ஆளப்பிறந்தோம் – 26

திரு.இள.தினேஷ்பகத்

ல்ல பொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்’’ என்ற வரிகளை 60 – வருடங்களுக்கு முன்னதாகவே சொல்லிவிட்டார் பட்டுக்கோட்டையார். ஆக்கபூர்வமாகச் செயல்படுபவர்களே நேரத்தைச் சரியாக கையாளுகின்றனர். மற்றவர்கள் வீணாக செலவழிக்கிறார்கள். பணம் செலவானால் கூட அதை மீண்டும் சம்பாதித்துக் கொண்டுவரமுடியும்; ஆனால் காலத்தைத் தவறவிட்டால் எவராலும் மீள் உருவாக்கம் செய்ய முடியாது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நம்முடைய நல்ல பொழுதுகள் வீணடிக்கப்படுகின்றன. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் தொடர்களில் நிறையத் தாய்மார்கள் தொலைந்து போய்விட்டனர். பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கைப்பேசியிலேயே காலத்தைத் தள்ளுகின்றனர். முழுநேரமும் சமூக வலைதளத்தில் மூழ்கிக் கிடக்கும் இளையோர் சாதிக்க முன்வருவதில்லை.

என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம்.

2025 – புத்தாண்டு தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்துவிட்டது. மீதமுள்ள நாட்களை நல்ல முறையில் பயன்படுத்தி அரசுப் பணிகளில் நீங்கள் அமர வாழ்த்துகிறேன்.

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளின்கீழ் வேலை வாய்ப்பு அறிவிப்புகள் வரப்பெற்றுள்ளது. இத்தேர்வுக்கு http://www.aai.aero என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி 18.03.2025 ஆகும்.

  1. கல்வித் தகுதி

Junior Executive, (Fire Services) பணிக்கு Mechanical / Automobile / Fire ஆகிய பிரிவுகளில் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Junior Executive (Human Resources) பணிக்கு HRM / HRD / PM & IR / Labour Welfare ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் (அ) MBA (அ) அதற்கு நிகரான பட்டம் பெற்றிருக்க வேண்டும். Junior Executive (Official Language) பணிக்கு இந்தி, ஆங்கிலம் (or) ஆங்கிலம் (ம) இந்தி கொண்ட முதுகலைப் பட்டம் முடித்து 2 – ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க ேவண்டும்.

  1. வயது வரம்பு

பொதுப் பிரிவினர் (GT) 27 – வயது வரையிலும் SC/ST பிரிவினர் 32 – வயது வரையிலும், OBC பிரிவினர் 30 – வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  1. தேர்வு செய்யப்படும் முறை

மேற்கண்ட பிரிவுகளில் விண்ணப்பிக்கும் நபர்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு கணினி வழித் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த கட்டமாகச் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணிநியமனம் அளிக்கப்படும். தீயணைப்புப் பிரிவில் இருக்கும் பணியிடங்களுக்கு உடற்தகுதி / உடல் திறன் / வாகனம் ஓட்டும் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படுகிறது.

மேலும் வாசிக்க… ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.