சிறப்புக் கட்டுரை

முனைவர். எஸ். அன்பரசு,  முதுகலை இயற்பியல் ஆசிரியர்
தனித்துவமான கல்வி நிறுவனங்கள்

சென்னை,  வேப்பேரியில் மெட்ராஸ் கால்நடை கல்லூரி 1903 – இல் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி 1936 –  இல் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்றது. பின்னர் 1974 – இல் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தில் இணைந்தது. நாமக்கல்லில் 1985 — இல் தமிழகத்தின் இரண்டாவது கால்நடை மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்ட பின் 1989 – இல் அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களால் நாட்டிலேயே கால்நடை மருத்துவத்திற்கென தனிப் பல்கலைக்கழகமாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்பல்கலைக்கழகம் TANUVAS நிறுவப்பட்டது.

தற்போது சென்னை (1903), நாமக்கல் (1985), திருநெல்வேலி (2012), ஒரத்தநாடு (2012), சேலம் (2020), தேனி (2020), உடுமலைப்பேட்டை (2020) ஆகிய கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களும், உணவு மற்றும் பால் தொழில்நுட்பக் கல்லூரி – கொடுவெளி (1993) கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரி -ஓசூர் (2012) உட்பட 9 – கல்வி நிறுவனங்கள் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகின்றன.

கற்பிக்கப்படும் பாடங்கள் மற்றும் காலம்

  1. B.V.Sc & AH ., – Bachelor of Veterinary Science and Animal Husbandry (5 1/2 Years)
  2. B.Tech., Food Technology (4 years)
  3. B.Tech., Poultry Technology (4 years)
  4. B.Tech., Diary Technology (4 years)

இப்பல்கலைக்கழகத்தில் B.V.Sc & AH பாடப்பிரிவிற்கு மொத்தம் 580 இடங்களும்,  B.Tech பாடப் பிரிவிற்கு தலா 40 இடங்களும் உள்ளன.

*   இளங்கலைப் பாடப்பிரிவுகள்    – 4

*   முதுகலைப் பாட பிரிவுகள்      – 29

*   முதுகலை பட்டயப் படிப்புகள்   – 25

*   முனைவர் பட்ட ஆய்வுத்துறைகள்  23

இவற்றோடு 12 ஆராய்ச்சி மையங்களும், 15 தனித்தஆராய்ச்சி கூடங்களும், 30 விரிவாக்க மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

சேர்க்கை முறை

B.V.Sc & A.H, Food Technology பாடப்பிரிவுகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 % இடங்கள் நிரப்பப்படுகின்றன. மீதமுள்ள 85%  இடங்கள் மாநில ஒதுக்கீட்டில், 12ஆம் வகுப்பு உயிரியல் அல்லது தாவரவியல் / விலங்கியல் மற்றும் இயற்பியல், வேதியியல் பாடங்களில் கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. வயது வரம்பு மற்றும் இனசுழற்சி அரசு விதிகளின்படி பொருந்தும். 12-ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவு (விவசாயம், உயிரி தொழில்நுட்பம்) பயின்ற மாணவர்களுக்கு 5 % இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிற தொழிற்கல்விக்கான 7.5 % இட ஒதுக்கீடு 69 சதவீத இன சுழற்சி பாதிக்காத வகையில் வழங்கப்படுகிறது.

உலகளாவிய பல்கலைக்கழகங்களோடு தொடர்பு

உலகத்தரம் வாய்ந்த அமெரிக்க பல்கலைக் கழகங்களான ஒக்லஹோமா ஸ்டேட் யூனிவர்சிட்டி (OSU),  வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டி (WSU) ஆகியவற்றோடு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளதன் அடிப்படையில்..

  1. Student Extensive Programs
  2. Exchange Research Programs
  3. Faculty Exchange programs
    ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.

TANUVAS பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை விபரம்

  1. Free Education to First Rank Holders from Non Graduate Family
  2. Pattukottai Alagiri Endowment Scholarships
  3. State Government SC / ST scholarships
  4. SC / ST loan Scholarships
  5. Backward Class Scholarships
  6. Most Backward Class Scholarships
  7. CM’s Bright Student Award to SC / ST Students
  8. Teachers Scholarship
  9. SC / ST Price Money Award
  10. TANUVAS MERIT Scholarship.

இவை தவிர ICAR-Indian Council of Agriculture Research தரும் கல்வி உதவித்தொகை மற்றும் மத்திய அரசின் கல்வி உதவித் தொகையும் பல பிரிவுகளில் மதிப்பெண்களின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

வேலை வாய்ப்புகள்

B.V.Sc., மற்றும் B.Tech., (உணவு தொழில்நுட்பம் பால்  பதனிடுதல், கோழி வளர்ப்பு தொழில்நுட்பம்) படித்தவர்களுக்கு உலகளாவிய அளவில் பல்வேறு வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. தனியார் கால்நடை கிளினிக், அரசு கால்நடை மருத்துவமனைகள்,  விலங்குகள் நல அமைப்புகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், வனத்துறையில் வனவிலங்கு மருத்துவர்கள், கால்நடை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்  ஆகியவற்றில் கீழ்காணும் நிலைகளில் வேலை வாய்ப்புகளை பெறலாம்.

  1. கால்நடை மருத்துவர்கள் / அறுவை சிகிச்சை நிபுணர்கள்.
  2. உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள்.
  3. வனவிலங்கு மருத்துவ அதிகாரிகள்.
  4. உயிரியல் பூங்காக்களில் கால்நடை மருத்துவர்கள்.
  5. கால்நடை மீட்பு / மறுவாழ்வு மற்றும் பராமரிப்பில் ஈடுபடும் அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் மருத்துவர்கள்.
  6. நோயறிதல் சேவை மையங்கள் (Diagnostic Centres).
  7. ராணுவத்தில் RVC (Remount Veterinary Corps).
  8. அரசு தனியார் ஆராய்ச்சி கூடங்கள்.

PG/Ph.D., உயர்கல்வி ஆராய்ச்சி மற்றும் கால்நடை விஞ்ஞானிகள்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) மற்றும் மாநில அரசின் TNPSC தேர்வுகள் கால்நடை மருத்துவம் மற்றும் விவசாயத்தில் பட்டம் பெற்றவர்களின் விருப்பத்தேர்வாக உள்ளது.

இணையதள முகவரி : www.tanuvas.ac.in