ஆளப் பிறந்தோம் -17

திரு.இள.தினேஷ் பகத்

ன் படிக்க வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்? எப்படிப் படிக்க வேண்டும்? எதற்குப் படிக்க வேண்டும்? எப்போது படிக்க வேண்டும்? என்று பாரதிதாசன் கூறும் இந்தப் பாடலைப் பாருங்கள்

‘‘நூலைப் படி – சங்கத்தமிழ்
நூலைப் படி – முறைப்படி
நூலைப் படி
காலையில் படி – கடும்பகல் படி
மாலை இரவு பொருள்படும் படி – (நூலைப்)
கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் ேவண்டும்படி
கல்லாதவர் வாழ்வதைப்படி – (நூலைப்)
பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகம் ஏமாறும்படி
வைத்துள நூல்களை ஒப்புவதெப்படி  – (நூலைப்)
தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப்படி
அடங்கா இன்பம் மறுபடி
ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி.’’ – (நூலைப்)

என் இனிய சகோதர/சகோதரிகளே!

வணக்கம். சமீபத்தில் TNPSC Group-4 அறிவிப்பு வந்து, தேர்வு வரும் சூன் மாதத்தில் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்வுக்கு ஏறக்குறைய இருபது இலட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

நம்மில் பலர் தேர்வு அறிவிக்கை (Notification) வந்த பிறகுதான் படிக்கவே தொடங்குகின்றனர். அறிவிக்கை வெளிவந்த மூன்று மாதத்தில் தேர்வு நடத்தப்படுகிறது. இதுபோல தேர்வு அறிவிக்கை வரும் போதெல்லாம் அந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு தேர்வு எழுதிச் சிலர் தோல்வியடைகின்றனர். பின்னர் நானும் தேர்வுலாம் எழுதுறேன்… ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அரசாங்க வேலைக்குப் போகணும்னா அதிர்ஷ்டம் வேணும் அப்படி, இப்படினு அதற்கான காரணத்தைச் சொல்லித் திரிகின்றனர். ஆனால் ஒரு சிலர் அறிவிக்கை (Notification) வருவதற்கு முன்னரே தேர்வுக்கான பாடத் திட்டங்களைப் படித்து முடித்துவிட்டு, அறிவிக்கை வந்த பிறகு மறுவாசிப்பு (ம) பயிற்சி (Test) செய்து எளிதாகத் தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பணிகளில் அமர்கின்றனர். எனவே, தேர்வு அறிவிப்புகள் வரும் முன்னரே தேர்வுக்காகத் திட்டமிட்டு, கால அட்டவணைகளைக் கடைபிடித்து எளிதாகத் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

இந்தத் தொடரில் CSIR (Council of Scientific and Industrial Research) நிறுவனத்தில் பிரிவு அலுவலர் (ம) உதவிப் பிரிவு அலுவலர் தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது என்பதைப் பார்க்கலாம். அதற்கு முன்னர் இவரின் கதையை வாசியுங்கள். நிச்சயம் உங்களை உத்வேகம் அடைய செய்யும்.

2019ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணித்தேர்வில் இந்திய அளவில் 286வது இடம்பெற்று தேர்ச்சி பெற்ற பூர்ணசுந்தரி IAS அவர்களின் கதையைத்தான் சொல்லப் போகிறேன்.

மதுரை மாவட்டம், மணி நகரம் பகுதியில் வசிக்கும் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் பூர்ணசுந்தரி. ஒன்றாம் வகுப்புப் படிக்கும் போது பள்ளியில் ஒருநாள் போர்டில் ஆசிரியர் எழுதிப்போட்ட வரிகள் பூர்ணசுந்தரிக்கு மங்கலாகத் தெரிய வர பதற்றமடைந்த பூர்ணசுந்தரி தந்தையிடம் விஷயத்தைக் கூற, அவரது தந்தை மதுரையில் உள்ள கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் பூர்ணசுந்தரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு விழித்திரைச் சிதைவு நோய் ஏற்பட்டுள்ளதால் (Retinal Degenerative Disease) பார்வை நரம்புகள் சுருங்கி, பார்வைத் திறன் குறைந்திருப்பதாகக் கூறினர். இந்த நோயினால் வலது கண்ணின் பார்வை முழுவதுமாக பறிபோய்விட்டது.

இருப்பினும் இடது கண்ணின் பார்வையினைக் காப்பாற்ற மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அதற்காக செய்த அறுவை சிகிச்சையும் ெவற்றி பெறவில்லை. பின்னர் அந்த கண்ணிலும் பார்வை முழுவதுமாகத் தெரியாமல் போனது. கண் பார்வை முற்றிலும் இல்லாத நிலையிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல புறக்கணிப்பு, அவமானங்கள் அனைத்தையும் தாண்டி முதல் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றார் பூர்ணசுந்தரி.

மதுரை பாத்திமா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முதலாமாண்டு படிக்கும் போது தமிழ் வகுப்பில் பேராசிரியர் லதா, மாணவர்களிடம் ‘‘நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்? என்ற தலைப்பில் கட்டுரை எழுதிக் கொடுங்கள்’’ என்று கேட்டிருக்கிறார்.

