கல்வி-அறிவு-ஞானம்

 

கடந்த இதழில் காலையில் எழுந்தவுடன் உடலையும், மூளையையும் சுறுசுறுப்பாக்கும் அனுலோமா – விலோமா பயிற்சி மற்றும் அதன் தொடர்ச்சியான பிராண சுத்தி ஆகிய இரு பிராணயாமப் பயிற்சிகள் குறித்துக் கண்டோம். இந்த இரு பயிற்சிகளையும் ஒரு மாதம் செய்த பின்னர் அடுத்த பயிற்சியான கபாலபதியைச் செய்யலாம். அது குறித்து தற்போது காணலாம்.

மூச்சுப் பயிற்சி-3

கபாலபதி பயிற்சி –

மூச்சுப் பயிற்சிகள் அனைத்தும் காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். அனுலோமா – விலோமா, பிராண சுத்தி ஆகிய இரு பயிற்சிகளை முடித்து விட்டு மூன்றாவது பயிற்சியாக கபாலபதியைச் செய்யவும்.

செய்முறை

4  மூச்சை உள்ளே இழுக்கும் போது ஒரே மூச்சாக ஆழமாக இழுக்கவும்.

4  மூச்சை வெளியே விடும்போது ஒரே மூச்சாக விடாமல் நான்கு அல்லது ஐந்து சிறு மூச்சுகளாக அழுத்தத்துடன் விடவும்.

4  இவ்வாறு விடும் போது காற்று அழுத்தத்துடன் வெளியே வருவதால் ‘ஸ்..ஸ்…’ என்ற சப்தம் வரும்.

4  இரண்டு நிமிடங்கள் செய்யவும்.

பலன்கள் –

4  மூக்கிலுள்ள அடைப்புகள் நீங்கும்.

4  சைனஸ்களில் தேங்கி நிற்கும் நீர் மற்றும் சளி வெளியேறும்.

4   மூளையின் இயக்கங்கள் சுறுசுறுப்பாகும்.

இந்த மூன்று மூச்சுப் பயிற்சிகளையும் ஒன்றன்பின் ஒன்றாக அதே வரிசையில் செய்யவும். வரிசை ஒழுங்கு மாறக் கூடாது.

ஒரு குருவின் துணையின்றியே செய்யக்கூடிய எளிய மூச்சுப் பயிற்சிகள் இவை. தரப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாகப் படித்துவிட்டு நாளையே இந்தப் பயிற்சிகளை துவங்கலாம். வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செய்யலாம்.

மூளைக்கு சுறுசுறுப்பைத் தரும் பிராண முத்திரை

மூளை தனது எரிபொருளாக குளுகோஸையே பயன்படுத்திக் கொள்கிறது. மூளையின் செல்களில் குளுகோஸ் சக்தியாக மாற பிராண வாயு (ஆக்சிஜன்) மிக மிக அவசியம் என்பதை ஏற்கெனவே கண்டோம். இவை நவீன விஞ்ஞானம் கூறும் உண்மைகள்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மூளைக்கும் பிராண சுத்திக்கும் இடையிலான தொடர்பு குறித்து நமது தந்திர யோகிகள் அறிந்திருந்தனர். இன்றைய விஞ்ஞானம் கூறுவதைவிடவும் மேலும் ஆழமாக அவர்கள் அறிந்திருந்தனர்.

மூளையின் இயக்கத்திற்கு பிராண வாயு (ஆக்சிஜன்) மட்டுமின்றி, ‘பிராண சக்தி’ எனப்படும் ‘பிராணனும்’ தேவை என தந்திர யோக நூல்கள் கூறுகின்றன.

இந்த பிராண சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்து, மூளையின் செயல் திறனைப் பலமடங்கு அதிகரிக்கச் செய்யும் எளிய தந்திர யோக முறையே பிராண முத்திரையாகும். (பிராண வாயு என்பது வேறு: ‘பிராணன்’ என்பது வேறு)

அமரும் முறை

4  ஆசனங்களில் பரிச்சயம் உள்ளவர்கள் பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து செய்யலாம்.

4  மற்றவர்கள் கால்களை மடக்கி, சம்மணமிட்டு அமர்ந்து செய்யவும்.

