
உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 25
முனைவர்.எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர்.
Indian Institute of Petroleum and Energy (IIPE) என்பது இந்திய அரசால் நிறுவப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனம் ஆகும்.
இது குறிப்பாக Petroleum, Energy, and Chemical Engineering துறைகளில் உயர்தர தொழில்நுட்பக் கல்வியினை வழங்குகிறது. இந்நிறுவனம் 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இந்தியப் பெட்ரோலிய நிறுவனம் (CSIR-IIP) டேராடூனில் உள்ளது. IIT MADRAS வழிகாட்டுதலோடு இயங்கி வருகிற இந்நிறுவனம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.மிகச் சிறந்த வேலை வாய்ப்பிற்க்கும், சர்வதேச மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கும் புகழ்பெற்றது. மேலும் மிக அதிகச் சம்பளம் பெறும் வாய்ப்புகளைத் தருகிறது.
IIPE வழங்கப்படும் இளநிலைப் பட்டப்படிப்புகள்
1. B.Tech.,
Petroleum
Engineering
* Oil & Gas exploration
* Drilling technology
* Refinery operations
2. B.Tech., Chemical Engineering
* Petrochemical industries
* Refinery and chemical plants
* Energy production industries
3. B.Tech.,Mechanical Engineering
* Oil rig machinery
* Industrial equipment design
* Energy sector engineering
IIPE : சேர்க்கை வழிமுறை
பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவில் பயின்று JEE முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். JEE Main Rank அடிப்படையில் JoSAA Counselling மூலம் சேர்க்கை வழங்கப்படும். கட்டணம் ஆண்டிற்கு இரண்டு லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து மத்திய அரசின் கல்வி உதவித் தொகையும் கிடைக்கும்.
நிறுவனத்தில் உள்ள
சேர்க்கை இடங்கள்
* Petroleum Engineering– 60 seats
* Chemical Engineering – 60 seats
* Mechanical Engineering – 60 seats