வெள்ளோட்டம் வெல்லட்டும் – 13

இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு

விண்வெளிக்கு செயற்கைக் கோள்கள் ஏவப்படுவதை அவ்வப்போது ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். அதைப்போலவே ஊடகங்களில் ஏவுகணைச் சோதனைகளின் வெற்றியைக் கண்டிருப்பீர்கள். இரண்டுமே ராக்கெட் என்ற பொதுச் சொல்லால் குறிக்கப்படுகின்றன.

செயற்கைக்கோளை சுமந்து செல்வது ஏவூர்தி (Launch vehicle). வெடிபொருளையோ/ வேறு ஆயுதத்தையோ சுமந்து செல்வது ஏவுகணை (Missile)

ஏவுகணையும் இந்தியாவும்

இன்று ஏவுகணைத் தொழில்நுட்பங்களில் இந்தியா உலகின் நான்காவது நாடாக இருக்கிறது. ஏவுகணைகள் இந்தியாவுக்குப் புதிதல்ல. பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் இரும்பு உருளையிலான மைசூர் ஏவுகணைகள் (Mysorean Rockets) பயன்படுத்தப்பட்டது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சுதந்திர இந்தியாவில், ஏவுகணைத் தொழில்நுட்பம் தொடர்
பான ஆய்வுகளும் உற்பத்தி முயற்சிகளும் பரவலாகத் தொடர்ந்து நிகழ்ந்து வந்தன. ஆனால், எல்லா முயற்சிகளின் பலன்களையும், அதனால் கிடைத்த தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் ஒருமுகப்படுத்த வேண்டிய தேவை, 1980-களில் ஏற்பட்டது. 

ஏவுகணைகளில் பல வகைகள் உண்டு. ஏவுகணைகளின் இயக்கத்தை வைத்து, சீரியங்கு ஏவுகணைகள் (Cruise Missiles) எறிவிசை ஏவுகணைகள்(Ballistic Missiles) என வகைப்படுத்தலாம்.  

தீபாவளி ராக்கெட் போன்றது “பேலஸ்டிக்’ ஏவுகணை. ஏவப்பட்டதும் விண்ணில் சீறிப்பாய்ந்து இலக்கைத் தாக்கும். இவ்வகை ஏவுகணைகள் விண்ணில் பறக்கும்போது ரடார்களின் பார்வையில் அகப்பட்டுக் கொள்ளும். ரடார்களிடமிருந்து தப்ப, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள், வளிமண்டலத்துக்கு வெளியில் சென்று பயணம் செய்து மறுபடியும் வளிமண்டலத்திற்குள் நுழைந்து இலக்கைத் தாக்கும்.

“க்ரூஸ்’ ஏவுகணை, ஏவப்பட்ட பின் கீழிறங்கி பூமிப் பரப்பிற்கு அல்லது கடற்பரப்பிற்கு மிக அருகில் பறந்து சென்று இலக்குகளைத் தாக்கும். இந்த உயரத்தில் மரங்களும், பறவைகளும், கடலலையும் ரடார்களைக் குழப்பும். இதனால் “க்ரூஸ்’ ஏவுகணை ரடார்களின் பார்வையிலிருந்து தப்பும். வழியில் குறுக்கிடும் மலைகளையும், கட்டடங்களையும் தவிர்த்து க்ரூஸ் ஏவுகணை பறக்கும்.

அக்னி, பிருத்வி உள்ளிட்ட இந்திய ஏவுகணைகள் ‘பேலஸ்டிக்’ ஏவுகணைகள். இந்தியாவின் பிரமோஸ், நிர்பய் ஆகியவை ‘க்ரூஸ்’ ஏவுகணைகள்.

ஏவப்படும் ஏவுகணைகளின் துவக்கம் மற்றும் இலக்கை வைத்தும் வகைப்படுத்தலாம். நிலத்திலிருந்து ஏவப்பட்டு கட்டடம், வாகனம் உள்ளிட்ட நிலஇலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள் (Surface to Surface Missiles), நிலத்திலிருந்து ஏவப்பட்டு விமானம், ஹெலிகாப்டர் உள்ளிட்ட வான் இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள் (Surface to Air Missiles), ராணுவ டாங்க்  (Anti?Tank Missiles) (Guided Missiles).

