பதன் விளக்கம் அது. சிரிப்பு மனித ஒற்றுமைக்கு அழகு சேர்க்கும்.
மனித உறவிற்கு வலிமைக்கொடுக்கும். சிரிப்பும் புன்கையும் மனிதனை விலங்கு, பறவைகளிடம் இருந்து வேறுபடுத்திக்காட்டும் தனிச்சிறப்பு.

ஒரு நண்பர் அமெரிக்காவில் நன்றாகப் பணியாற்றி வந்தார், அமெரிக்காவின் குடியுரிமையும் பெற்றுவிட்டார். ஆனால் அவர் போதாத காலம் புற்று நோயால் பாதிக்கப்பட்டுவிட்டார். நல்ல மருத்துவம் கிடைப்பதாலும் முறைப்படி மருத்துவம் எடுத்துக் கொண்டதாலும் நோயை நல்ல கட்டுப்பாட்டில் சில வருடங்களாக வைத்திருந்தார். அவர் சமீப காலம் பத்து நாள் விடுப்பில் தன் சொந்த ஊரான சென்னைக்கு வந்திருந்தார். அங்கே தன் சொந்தப் பந்தங்களுடன் 10 நாட்கள் கழித்துவிட்டு மீண்டும் அமெரிக்க சென்றார். முதல் வேலையாகத் தன் மருத்துவரிடம் நோய் பற்றி சோதனை ஒன்றை எடுத்தார். சோதித்த மருத்துவர் அசந்துபோய் ‘‘உங்கள் நோய் 20 சதம் குறைந்திருக்கிறதே கடந்த பத்து நாட்களும் என்ன செய்தீர்கள்’’ என்று கேட்டார்.

அவர் அதற்கு கடந்த பத்து நட்களும் தன் உறவுக்காரர்கள், பழைய நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று எல்லோருடனும் சேர்ந்து பழையக்கதைகள் பல பேசி சேர்ந்து உணவுண்டு, மனம்விட்டுச் சிரித்து ஆட்டம் கொண்டாட்டமாக மிகவும் மகிழ்வுடன் இருந்ததாகச் சொன்னார்.

அதற்கு மருத்துவர் சொன்னார் ‘‘மீண்டும் இரண்டு மாதங்கள் விடுப்புக்கொடுத்துவிட்டு சென்னைக்கு சென்று வாருங்கள். இங்கே மருத்துவத்துக்கு செலவாகும் பணத்தை உங்கள் சொந்தங்களுடன் விருந்துக்கு செலவிட்டு வாருங்கள்’’ என்று சென்னார். அதன்படியே அவரும் விடுப்பில் சென்னைக்கு வந்து இரண்டு மாதங்கள் மகிழ்வுடன் கழித்துச்சென்றார். இப்போது உண்மையில் அவரின் புற்று நோய் 50 சதம் குறைந்து இருந்தது. (National Cancer institute tells us how does the laughter reduce stress related hormones and increase T-cells to activate cancer patient to reduce his cancer)
உடலும் மனமும் சோர்வாய் இருக்கும்போது புன்னகையும் நம்பிக்கையுடன் பேசும் மிகவும் நெருக்காமான ஒருவர்கூட நேரம் செலவிடுங்கள் வாழ்க்கை மாற்றியமைக்கப்படும். வருந்திய நீங்கள் வாய்விட்டுச் சிரிக்கத்தொடங்குவீர்கள்.

நீங்கள் வருத்தமாக இருக்கும்போது உங்கள் விரலை மூக்கின் முன் வைத்து மூச்சின் வேகத்தை கவனித்துப் பாருங்கள். மூச்சு உள்ளேயும் வெளியேயும் போகிறதா இல்லை நின்றுவிட்டதா என்று உங்களால் சரியாகச் சொல்ல முடியாது அவ்வளவு மெதுவாக போய்க்கொண்டிருப்பதை நீங்கள் உணர முடியும். அதே சமயம் நீங்கள் மனம் விட்டுச் சிரிக்கும்போது மூச்சு பீச்சியடித்துக்கொண்டு 110 – கிலோமீட்டர் வேகத்தில் வாய் வழியே கழிவுகளுடன் கார்பன்டை ஆக்சைடும் காற்றும் வெளியேறுவதையும் அதற்குச் சமமானத் தூயக் காற்று நுரையீரல் முழுவதும் நிறைவதையும் உங்களால் உணரமுடியும்.

மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.