அறிமுகம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வாசிப்பை நேசிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் 2004- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிறிய கையடக்கப் பிரதியாக ‘VITAL FLOWER’ என்ற பெயரில் இம்மாத இதழானது தொடங்கப்பட்டது.
முதல் மூன்று மாதங்கள் இரண்டு வண்ணங்களாலான பக்கங்கள் கொண்ட தனிச் சுற்றுக்கான இதழாக ‘BLOSSOM CIRCLE’ என்ற மாணவர் இயக்கத் துணையோடு மாதம் ஐநூறு பிரதிகள் என்று வெளியிடப்பட்டது.
வாசகர்களின் வரவேற்பைப் பெற்றதால் ஏப்ரல் – 2004 முதல் பல கலரில் 36-பக்கங்கள் கொண்ட பதிவு செய்யப்பட்ட மாத இதழாகத் தொடர்ந்து வெளிவந்தது. 2008 – ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ‘ஆளுமைச் சிற்பி’ என்று தமிழில் புதிய பதிவினைப் பெற்ற இதழாக இன்றுவரை வெளிவந்து கொண்டு இருக்கின்றது.
ஐநூறு பிரதிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இம்மாத இதழ் இன்று ஒவ்வொரு மாதமும் பல லட்சம் வாசகர்கள் வாசிக்கும் தமிழகத்தின் அனைத்து நூலகங்களிலும், பல நூறு பள்ளிகள் மற்றும் ஆயிரக்கணக்கான கல்லுரிகளின் மாணவர்களுக்கும், ஆசிரியர்கள், பெற்றோர்கள், இளைஞர்களுக்கும் ஆளுமைப் பண்புகளை உரக்கச் சொல்லும் இதழாகப் பதினாறு ஆண்டுகளைக் கடந்து உங்களைப் போன்ற வாசிப்பை நேசிப்பவர்களால் ஆதரிக்கப்பட்டுப் பயணித்துக் கொண்டு இருக்கிறது.
ஆளுமைச் சிற்பி மாத இதழானது தற்போது அறுபது பக்கங்கள் கொண்ட இதழாக, பெரிய வடிவில் ‘வைட்டல் டிரஸ்ட்’ (VITAL TRUST) என்ற அறக்கட்டளையின் மூலம் நடத்தப் பட்டு வருகின்றது.
டாக்டர். மெ. ஞானசேகர் இவ்விதழின் நிறுவனர், கௌரவ இயக்குநர் மற்றும் ஆசிரியராகச் செயல்பட்டு வருகின்றார். தமிழகத்தின் தலைச்சிறந்த எழுத்தாளர்கள் இம்மாத இதழின் படைப்பளர்களாக எம்மோடு இணைந்து இந்த நற்பணியில் பங்கு பெறுகின்றார்கள்.
நோக்கம்

குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை ஆளுமைப் பண்புகளையும், சிந்தனைகளையும் பெற்றிடும் ஒரு கருவியாக ஆளுமைச் சிற்பி மாத இதழைப் பயன்படுத்துதல்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆளுமை வளர்ச்சிப் பாசறையைத் (Personality Development Cell – PDC) தொடங்கிச் சிறப்பாகச் செயல்பட வழிகாட்டுதல்.
பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள், மக்கள் நிறைந்த நகர்ப்புறங்களில் புத்தகம் வாசிப்போர் இயக்கத்தை (Book Readers Club – BRC) ஏற்படுத்தி வாசிக்கும் பழக்கத்தைச் சிறப்பான வாழ்விற்காக அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிடச் செய்தல்.
எமது வங்கி கணக்கு:
ஆளுமைச் சிற்பி சந்தா செலுத்த மற்றும் ஆளுமைச் சிற்பி
வெளியீடுகளைப் பெற!
| Account Name | AALUMAI SIRPI |
| Bank Name | Indian Bank |
| Branch Name | Rayapuram Branch |
| Account Numer | 792705043 |
| IFSC Code | IDIB000R022 |
| Branch Address | No.151, MannarasamyKoilstreet,Royapuram, Chennai – 600 013. |