ாகனங்களை தகர்க்கும் ஏவுகணைகள் (Anti Tank Missiles) என பலப்பிரிவுகள் உண்டு. இது தவிர தாக்கும் தூரத்தை வைத்தும் ஏவுகணைகளை வகைப் படுத்தலாம். இலக்கைத் தாக்க லேசர் உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் மூலம் ‘வழிகாட்டப்படும் ஏவுகணைகள்’(Guided Missiles) உண்டு.

ஏவுகணைப் பூங்கொத்து

ஒரு தேசத்தின் பாதுகாப்புக்குப் பல வகையான ஏவுகணைகள் தேவை. ஒரு ஏவுகணையை உருவாக்க வடிவமைப்பு, உற்பத்தி, சோதனைகள் என பலகட்டங்களைக் கடக்க வேண்டும். ஒவ்வொரு வகையான ஏவுகணையையும் வடிவமைத்து உருவாக்கப் பல ஆண்டுகள் தேவைப்படும்.

இந்தப் பின்புலத்தில், தேவையான வகைகளில் ஏவுகணைகளை ஒன்றன்   பின்  ஒன்றாக உருவாக்கினால் எப்போது இந்தியா ஏவுகணைத்தொழில்நுட்பத்தில் தன்னிறைவு

அடைவது? இந்தச் சவாலைச் சமாளிக்க ஒரு தீர்வு முன்வைக்கப்பட்டது.

அது, தேவையான ஏவுகணைகளை ஒரு சேர வடிவமைத்தால் என்ன?  பல்வேறு ஏவுகணைகளுக்கான வடிவமைப்பு, சோதனை, உற்பத்தி இவைகளுக்கு தேவையான கட்டமைப்புகளையும் ஒரு சேர ஏற்படுத்தினால் என்ன? இந்தப் புதுமை யோசனையில் உதித்தது தான் ‘ஒருங்கிணைந்த வழிகாட்டப்பட்ட ஏவுகணை உருவாக்க நிரல்’- ஐ.ஜி.எம்.டி.பி (Integrated Guided Missile Development Program-IGMDP)

1980 களில் முன்னெடுக்கப்பட்ட ஐ.ஜி.எம்.டி.பி சுதந்திர இந்தியாவின் மிக முக்கிய தொழில்நுட்ப மைல்கல் எனலாம். இந்த முன்னெடுப்பின் முகமாக அறியப்பட்டவர் டாக்டர் ஏ.பி,ஜெ அப்துல்கலாம்.

இந்தியாவின் இந்த முக்கிய முயற்சியில் உருவாக்கப்பட்ட ஏவுகணைகள் என்னென்ன?

பிரித்வி (Prithvi): இது தரையிலிருந்து ஏவப்பட்டு தரை இலக்கைத் தாக்கும் குறைந்த தூர ஏவுகணை.

ஆகாஷ் (Akash): இது தரையிலிருந்து ஏவப்பட்டு தரை இலக்கைத் தாக்கும், நடுத்தர தூரம் செல்லும் ஏவுகணை.

திரிஷூல் (Trishul): இது தரையிலிருந்து ஏவப்பட்டு வான் இலக்கைத் தாக்கும் குறைந்த தூர ஏவுகணை.

நாக் (Nag): ராணுவ டாங்க் வாகனத்தைத் தாக்கும் ஏவுகணை.

அக்னி (Agni): இது தரையிலிருந்து ஏவப்பட்டு தரை இலக்கைத் தாக்கும் நீண்ட தூரம் செல்லும் ஏவுகணை. தொழில்நுட்பச் செயல்விளக்க வாகனமாக (Technology Demonstrator Vehicle) துவங்கப்பட்டு பின்னாளில் தனி ஏவுகணைத்திட்டமாக செயல்படுத்தப்பட்டது அக்னி ஏவுகணை.

இந்த ஏவுகணைகளைத் தவிர வேறென்ன ஏவுகணைகளை இந்தியா உருவாக்கியுள்ளது? ஏவுகணைகள் எப்படிச் சோதிக்கப்படுகின்றன?

(சோதனை தொடரும்)