ஊடகம் பழகு 09
திரு.மனோஜ் சித்தார்த்தன்
சமூக வலைத்தளங்கள் என்பது உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் காரணியாக மாறி உள்ளது. மிகப்பெரிய நிறுவனங்கள் கூட தங்களின் பொருள்களை சமூக வலைதளங்கள் வழியாக விற்பனை செய்யத் துவங்கி விட்டன.
அந்த அளவுக்கு சமூக வலைதளங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. நண்பர்களுடன் சாட்டிங் செய்ய புதிய நண்பர்களை உருவாக்க, குழுவாய் இணைந்து தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள என ஆரம்பத்தில் இருந்த சமூக வலைத்தளங்கள் இன்று பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்களில் முக்கிய ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. வலைதளங்கள் இல்லையேல் எனக்கு வாழ்க்கையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
இளைஞர்கள் முதல் முதியோர் வரை ஆண் பெண் பேதம் பார்க்காமல் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருவது தான் இந்தச் சமூக வலைதளங்கள். இதில் மிக முக்கியமான ஒன்று யூடியூப். சமூக வலைத்தளங்களாக, டிஜிட்டல் ஊடகமாக எனப் பன்முகத்தன்மையுடன் செயல்படும் இந்த யூடியூப் தளம் மனித வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம். ‘‘உங்களுக்கு இந்த சேனல் புடிச்சிருக்கா? பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, சப்ஸ்கிரைப் பண்ணுங்க, பக்கத்துல இருக்குற பெல் ஐகானை கிளிக் பண்ணுங்க’’ என்று சொல்வது வெறும் வார்த்தை அல்ல ஒவ்வொருவரின் கனவு, பலரின் இலட்சியம். இன்று லட்சக்கணக்கான மக்களின் வருவாய்த் தேவைகளை இந்த யூடியூப் பூர்த்தி செய்கின்றது. இது குறித்துச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
யூடியூப் அறிமுகம்
யூடியூப் என்பது வீடியோ பகிர்வு தளமாகும். யூடியூப் என்பது அமெரிக்காவினைச் சேர்ந்த வீடியோ சமூக வலைதளமாகும். இது பிப்ரவரி 14, 2005 – ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2006 – ஆம் ஆண்டு இந்நிறுவனத்தை கூகுள் நிறுவனம் (Google) 1.65 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இதில் உலகம் முழுவதிலும் 2.5 பில்லியன் டாலர் பயனாளர்கள் உள்ளனர். பயன்பாட்டின் எளிமையே இதன் வெற்றிக்குக் காரணமாக அமைகின்றது.
நமக்குத் தேவையானவற்றை நாமே தேடி நமக்குத் தேவையான மொழியில் வீடியோ வடிவில் பார்த்துத் தெரிந்து கொள்ள இந்தத் தளம் மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் நாம் உருவாக்கும் வீடியோக்களை இத்தளத்தில் பதிவிட்டு மற்றவர்களுக்கும் பகிரச் செய்யலாம். எனவே மக்களிடத்தில் யூடியூப் மிகவும் பிரபலமடைந்து வருகின்றது.
முன்பெல்லாம் ஒரு தகவல் வேண்டுமென்றால் இணையதளத்தின் மூலம் தகவல்களைச் சேகரிப்போம். ஆனால் யூடியூப் தளத்தின் மூலம் பல்வேறு மொழிகளில் பல்வேறு தலைப்புகளில் நமக்குத் தேவையான விஷயங்களை மிக எளிதில் வீடியோ வடிவில் காண முடியும். எதைப் பற்றித் தேடினாலும் அதற்கான வீடியோக்கள் நமக்குத் தேவையான மொழிகளில் கிடைப்பதுதான் இதனுடைய முதல் வெற்றி.
அந்த வகையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கல்வி வீடியோக்கள், திரைப்படப் பாடல்கள் எனப் பல்வேறு வகையான வீடியோக்களை உள்ளடக்கியது தான் இத்தளம். பயன்பாட்டின் எளிமை அனைத்துத் தரப்பு மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வீடியோக்களை தேடும் வசதி, பிடித்த வீடியோக்களை நமக்கு கிடைத்த நேரத்தில் பார்த்து ரசித்திட முடியும் என்பது தான் இதனின் கூடுதல் சிறப்பு. 2023 கணக்கின்படி உலகம் முழுவதிலும் நாள் ஒன்றுக்கு 3.7 – மில்லியன் வீடியோக்கள் தினசரி இத்தளத்தில் பதிவிடப்படுகின்றது.
மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.