4  மாணவர்கள் படிக்கத் துவங்கும்முன் நாற்காலியில் அமர்ந்தபடியே இந்த முத்திரையைச் செய்யலாம்.

4  தலை, கழுத்து, முதுகு ஆகியவை வளைவின்றி நேராக இருக்க வேண்டும்.

4  இரு கைகளிலும், ஒரே நேரத்தில் செய்யவும்.

சுவாசம் –

4  சுவாசம் இயல்பான நடையில் இருக்கட்டும்.

4  சீராகவும் ஆழமாகவும் இருப்பது அவசியம்.

4  மூச்சை அடக்குதல் (கும்பகம்) கூடாது.

செய்முறை

4  சிறுவிரல், மோதிர விரல் ஆகியவற்றின் நுனிப் பகுதியால் பெருவிரலின் நுனிப்பாகத்தைத் தொடவும்.

4  அதிக அழுத்தம் வேண்டாம். சற்றே தொட்டுக்கொண்டிருந்தால் போதும்.

4  பிற இரு விரல்களும் (சுட்டுவிரல், நடுவிரல்) வளைவின்றி நேராக இருக்கட்டும்.

எவ்வளவு நேரம்?

4  குறைந்த பட்சம் 8 முதல் 16 நிமிடங்கள் வரையில் செய்யலாம்.

4  சராசரியாக பள்ளி மாணவர்கள் காலையில் 16 நிமிடங்கள், மாலையில் 16 நிமிடங்கள் செய்யப் பழகிக்கொள்வது நல்லது.

4  கல்லூரி மாணவர்கள் காலையில் 24 நிமிடங்கள், மாலையில் 24 நிமிடங்கள் செய்யலாம்.

பலன்கள்

மூளையின் செல்களுக்கு பிராண சத்தியும், பிராண வாயுவும் அதிக அளவில் கிடைப்பதால்,மூளை சுறுசுறுப்பாகிறது. மூளையின் செல்களிலுள்ள சோர்வு மறைந்து, புத்துணர்ச்சியுடன் மூளை செயல்படத் துவங்கும்.

உடலிலுள்ள அனைத்து செல்களுக்குமே பிராண சத்தி அதிக அளவில் பாய்வதால் உடலில் உள்ள அசதி, சோர்வு, சோம்பேறித்தனம் ஆகியவை மறைந்து, உடலிலும் ஒரு புத்துணர்வு பல மடங்கு அதிகரிக்கும்.

உடலில் பிராண சத்தி அதிக அளவில் பாயும் போது நாடிகளில் உள்ள சக்தித் தடைகள் அகலும்.

இவை தவிர பிராண வாயுவுக்கு வேறு ஒரு மிக முக்கியமான பணியும் உண்டு.

ஆக்சிஜன் அதிகம் கிடைப்பதால் மூளையின் செல்கள் சுறுசுறுப்படைந்தாலும், இடது மூளையின் செயல்பாடுகளே அதிகரிக்கும்.

பிராண சுக்தி அதிக அளவில் செல்லும்போது தான் வலது மூளையின் பணிகளான, பேச்சுத்திறன், எழுத்துத்திறன், கற்பனைத் திறன் ஆகியவையும் அதிகரிக்கும்.

ஆக உங்களது குழந்தைகள் படிப்பில் முதன்மையாக வரவும், ஜீனியஸ்களாக அவர்கள் உருவாகவும் பிராண சக்தி மிக மிக அவசியம். பிராண முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் பிராணன் பெருகும். அறிவும் ஞானமும் படைப்புத் திறனும் ஊற்றெடுக்கும்.

பிராண முத்திரையைத் தொடர்ந்து செய்துவரும்போது மனம் ஒருமுகப்படுவது எளிதாகும். படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஒருமுகப்படுதல் (sleep therapy) மிகமிக அவசியமான ஒன்று.

நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தியும் பிராண முத்திரைக்கு உண்டு. படிப்பில் முதன்மையாக வர நினைவாற்றல் மிக மிக அவசியமல்லவா? பிராண முத்திரையைத் தொடர்ந்து செய்து உங்கள் குழந்தைகளின் நினைவாற்றலைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்யலாம்.
                                                                   (தொடரும்)