அப்போது, ‘‘கலெக்டர் ஆக வேண்டும் என்ற இலட்சியத்தில் குடிமைப்பணித் தேர்வுகள் எழுத உள்ளேன்’’ என்று கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் பூர்ணசுந்தரி. பேராசிரியர்கள் கொடுத்த ஊக்கம் காரணமாக கல்லூரி நூலகத்திற்குச் சென்று போட்டித் தேர்வுகள் தொடர்பான விவரங்களை சேகரிக்கத் தொடங்கினார் பூர்ணசுந்தரி.

குடிமைப் பணிக்கான தேர்வுக்குத் தயாராகிக் கொண்டே, SSC, TNPSC, IBBS போன்ற ேதர்வுகளும் எழுதினார். IBBS அறிவித்த Regional Rural Bank போட்டித் தேர்வில் வெற்றி பெற்று வங்கியில் கிளார்க் ஆக அவருக்கு வேலை கிடைத்தது. சாதாரண கிளார்க் பணியில் பணிபுரிய அவரது மனம் ஒப்பவில்லை. எனவே பணிநேரம் போக, மீத நேரங்களில் UPSC தேர்வுக்குத் தன்னை தயார் செய்து வந்தார். மூன்று முறை முயன்று நான்காவது முறையில் UPSC தேர்வில் வெற்றி பெற்றார், பூர்ணசுந்தரி IAS அவர்கள்.

தான் படித்துக் கொண்டிருக்கும் சமயங்களில் அயற்சி அடையும் போது A.R. ரகுமான் இசையமைத்த பாடல்கள் கேட்பது வழக்கமாம். அதிலும் அடிக்கடி கேட்கும் பாடல் சங்கமம் படத்தில் ‘மழைத்துளி, மழைத்துளி மண்ணில் சங்கமம்’ என்று தொடங்கும் பாடல் அவருக்குப் பிடிக்குமாம். அதே பாட்டில், ‘மனமே, மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு, விழியே விழியே இமையே தீயும் போதும் கலங்காதிரு’ என்ற வரிகள் அவருக்கு மிகவும் பிடிக்குமாம்.

‘‘ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்’’

என்ற வள்ளுவரின் திருக்குறளுக்கு உதாரணமாகத் தன்னுடைய கண்பார்வையை முற்றிலும் இழந்த நிலையிலும் தன்னுடைய ஊக்கத்தால் பார்வை உள்ளவர்களே UPSC தேர்வில் வெற்றி பெறப் போராடி வரும் நிலையில் UPSC தேர்வில் வெற்றி பெற்றுத் தன்னுடைய அகப்பார்வையால் இந்த உலகத்தைக் காணுகின்றார் பூர்ணசுந்தரி IAS அவர்கள்.

செல்வி பூர்ணசுந்தரி IAS அவர்களது பேட்டியானது, 2020 செப்டம்பர் மாதம் ‘ஆளுமைச் சிற்பி’ மாத இதழிலும் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. (காண்க. aalumaisirpi.com, e-books)

CSIR (Council of Scientific and Industrial Research) நிறுவனத்துப் பிரிவு அலுவலர் (ம) உதவிப் பிரிவு அலுவலர் (SO), (ASO) ஆட்சேர்ப்பிற்கான அறிவிக்கைகள் https://www.cris.res.in என்ற தளத்தில் வெளியிடப்படும்.

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் ெபற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

பொதுப் பிரிவினர் (GT) 33 வயது வரையிலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) 36 வயது வரையிலும், பட்டியல் இனத்தோர் (ம) பழங்குடியினர் (SC & ST) 38 வயது வரையிலும் இத்தேர்வினை எழுதலாம்.

தேர்வு முறை

CSIR, பிரிவு அலவலர் (ம) உதவி பதிவு அலுவலர் தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும்.

  1. Stage-1 (Preliminary) – Objective Type
  2. Stage-2 (Mains) – Descriptive Type
  3. Stage-3 – Interview

CISR (SO, ASO) Stage-1 Exam pattern

Paper Section No.of Questions Marks Time
I General Awareness 100 100 2 hours
II English & Comprehension 50 50

 

CISI (SO, ASO) – Stage-2 Exam Pattern

CSIR Stage-2 தேர்வு SO, ASO பிரிவு அலுவலர் பதவிக்குக் கட்டுரை வடிவில் ஆங்கிலம் (அ) இந்தியில் எழுதும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். 150 மதிப்பெண்களுக்கான ேதர்வு 2 மணிநேரத்தில் எழுத வேண்டும்.

CSIR (SO, ASO) – Stage-3 Exam Pattern

CSIR-Stage-3 ேதர்வு (SO) பிரிவு அலுவலர் பணிக்கு நேர்முகத் தேர்வும், (ASO) உதவிப் பிரிவு அலுவலர் பணிக்கு Computer Proficiency Test எழுதும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கும்.

எழுத்துத் தேர்வு (ம) மதிப்பெண்களின் தரவரிசையின் அடிப்படையில் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு CSIR-இல் பிரிவு அலுவலர் (Section Officer) (ம) உதவிப் பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணியிடம் வழங்கப்படுகிறது.

எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் Syllabus மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் உள்ளது.

நன்றி, அடுத்த இதழில் ேவறொரு வேலை வாய்ப்புத் தகவலுடன் சந்திக்கிறேன்.=