வழிகாட்டும் ஆளுமை – 18

திரு. நந்தகுமார் IRS

ருமுறை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை பற்றிப் படித்துக் கொண்டிருந்தேன். அவருடைய கண்டுபிடிப்புகள் ஏராளம். எத்தனை எத்தனை கண்டுபிடிப்புகள்? எப்படி  இவ்வாறு நான் கண்டுபிடித்தேன் என்று அவரே குறிப்பிடுகிறார். ‘‘எல்லா மாதிரிகளும், மாமனிதர்களும் எப்படி தலைவர்கள் ஆகிறார்கள்.  நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை, பெரிய அறிவாளி இல்லை. ஆனால், எப்படி இவ்வாறு கண்டுபிடித்திருக்கிறேன் என்று பார்க்கின்ற பொழுது, நீண்ட நாட்கள் பிரச்சனைகளை சந்திக்கின்ற போது தான்.

 நான் எந்தப் பிரச்சனையை சந்திக்கிறேனோ அந்த பிரச்சனைக்கு தீர்வு காண நினைக்கும் போது ஒரு கண்டுபிடிப்பு பிறக்கிறது. பெரிய தலைவர்கள்,  மாமனிதர்கள் எல்லாமே அவர்களுடைய பிரச்சினையைப் பற்றி பெரிதாகப் பேசாமல், பிரச்சனையாக இருக்கின்ற பொழுது அந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டனர். அப்போது தான் அத்தனை படைப்புகளும் உருவாகின்றன” என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் குறிப்பிடுகிறார்.

 மனிதர்கள் பொதுவாக தம்முடைய பிரச்சனைகளை மிகைப்படுத்தி பேசுகின்ற போது அல்லது அதை வெளிப்படுத்தி யோசிக்கும் பொழுது அவர்களுக்கு, மற்ற சிந்தனைகள் ஓடுவதில்லை. ஆனால், பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் தலைவர்களாக இன்று ஜொலிக்க காரணம். அவர்கள் பிரச்சனைகளைக் கடந்து யோசித்துத் தீர்வு காண்கின்றார்கள்.

ஆபிரகாம் லிங்கனாக இருக்கட்டும், தாமஸ் ஆல்வா எடிசனாக இருக்கட்டும்  அதுபோல இன்னும் பெரிய தலைவர்களாக இருக்கட்டும் ஆரம்ப காலங்களில் பெரிய பிரச்சனைகளைச் சந்தித்து, அதற்கு தீர்வு கண்டு தான் மாபெரும் தலைவர்களாக இப்போது இருக்கிறார்கள்.

நெல்சன் மண்டேலா அவருடைய இனப் போராட்டம், நிறப்ேபாராட்டம் என அந்தப் போராட்டத்திற்கெல்லாம்,  தீர்வு காண முயன்ற போது தான் தலைவராக இன்று அவர் இருக்கிறார்.

எவர் ஒருவர் பிரச்சனையை, பிரச்சினையாகப் பார்க்கிறாரோ அவர் மனிதனாக இருக்கிறார். அந்த பிரச்சனைக்கு தீர்வு  காண்பவரே தலைவர்களாக மாறுகிறார்கள். அனைவரும் பிரச்சனைகளைப் பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள். ஆனால், அதற்கான தீர்வை, அந்த பிரச்சனைக்கான தீர்வை பற்றி யோசிக்கும் அளவுக்கு பலரும் முயல்வதில்லை.

 சிவில் சர்வீஸ் தேர்வில் கூட ஆப்டிடியூட் டெஸ்ட் முதல்நிலை தேர்வாக வைத்து விட்டார்கள். ஏனென்றால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, பிரச்சனைகளை எவ்வாறு கையாளுவது என்பது மிக முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. பிரச்சனைகளுக்கு தீர்வு என்று சொல்லும்போது யார் அந்த பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுக்கிறார்களோ, அவர்களே பெரிய தலைவர்களாக வாய்ப்பு அமைகின்றன.

 ஏன் வாஸ்கோடகாமா இந்தியா நோக்கி வந்தார்? அந்த காலத்தில் கனிம வளங்கள், இயற்கை வளங்கள் மிகவும் குறைவாக இருக்கும் நாடுகளில் மக்கள் தொகையும் அதிகமாக இருந்த போது, அது மிகப்பெரிய தொல்லையாக இருந்தது. அந்த அரசாங்கம், என்ன சொல்லியது என்றால் “நீங்கள் வெளியில் சென்று பொருள் தேடுங்கள்” என்று கூறியது. அதுதான் அதற்கான தீர்வு என்று கூறியது.  ஆகவே, அந்த நாட்டு மக்களுக்கு செய்தி அனுப்பப்பட்டது. அனைத்து மக்களும் அந்த பிரச்சனைக்குத் தீர்வு காணவே வெளியில் மக்கள் சென்று, புதிய புதிய இடங்களை கண்டுபிடித்தார்கள். அதேபோல் தான் கொலம்பஸ் வெஸ்ட் இண்டீஸை கண்டுபிடித்தார்.

ஏன் இது போன்ற கண்டுபிடிப்புகள் எல்லாம் தோன்றியது? இத்தனை அறிவியல் படைப்புகள் வந்தன, பல விதிகள் வகுக்கப்பட்டன, எண்ணற்ற உபகரணங்கள், சாதனங்கள் உருவாகின.   நாம் எல்லோரிடத்திலும் பிரச்சினைகள் கொட்டி கிடைக்கின்றன ஆனால், அந்தப் பிரச்சனைகளின்  சூழ்நிலையிலேயே நாம் இருக்கிறோம். எப்போது அந்தப் பிரச்சினைகளில் இருந்து மனிதன் வெளிவந்து புதிய உலகிற்கு செல்வான் என்றால் அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் போது தான்.

 உலகில் பல தலைவர்கள் இவ்வளவு உயர்ந்த இடத்தினை அடைந்திருக்கிறார்கள். என்று சொன்னால் அதற்கு காரணம், அவர்கள் சந்தித்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டதால் தான். எனவே யார் ஒருவர் பிரச்சினைகளைச் சந்தித்து அந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பவர்களாக விளங்குகிறார்களோ, அவர்கள் தான் தலைவர்களாக ஜொலிக்கிறார்கள். நீங்களும் உங்களுக்கு வருகின்ற பிரச்சனைகளைத் துணிவோடு சந்தித்து அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுங்கள். நிச்சயம் நீங்கள் வருங்காலத் தலைவர் ஆவீர்கள். வாழ்த்துகள்!! l =