ஆளப் பிறந்தோம் – 7

திரு. இள. தினேஷ் பகத்

வால்’ என்ற வார்த்தையில்தான் ‘வாசல்’ என்ற வார்த்தையும் இருக்கின்றது. எழுத்துக்களை இடம் மாற்றி படித்துப் பாருங்கள். நாம் எதிர்கொள்ளும் சவால்களிலேதான் நம் எதிர்காலத்திற்கான வாசல்கள் திறக்கின்றன.

என் இனிய சகோதர/சகோதரிகளுக்கு வணக்கம். கடந்த இதழில் SSC (CGC) தேர்வுக்கான Tier-1 பாடத்திட்டம் பற்றி பார்த்தோம். இந்த இதழில் SSC (CGC) Tier-2 பாடத்திட்டம் என்ன? எத்தனை மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும்? எத்தனை தாள்கள் அமைந்திருக்கும் என்ற விவரங்களைப் பார்க்க இருக்கிறோம்.

SSC (CGC) Tier-2 தேர்வில் எத்தனை தாள்கள் (paper) அமைந்திருக்கும்?

SSC (CGC) Tier-2-இல் 3 தாள்களுக்குத் தேர்வு நடைபெறும்.

SSC (CGC) Tier-2 ேதர்வுக்கான பாடத்திட்டம் என்ன?

வ.எண். கேள்வித்தாள் மதிப்பெண்கள்
1. Paper-1 (அனைத்து பதவிகளுக்கும் கட்டாயம்) 350
2. Paper-II (JSO (Junior Statistical Officer) பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டும்) 100
3. Paper-III (உதவி தணி்கை அதிகாரி/உதவி கணக்கு அதிகாரி பதவிக்கு

விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டும்)

100

 

Session’s Section Module Subject No.of questions Marks Weightage Duration
Session-1 Section-I Module-1 Mathematical Abilities 30

30

90

90

23%

23%

1 Hour
    Module-2 Reasoning and General Intelligence
  Section-II Module-1 English Language and
Comprehension
45

25

135

75

35%

19%

1 Hour
    Module-2 General Awareness
Session-2 Section-III Module-1 Computer Knowledge Test 20 60 Qualifying 15 min.
    Module-2 Data Entry Speed Test Data Entry Task Qualifying 15 min

 

SSC (CGC) Tier-2 (Paper-II and Paper-III-க்கான பாடத்திட்டம்)

Paper Section No.of. Questions Marks Duration
Paper-II Statistics 100 200 2 Hours
Paper-III General Studies (Finance & Economics) 100 200 2 Hours

 

SSC (CGC) Paper-I-இல் தவறாக விடையளிக்கப்பட்ட ஒவ்வொரு வினாவுக்கும் தலா 1 மதிப்பெண் கழித்தம் செய்யப்படும். அதேபோல SSC (CGC) Paper-II and Paper-III-இல் தவறாக விடையளிக்கப்பட்ட ஒவ்வொரு வினாவுக்கும் ½ மதிப்பெண் கழித்தம் செய்யப்படும்.

SSC (CGC) Tier-2-க்கான பாடத்திட்டத்தை பார்த்தவுடன் பாடத்திட்டம் மிகவும் கடினமாக இருக்கும் போலவே, நம்மால் இத்தேர்வில் தேர்ச்சி பெறமுடியுமா? என்ற அச்சம் ஏற்படுகிறதா? அப்படி என்றால் இந்தக் கதையைப் படியுங்கள்.

அந்த நாட்டில் மன்னரைத் தேர்ந்து எடுக்க வித்தியாசமான முறை ஒன்று இருந்தது. அங்கு யார் வேண்டுமானாலும் மன்னராகலாம். ஆனால் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே அவர் பதவியில் இருக்க முடியும். 2 ஆண்டுகள் முடிவில் அந்த மன்னரை அரண்மனைக் காவலர்கள் ஒரு படகில் ஏற்றி ஆள் இல்லாத தீவு ஒன்றில் விட்டுவிடுவார்கள். மிகப்பெரிய பாலைவனத் தீவு அது. அந்த கடல் வழியாகவே நீந்திச் செல்லவும் முடியாது; பல அடி ஆழமுள்ள கடல் அது. மேலும், பெரிய சுறாக்களுக்கு இரைதான் ஆகவேண்டும். பாலைவனம் கடலைவிட மிகப் பயங்கரம். விஷப் பாம்புகளும், கொடிய மிருகங்களும் உலவும். அங்கிருந்து தப்பித்துவர வழிகள் கிடையாது. சாப்பிடவும் எதுவும் கிடைக்காது. தீவுக்குச் சென்ற அதே இரவில் அங்கே போனவர் இறந்துவிடுவார்கள்.

ஆனாலும், மன்னர் பதவிக்காக ஆசைப்பட்டு ெபயர் கொடுத்தவர்களின் பட்டியல் நீண்டது. ஒவ்வொருவரும் மன்னராக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தனர். மன்னரானதும் முதல் நாள் பட்டு மெத்தையில் படித்தாலும் தூக்கம் வராது. தங்கத் தாம்பளத்தில் வைத்து அறுசுவை உணவைக் கொடுத்தாலும் சாப்பிட முடியாது. நாட்களை எண்ணிக் கொண்டிருப்பர். கடைசி நாள் அந்தப்புர அறையை பூட்டிக்கொண்டு எங்காவது பதுங்கிவிட, அரண்மனைக் காவலர்கள் கதவை உடைத்து உள்ளே போய் அரசரை பலவந்தமாகத் தூக்கி வந்து படகில் ஏற்றி தீவில் விட்டுவிடுவார்கள்.

