சாதனையாளர் பக்கம்

மதுரை ஆர். கணேசன்

லகப் பொதுமறையாம் “..திருக்குறளை..’’, பள்ளி, கல்லூரி மாணவர்கள் முற்றோதல் செய்வதைச் செய்தித்தாள்களில் படித்திருக்கின்றோம், நேரிலும் பார்த்திருக்கிறோம்.!

மாணவர்கள், திருவாசகம் முற்றோதல் செய்திருப்பதையும் அவ்வப்போது கேள்விப்பட்டிருப்பீர்கள்..?!
உலகெங்கும் தேடிப்பார்த்தாலும் “..சிலப்பதிகாரம் முற்றோதல்..” யாராவது செய்திருக்கிறார்களா? என்றால் வாய்ப்பில்லை எனலாம்?!

ஆனால், தமிழகத்தில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றும் ராஜசேகர் நினைத்ததால் “..இரண்டு மாணவிகளைச் சிலப்பதிகாரம் முற்றோதல்..” செய்ய வைக்க காலம் கனியும் வரை காத்திருந்து உருவாக்கியிருக்கிறார்..!

அதன் பலனாகத் தமிழாசிரியரின் தொடர் முயற்சி மற்றும் பல்வேறு வகையில் அவ்வபோது ஊக்கப்படுத்துதல் மூலமாக இரண்டு மாணவிகளையும் சிலப்பதிகாரம் முற்றோதல் செய்ய வைத்துத் தமிழக அரசின் பரிசையும், பாராட்டையும் பெற வைத்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது..!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ந.சுப்பையாபுரம் அரசுப் பள்ளியில் பயிலும் “..வீரச்செல்வி மற்றும் வேணி இரண்டு மாணவிகளும் சிலப்பதிகாரம் முழுவதும் தொடர்ந்து 4 – மணி நேரம் 6 – நிமிடங்கள் (246 நிமிடங்கள்) மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் முற்றோதல் செய்திருக்கின்றனர்.

இந்தச் சாதனையானது “..ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு சாதனைப் புத்தகத்தில்..” இடம் பெற்றுள்ளது..!
தமிழாசிரியர் ராஜசேகர், அரசு மேல்நிலைப் பள்ளி, ந.சுப்பையாபுரம், சாத்தூர்,
“..எங்கள் பள்ளியில் படிக்கும் வீரசெல்வி, வேணி மாணவிகள் இரண்டு பேருமே கடந்த 3 வருடங்களாகத் தொடர் பயிற்சியாலும், முயற்சியாலும் இந்தச் சாதனையை எட்டியுள்ளனர்.

தமிழ் மீது கொண்ட பற்றுக் காரணமாக காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வந்து கற்றுக் கொண்டனர்.
இவர்கள் ஏற்கனவே 1330 – திருக்குறள் முற்றோதல் செய்து தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக பரிசுகள், பாராட்டுக்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலப்பதிகாரம் 3 – காண்டம், 30 – காதைகள், 5270 – அடிகள் கொண்டது. இத்தகைய பெருங்காப்பியத்தை பள்ளி வேலை நாட்களில் காலை, மாலை என கூடுதல் நேரம் ஒதுக்கியும், தனது பள்ளிப் பாடங்களையும் சேர்த்து கூடுதலாக படித்தனர்.

இவர்களை ஊக்கப்பரிசாலும், பாராட்டு வார்த்தைகளாலும், தத்தம் முயற்சியாலும், தமிழ் மொழி மீது கொண்ட ஆர்வம், காதலாலும் இம்மாபெரும் சாதனையை முதன் முதலாக நிகழ்த்தியுள்ளார்கள்.

மூன்று வயதினிலேயே தந்தையை இழந்த மாணவி வீரசெல்வியின் அம்மா முனீஸ்வரி, பட்டாசுத்
தொழிற்சாலையில் கூலிக்கு வேலை பார்க்கிறார். அவர்களது பராமரிப்பில் படித்து வருகிறார்.
மாணவி வேணியின் தந்தையார் தாய் சந்தானம், பாண்டிய லட்சுமி இருவரும் கூலி வேலைக்குச் செல்கிறார்கள்

இந்தக் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு படிக்கிறார்.

சிலப்பதிகாரத்தில் உள்ள ஒவ்வொரு காதையும் இரண்டு மாணவிகளுமே தனித்தனியாகவும், பிறகு ஐந்து காதைகள், பத்துக் காதைகள் படித்தும், பின்னர் இதன் தொடர்ச்சியாக மேலும் முயற்சி செய்து முப்பது காதைகள் முழுவதும் ஒப்புவிக்கும் திறன் பெற்றனர்.

ஒவ்வொரு காதைகள் நடத்தும் பொழுதும் அக்காதைகளில் குறிப்பிட்டுள்ள செய்திகள் கதை யோட்டத்தை முதலில் கூறுவேன். அதற்குப் பிறகு ஒவ்வொரு அடியாக உச்சரிப்புத் தெளிவோடு பலமுறை சீர்பிரித்துச் சொல்லித் தந்தேன். புரியவில்லை என்றால் மீண்டும் புரிகின்ற அளவிற்கு சொல்லித் தந்து தெளிவுப்படுத்துவேன்.

எனக்கு வேறு பணிகள் இருந்த பொழுது சிலப்பதிகாரம் கற்பது மாணவிகளுக்கு தடைபடாமல் இருக்க, எனது மனைவி ஜான்சிராணி அலைப்பேசி குரல் பதிவு மூலமாகவும், வீட்டிற்கு அழைத்தும் சொல்லித்தந்து உறுதுணையாக இருந்துள்ளார்கள்.

ஒவ்வொரு காதை முடிந்தவுடன் புத்தகம், எழுதுகோல் பரிசு மற்றும் பணப்பரிசு அளித்து ஊக்கமளித்திருக்கிறேன். அதேபோலச் சென்னைக்கு விமானத்தில் அழைத்து செல்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.
நான் எனது மனைவி மற்றும் இரண்டு மாணவிகள் அவர்களுடைய பெற்றோர்கள் என்று அனைவரும் சொன்னபடியே சென்னைக்கு அழைத்துச் சென்று வந்தோம்.

மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.