உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 18

முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர்.
உத்திரபிரதேசம், நொய்டாவில் உள்ள National Council For Hotel Management and Catering Technology (NCHMCT) அங்கீகாரத்துடன் நாடு முழுவதும் மத்திய அரசின் கல்வித்துறை மற்றும் சுற்றுலாத் துறைகளின் கீழ் இயங்கும் 21 – உயர்கல்வி நிறுவனங்களும் 29 – மாநில அரசு நிறுவனங்களும் மேலும் எண்ணற்ற தனியார் நிறுவனங்களும் உணவக மேலாண்மை சார்ந்த படிப்புகளை வழங்குகின்றன.டெல்லி (பூசாவளாகம்), நொய்டா (உத்திர பிரதேசம்), சண்டிகர், காந்திநகர் (குஜராத்), மும்பை (மகாராஷ்டிரா) ஆகிய தேசிய தரவரிசைப் பட்டியலில் உள்ள உணவக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் சென்னை தரமணி சிஐடி வளாகத்தில் இயங்கி வரும் Institute of Hotel Management Catering Technology and Applied in Nutrition, Chennai (IHM) தனித்துவம் வாய்ந்த நிறுவனமாகும். 1963 – ஆம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுலா துறையின் ஒரு அங்கமாகத் துவங்கப்பட்ட இந்நிறுவனம் விருந்தோம்பலைக் கற்றுத் தருவதில் உலகத் தரவரிசையில் 12 வது இடத்தில் உள்ளது.
NCHMCT அங்கீகாரம் பெற்றுள்ள இளங்கலை / முதுகலைப் பாடப்பிரிவுகள்: (3 ஆண்டுகள் / 2 ஆண்டுகள்)
- B.Sc., (Hospitality and Hotel Administration Generic )
- B.H.M., (Bachelor of Hotel Management)
- B.Sc., (Catering Science and Hotel Management)
- B.Sc., (Hotel Management and Tourism)
- B.Sc., (Hotel Management and Culinary arts)
- M.Sc., Hospitality and Hotel Management
பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் : (6 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை)
- Diploma in Food Production
- Diploma in Bakery and Confectionery
- Diploma in Front Office Operation
- Diploma in House keeping operation
- Post Graduate Diploma in Accommodation Operations and Management
- Post Graduate Diploma in Dietics and Hospital Food Service
- Craftsmanship Certificate course in Food Production and Patisserie
- Craftsmanship Certificate in Food and Beverage Service
மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.