ஆனால், இந்த முறை பதவியேற்ற மன்னர் வித்தியாசமாக இருந்தார். எப்போதும் புன்னகையுடன் வலம் வந்தார். மக்களுக்குப் பயனுள்ள பல திட்டங்களை வகுத்தார். பகைவர்கள் படையெடுத்த போது திறமையாகப் போரிட்டு நாட்டைக் காப்பாற்றினார். சிறைக் கைதிகளை விடுவித்தார். தீவுக்குப் போகும் நாளுக்கு முந்திய இரவு கூட சந்தோஷமாகத் தூங்கப் போனார்.

மறுநாள் அரண்மனைக் காவலர்கள் அந்தப்புர கதவை உடைக்க வந்தனர். ஆனால் மன்னரோ, குளித்துப் புத்தாடை அணிந்து கதவைத் திறந்து வைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தார்.

அரண்மனைக் காவலர்களுக்கு ஆச்சரியம். மன்னரோ தீவுக்குப் போக மகிழ்ச்சியாகப் படகில் ஏறினார். படகில் போகும் போது படைத்தளபதி திகைப்போடு கேட்டார் :

“மன்னரே, தீவில் மரணம் காத்திருக்கிறது என்பது தெரியும். பின்னர் எப்படி தங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?”

மன்னர் புன்னகைத்தவாரே சொன்னார்  “நான் மன்னரான மறுநாளே ஒரு கப்பல் நிறைய ஆட்களை அனுப்பி அந்தத் தீவை சுத்தம் செய்ய சொன்னேன். மன்னரின் உத்தரவை அவர்கள் நிறைவேற்றினார்கள். பாம்புகள், கொடிய மிருகங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு வந்தனர்.

அடுத்ததாக கப்பலில் நிறைய ஆட்களை அனுப்பி அங்கு ஒரு அழகிய அரண்மனையைக் கட்டச் சொன்னேன். நிறைய மரங்கள், பழச்செடிகள் வளர்க்கச் சொன்னேன். எல்லாம் செய்து முடித்துவிட்டார்கள். நான் இதுவரை வாழ்ந்த அரண்மனையோடு, அந்தத் தீவில் இருக்கும் அரண்மனையை ஒப்பிட்டால் நான் இதுவரை தங்கியிருந்தது ஒரு குடிசை மாதிரி. பணிவிடை செய்ய வேலையாட்கள், காவலுக்கு வீரர்கள், உணவு வகைகள் என எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துவிட்டேன். இப்போது அந்தத் தீவில் ஒரு மன்னரைப் போலவே நான் வாழ்க்கையை தொடருவேன்” என்றார், மன்னர்.

அந்த நாட்டை ஆண்டுவந்த அனைத்து அரசர்களுக்கும் கொடுக்கப்பட்ட சவால் ஒன்றுதான். பலரும் அந்தச் சவாலை எதிர்க்கொள்ளாமல் மாண்டுபோனார்கள். ஆனால் இந்த அரசர் அவருக்குக் கொடுக்கப்பட்ட சவாலையே வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு மன்னரானார்.

நாளைய நம்பிக்கை நாயகர்களே போட்டித் தேர்வுக்கு என்று நாம் படிக்க தொடங்கிய மறுகணம் முதலே நன்றாகப் படிக்க Time
Table அமைத்துக் கொண்டு, பாடத்திட்டங்களை விரைவாகப் படித்துவிட வேண்டும்.

நம்மால் முடியுமா? என்ற எதிர்மறை எண்ணத்தை முதலில் தூக்கி எறியுங்கள். தன்னம்பிக்கையுடன் படியுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

SSC (CGC) தேர்வுக்குப் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்ன?

  1. கடந்த 10 வருட வினாத்தாள்களைக் சேகரியுங்கள். கடந்த ஆண்டுகளில் எவ்வாறு வினாக்கள் கேட்கப்பட்டு உள்ளது? நாம் எந்த அளவிற்கு இந்தத் தேர்வுக்குப் பயிற்சி செய்ய வேண்டும்? என்ற தெளிவு பிறக்கும்.
  2. 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான NCERT புத்தகங்களைச் சேகரித்துப் படியுங்கள்.
  3. SSC (CGC) தேர்வுக்கு என சந்தையில் தலைப்பு வாரியாகப் புத்தகங்கள் கிடைக்கின்றன. அதில் ஏதாவது ஒரு பதிப்பகத்தின் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.
  4. இறுதியாக SSC தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு தினசரி ஒரு மாதிரி வினாத்தாளைக் கொண்டு பயிற்சி செய்யுங்கள். ஏனெனில் குறிப்பிட்ட கால அளவுக்குள் விடையளிப்பது, தினசரி பயிற்சி செய்தால் மட்டுமே சாத்தியமாகும்.
  5. தினசரி 2 மணிநேரம் கணிதப் பகுதிக்கென ஒதுக்கிப் பயிற்சி செய்யுங்கள்.

ஆயிரம் மைல்கள் கொண்ட பயணம் நீங்கள் எடுத்துவைக்கும் முதல் அடியில்தான் ஆரம்பமாகிறது. முழுப் பயணத்திற்கும் முறையாகத் திட்டமிட்டு, நம்பிக்கையுடன் படிக்கத் தொடங்குங்கள்.

தொடர் பயிற்சியும், விடாமுயற்சியும் ஒருங்கே அமையப் பெற்றால் வெற்றி நம் வாசல் தேடி வரும்.

அடுத்த இதழில் SSC (CHSL) Combined Higher Secondary Level தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது? இந்தத் தேர்வில் வெற்றி  பெறுவதற்கான சூட்சமம் என்ன? என்பதைப் பார்க்கலாம். நன்றி…