உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 21


முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர்.

மிழ்நாட்டின் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தைத் தொடும் முன்னரே நிறைய தொழில்துறையின் வேலைவாய்ப்புத் தேவையை பூர்த்தி செய்தவை பாலிடெக்னிக் கல்லூரிகளே. அடிப்படைச் சிந்தனை, விதிகள், கருத்தியல், கோட்பாடு இவற்றைப் புரிந்து கொள்ள இயலாத மாணவர்கள் கூட தனித்திறனில் தொழில்நுட்ப வல்லுனராக முடியும். தற்போதும் கூட கலை,அறிவியல், பொறியியல் பட்டப்படிப்புகளைத் தாண்டி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உடனடி வேலைவாய்ப்பைத் தருவதாக பாலிடெக்னிக் கல்லூரிகள் விளங்குகின்றன. கிழக்கிந்திய கம்பெனியினால் 1794 – இல் நாட்டிலேயே முதல்முறையாக சர்வே ஸ்கூல் எனும் பெயரில் சென்னையில் முதல் பொறியியல் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் நீட்சி தான் கிண்டி பொறியியல் கல்லூரி.

ஐந்தாண்டு திட்டங்கள் ஒதுக்கப்பட்ட நாட்களில், பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் பொதுக் கல்வித் துறையினாலும், பாலிடெக்னிக் கல்லூரிகள் தொழில் மற்றும் வணிகத்துறையினாலும் நிர்வகிக்கப்பட்டன. தமிழகத்தில் 1957 அக்டோபர் 14 – ஆம் நாள் தொழில் கல்வி இயக்குனரகம் தொடங்கப்பட்டது. மாநில உயர் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் – Directorate of Technical Education (DoTE) தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் தட்டச்சு பயிற்சி நிறுவனங்களை நிர்வகித்து வருகிறது.

மாநிலத் தொழில் நுட்பக் கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கி வரும் பாலிடெக்னிக் கல்லூரிகள் விபரம்:

1. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் – 55
2. அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் – 32
3. தன்னாட்சி பெற்ற பாலிடெக்னிக் கல்லூரிகள் – 12
4. சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் – 414
5. இணைவு பெற்ற பாலிடெக்னிக் கல்லூரிகள் – 4
6. புதுச்சேரி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் – 6
7. புதுச்சேரி சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் – 2

இவை தவிர தமிழகத்திலும் புதுச்சேரியிலும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி கல்லூரிகள் இயக்குனரகத்தின் ஆளுகையில் இயங்கி வருகின்றன.

கற்பிக்கப்படும் பட்டயப் படிப்புகள்

1. Civil Engineering
2. Architectural Assistantship
3. Mechanical Engineering
4. Automobile Engineering
5. Production Engineering
6. Metallurgy
7. Marine Engineering
8. Electrical and Electronics Engineering
9. Electronic and Communication Engineering
10. Instrumentation and Control Engineering
11. Information Technology
12. Mechatronics Engineering
13. Robotics
14. Computer Engineering
15. Computer Networking
16. 3D Animation and Graphics
17. Textile Technology
18. Textile Processing
19. Textile Marketing and Management
20. Apparel Technology
21. Sugar Technology
22. Garment Technology
23. Textile Technology (knitting)
24. Petrochemical Engineering
25. Chemical Engineering
26. Leather Technology (Footwear )
27. Modern Office practice
28. Air Craft Maintenance Engineering
29. Aeronautical Engineering
30. Medical Electronics
31. Printing Technology
32. Industrial safety
33. Hotel Management and Catering Technology
34. Mechanical Engineering (Tool and Dye)
35. Mechanical Engineering (Refrigeration and Air Conditioning)
36. Agriculture Technology
37. Fashion Technology
38. Textile Technology (Textile Design and Weaving)
39. Textile Technology (Man made fibre)
40. Applied Arts and Crafts (Fashion and Apparel Design)
41. Textile Technology (knitting and garment technology)
42. Civil Engineering (Sandwich)
43. Mechanical engineering (Sandwich)
44. Mechanical Engineering (Foundry)
45. Mechanical Engineering Machine Tool Maintenance and Repairs (Sandwich)
46. Electricals and Electronics Engineering (Sandwich)
47. Mechatronics Engineering (Sandwich)
48. Polimer Technology
49. Chemical Engineering
50. Ceramic Technology
51. Civil and Environmental Engineering
52. Communication and computer networking
53. Artificial Intelligence and Machine learning
54. Automation (Robotics)
55. Diploma in Logistics Technology
56. Mechanical Engineering (CAD)
57. ECG Technology
58. Web Technology
59. Biomedical Electronics
60. Interior decoration
61. Electrical Engineering and Electric Vehicle Technology
62. Computer Engineering and IOT
63. Paper Technology
64. Direction, screenplay and TV production.
65. Diploma in renewable energy.

பல பட்டயப் படிப்புகள் Sandwich Courses – அதாவது தொழில் – இடைக் கல்வித் திட்டம் எனும் பிரிவுகளில் படிக்கும் போதே இன்டர்ன்ஷிப் வேலை செய்யும் அனுபவமும் மாறி மாறி வரும் படிப்பாகும். சில பாடப்பிரிவுகளைப் படித்து முடித்தவுடன், சில மாதங்கள் / வருடங்கள், வணிக நிறுவனங்களில் பணிபுரிந்து அனுபவம் பெற்றால் தான் பட்டையச் சான்றிதழ் கிடைக்கும்.