சாதனையாளர் பக்கம்
மதுரை ஆர். கணேசன்
அன்றைக்கு கல்வி, குருகுலத்தில் ஆரம்பமானது. இன்றைக்கு கல்வி செயற்கை நுண்ணறிவிலும் தொடர்கிறது. ஒவ்வொரு காலங்களிலும் மாறும் “..கல்வியின் பரிணாம வளர்ச்சி..” மாணவர்களை வரவேற்கக் காத்திருக்கும் சிவப்பு கம்பள விரிப்பாக மாறுகிறது..!
ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களுடன் அழைத்துச் செல்லப்படும் அறிவியல் கண்காட்சிகளின் அனுபவங்கள் மற்ற மாணவர்களை விட அறிவியல் செயல் திறன் கொண்ட மற்றும் அறிவியல் சிந்தனை கொண்ட மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது..!
அப்பேர்ப்பட்ட அறிவியலால் வெற்றி பெற்ற ஆயிரக்கணக்காண மாணவர்களில் மதுரை சிவகாசி நாடார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ச.அகிலேஷ் தனது கண்டுபிடிப்புகளால் தான் யார் என்பதை உலகிற்கு பறை சாற்றியிருக்கிறான்..!
அகிலேஷின் சாதனைகளுக்கு கிடைத்த பரிசுகள் மற்றும் விருதுகள்..,
# ஆறாம் வகுப்பு படிக்கும் போது 5 மீ
உடைய (FEMTO) “..பெம்டோ
செயற்கைக்கோள்..” கண்டு பிடித்தது.
# ஏழாம் வகுப்பில் மோட்டார் வாகனங் களை ஹைட்ரஜன் மூலம் இயங்க வைப்பது. அதாவது உப்புத் தண்ணீரில் ஒரு லிட்டர்க்கு 98 கி/மீ மைலேஜ் தரும் இரண்டு சக்கர வாகனம் ஓட்ட முடியும் என்ற கண்டுபிடிப்புக்கு போலந்து நாட்டில் நடந்த (IWIS) இன்டர்நேஷனல் இன்வென்ஷன் சயின்ஸ் போட்டியில் ஒரு தங்கம் மற்றும் இரண்டு சிறப்பு விருதுகள் மற்றும் ருமேனியா நாட்டின் விருதும் பெற்றுள்ளது.
# அடுத்து 25 வினாடிகளில் சர்வதேச 51 ராக்கெட்களின் பெயர்களைப் பார்க்காமல் ஒப்புவித்தல் சாதனை நிகழ்வில் இன்டர்நேஷனல் புக் ஆப் அவார்ட் பெற்றது.
# இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்., மற்றும் அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பாக சாதனையாளர் விருது மற்றும் மேஜிக் புக் ஆப் விருது,
# மத்திய அரசின் குவிஸ் போட்டியில் மை கவர்மென்ட் சான்றிதழ் பெற்றது.
# ராக்கெட் டெக்னாலஜி பற்றிய ஏவுகணைப் பயிற்சியில் தகுதிச் சான்றிதழ் பெற்றது.
# மதுரை மாவட்ட அளவில் பேச்சுப் போட்டியில் முதல் இடம் பெற்றது.,
# மாநில அளவில் நடந்த செஸ் (SESS) அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு.,
# யோகாவில் மாநில அளவில் மூன்றாம் பரிசு.,
# NASA நாசாவில் ‘சைண்டிஸ்ட் ஆப் தி டே’ சான்றிதழ் பெற்றது.
# ISRO இஸ்ரோவில் ரிமோட் சென்ஸிங் பயிற்சிச் சான்றிதழ் பெற்றது.
# ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.
# AAA பொறியியல் கல்லூரியில் நடந்த பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.
மேலும் வாசிக்க….ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.