ஆளப் பிறந்தோம் – 26
திரு.இள.தினேஷ் பகத்
என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு,
வணக்கம். “கடந்த ஆண்டு அது கடந்து போனதாகவே இருக்கட்டும்; வரவிருக்கும் எதிர்காலம் அனைவருக்கும் சிறப்பானதாய் அமையட்டும்.” தற்போது நம்மிடமுள்ள நடப்பு ஆண்டில் நாம் தான் முன்னேறிச் செல்ல வேண்டும். “எதுவும் தாமதமாகிவிடவில்லை. இந்த இடத்தில் ஆரம்பித்தால்கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்குப் போய்விட முடியும்” என்ற வண்ணதாசனின் வரிகளை நெஞ்சங்களில் நிரப்பி முதல் அடி எடுத்து வையுங்கள். அந்த வானமும் வசப்படும். உங்களின் முயற்சிகளும் வெற்றி பெறும். உங்களின் வாழ்வும் இனி வளம் பெறும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
இந்தத் தொடரில் கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பொதுத் துறை நிறுவனமான NLC (Neyveli Lignite Corporation Limited) Graduate Executive Trainee பதவிக்கான தேர்வு அறிவிப்புகள் வரப்பெற்றுள்ளது. இத்தேர்வுக்கு www.nlcindia.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி ேததி 15.01.2025 ஆகும்.
1. கல்வித் தகுதி
BE/B.Tech. பொறியியல் பாடப்பிரிவில் (Mechanical, Electrical, Control & Instrumentation Civil) SC/ST பிரிவினர் 50% மதிப்பெண்ணும் இதர பிரிவனர் 60% மதிப்பெண்ணும் பெற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. வயது வரம்பு
பொதுப் பிரிவினர் (GT) 21 வயதிலிருந்து 30 வயது வரையிலும், SC/ST பிரிவினர் 35 வயது வரையிலும், OBC பிரிவினர் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
3. தேர்ந்தெடுக்கும் முறை
GATE-2024 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்முகத் தேர்வு (ம) மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு பட்டதாரிப் பொறியாளராக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தில்
(1 Lakh) NLC-யில் பணிநியமனம் செய்யப் படுகிறார்கள்.
கடந்த 20 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் பொறியியல் பயில்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் இளநிலைப் பொறியியலுக்குப் பிறகு உயர் கல்வி பயில (ம) மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிவாய்ப்புகள் பெறுவதற்கு GATE தேர்வுகள் எழுத நமது இளையோர் முன்வருவதில்லை. நமது நாட்டிலுள்ள IIT (ம) NIT-இல் குறைந்த கட்டணத்தில் சேர்ந்து படிக்கும் வாய்ப்புகளும் நமது தமிழ்நாடு மாணவர்களுக்குக் கிடைக்கப் பெறுவதில்லை என்பது மிகவும் கவலைக்குரிய செய்தி ஆகும். அதைவிடக் கவலை அளிக்கும் செய்தி என்னவென்றால் பொறியியல் படிக்கும் மாணவர்கள் பலருக்கு GATE தேர்வின் முக்கியத்துவமும் தெரிவதில்லை. மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.